சுந்தர் சி ரூ.600 கோடி சொத்துகளை மறைத்துவிட்டார்.. ஆதாரத்துடன் வழக்கறிஞர் பேட்டி!

சென்னை: மதுரை மத்திய தொகுதியில் அஇஅதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் சுந்தர் சி மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் ஏப்ரல் 4ந் தேதி, வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் 600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அவர் மறைத்துள்ளதாக வழக்கறிஞர் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் வாஞ்சிநாதன், மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி, தாக்கல் செய்த பார்ம் 26ஐ பரிசீலனை செய்த போது, கிட்டத்தட்ட 604 கோடி மதிப்பிலான வருமானங்களை சுந்தர் சி, குஷ்பு உடன் சேர்ந்து மறைத்து இருக்கிறார் என்ற விவரங்கள் தெரிய வந்துள்ளது. மதுரை சிவில் சமூகத்தின் பிரதிநிதி என்கிற முறையில் நேற்று உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் பல்வேறு விவரங்கள் நீதிமன்ற விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டன.

Vijay Sundar c Khushbu
Photo Credit:

சுந்தர் சி: அவற்றையெல்லாம் நாங்கள் ஆய்வு செய்து பார்த்த போது மதுரை வாக்காளர்களுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டும் என்கிற அடிப்படையில் இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடத்தப்படுகிறது. சுந்தர் சியும் குஷ்புவும் இணைந்து Avni Cinema Private Limited, Avni Movies, Avni Tele Media என மூன்று நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள். இந்த மூன்று நிறுவனங்களையும் அவர்கள் பதிவு செய்து நடத்தி வருகிறார்கள். இதில் "போர்ட் ஆஃப் டைரக்டர்" என்று குஷ்பூ, சுந்தர் சி யின் பெயர் இடம்பெற்றுள்ளது. இந்த மூன்று நிறுவனத்தின் இயக்குனர்களாகவும், பங்குதாரர்களாகவும் இவர்கள் இருக்கிறார்கள்.

மறைத்துள்ளார்கள்: சுந்தர் சி தாக்கல் செய்த வேட்பு மனுவில், எங்களிடம் எந்த கம்பெனியும் இல்லை என்று குறிப்பிட்டு உண்மையை மறைத்து இருக்கிறார்கள். சுந்தர் சி தான் அப்படி செய்தார் என்றார். அவரது மனைவி குஷ்பூ பாஜ.க சார்பில் 2021ஆம் ஆண்டு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார். அப்போது குஷ்பூ தாக்கல் செய்த வேட்புமனுவிலும் எங்களிடம் கம்பேனி இல்லை என்று குறிப்பிட்டு உண்மையை மறைத்திருக்கிறார். இந்த மூன்று நிறுவனங்களின் பெயர்களிலும் 22 படங்கள், பல சீரியல்களை எடுத்து இருக்கிறார்கள். அதன் மூலமாக 604 நான்கு கோடி ரூபாய் வருமானம் வந்து இருக்கிறது. இந்த வருமானத்திற்கு சுமார் 180 கோடி ரூபாயை இவர்கள் வரி கட்டி இருக்க வேண்டும். ஆனால் ஏமாற்றி மறைத்து இருக்கிறார்கள் என வழக்கறிஞர் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X