25 வருஷம் ஆகுது.. இதுவரைக்கும் சுந்தர்.சி அந்த வார்த்தையை சொன்னதில்லை.. குஷ்பு 'பளிச்' பேட்டி!
சென்னை: லாக்டவுன் சமயத்தில், வீடியோ கால் மூலமாகவே வி கனெக்ட் ஷோவில் பல பிரபலங்கள் பேட்டி அளித்து வருகின்றனர்.
Recommended Video
தற்போது, பிரபல நடிகை குஷ்பு அளித்துள்ள செம ஜாலியான பேட்டி வைரலாகி வருகிறது.
இந்த மூன்று மாத லாக்டவுனில் தனது உடல் எடையை அதிகளவில் குறைத்து, சூப்பர் ஸ்லிம்மான புகைப்படங்களை சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியிட்டு, இவர் குஷ்புவா? அல்லது ஹன்சிகாவா? என அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தார்.

குஷ்பு இட்லி குறித்த கேள்விக்கு, தனக்கு இட்லியே பிடிக்காது, நெய் ரோஸ்ட் தான் பிடிக்கும் என்றும் மட்டன் பிரியாணி பிடிக்கும் என்ற ரகசியத்தை மனம் திறந்து கூறியுள்ளார்.
நடிகைகளுக்கு கோயில் கட்டுவது தன்னை பொறுத்தவரையிலும், தேவையற்ற செயல் என்றும், அந்த பணத்தில், நல்ல காரியங்களை செய்யலாமே என்றும் குஷ்பு தனது பேட்டியில் கூறியுள்ளார்.
கட்டுனா இப்படி ஒரு பெண்ணைத் தான் கட்ட வேண்டும், என தியேட்டரில் குஷ்புவின் படத்தை பார்த்துவிட்டு, தனது நண்பனிடம் கூறிய சுந்தர்.சி, பிற்காலத்தில் குஷ்புவுக்கே கணவனாக மாறியதை, அவரது நண்பர் கிண்டல் செய்து இருந்த சுவாரஸ்ய தகவலையும் பகிர்ந்து கொண்டார்.
இந்த லாக்டவுனில் வீட்டில் வேலைக்காரர்கள் இல்லாததால், சமைப்பது, வீட்டை சுத்தம் செய்வது, உடல் பயிற்சி செய்வது என வீட்டு வேலைகள் அனைத்தையும் பார்ப்பதால் தான் இந்த அளவுக்கு ஸ்லிம்மாகவும், அழகாகவும் மாறி உள்ளேன் என நடிகை குஷ்பு தனது சீக்ரெட்டையும் சொல்லி உள்ளார்.
திருமணம் ஆகி 25 வருடங்கள் ஆன நிலையில், இதுவரை சுந்தர்.சி தன்னிடம் 'ஐ லவ் யூ' என்ற வார்த்தையையே சொன்னதில்லை என்பதையும் வெட்கப்பட்டுக் கொண்டே அவ்ளோ அழகாக குஷ்பு பேசும் வீடியோவை பார்த்து மகிழுங்கள்!


Click it and Unblock the Notifications











