விஜய் பெரிய சூப்பர் ஸ்டார்.. அவரை பத்தி தப்பா பேசமாட்டேன்.. ரங்கராஜ் பாண்டேவை திணறடித்த சுந்தர். சி!

சென்னை: விஜய்க்கு எதிரான கருத்துக்களை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என பல மீடியாக்கள் காத்துக் கிடக்கும் நிலையில், ரங்கராஜ் பாண்டே சமீபத்தில் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் விஜய் கூட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் வெற்றிப் பெற மாட்டார் என கணிப்புகளை தவெகவுக்கு எதிராகவே வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், சுந்தர். சியை பேட்டி எடுத்த ரங்கராஜ் பாண்டே எப்படியாவது விஜய்க்கு எதிராக சுந்தர். சியிடம் இருந்து ஒரு வார்த்தையை பிடுங்கி விட வேண்டும் என நினைத்து தொடர்ந்து கேள்விகளாக கேட்டு வந்தாலும், இயக்குநர் சுந்தர். சி ஒரு வார்த்தை கூட தவறாக விஜய் பற்றி பேசமாட்டேன் எனக் கூறியுள்ளார்.

Sundar C refused to talk against Vijay after Rangaraj Pandey pushing him with several questions too

அந்த வீடியோவை தற்போது தவெகவினர் எடுத்து அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

குஷ்பு, சுந்தர். சி நிலைப்பாடு: விஜய்க்கு எதிராக அரசியல் செய்ய வேண்டிய நிலையில் உள்ள குஷ்பு மற்றும் சுந்தர். சி இருவரும் விஜய்யை பற்றி தவறாக எதுவுமே பேச மாட்டோம் என்பதில் ரொம்பவே கவனமாக உள்ளனர். அதை வெளிப்படையாகவும் சொல்லிவிட்டனர். விஜய்யை குஷ்பு தம்பி போல பார்க்கிறார் என்றும் அவரும் குஷ்புவை அக்கா போல பார்ப்பதால் நாங்க விஜய்க்கு எதிராக பேச மாட்டோம் என சுந்தர். சி ஏற்கனவே கூறியிருந்தார்.

வாயை பிடுங்கிய ரங்கராஜ் பாண்டே: ஆனாலும், ரங்கராஜ் பாண்டே எப்படியாவது சுந்தர். சியின் வாயை பிடுங்கி விட வேண்டும் என ஏகப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டார். அதிமுகவை விஜய் ஒரு பொருட்டாகவே எண்னவில்லை என்றும் அதிமுக ஒரு போட்டியே இல்லை என்றெல்லாம் விஜய் சொல்கிறார். அதற்கு உங்கள் பதில் என்ன என்று கேட்ட நிலையிலும், சுந்தர். சி விஜய்க்கு எதிராக ஒரு வார்த்தை பேச மாட்டேன் என்று கூறிவிட்டார்.

உள்குத்து கூட்டணி: விஜய்க்கும் உங்களுக்கும் என்ன ஏதாவது உள்குத்து கூட்டணி உள்ளதா? என்றே ரங்கரான் பாண்டே கேள்வி எழுப்பிய நிலையிலும், சுந்தர். சி சிரித்துக் கொண்டே விஜய் ஒரு சூப்பர் ஸ்டார், ஒரு கட்சியின் தலைவர். நான் வெறும் ஒரு இடத்தில் எம்எல்ஏவாக போட்டியிடுபவன் மட்டுமே என விஜய்க்கு செம ஹைப் கொடுத்து பேசி ரங்கராஜ் பாண்டேவை ஆஃப் செய்துவிட்டார். ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பை சுந்தர் சி மிஸ் செய்த நிலையில் தான் விஜய்யை அவர் சூப்பர் ஸ்டார் என சொல்லிவிட்டார் என்றும் சர்ச்சைகள் கிளம்பி உள்ளன.

ஆதரவும் எதிர்ப்பும்: தமிழ் சினிமாவும் அரசியலும் ஒன்றோடு ஒன்று கலந்திருக்கும் நிலையில், திமுகவுக்கு ஆதரவாக பல பிரபலங்கள் விஜய்க்கு எதிராக அரசியல் பேசி வருகின்றனர். விஜய்யுடன் இணைந்து நடித்த சத்யராஜ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் விஜய்க்கு எதிராக கடுமையாக பேசி வருகின்றனர். சமீபத்தில், நாசர் விஜய்க்கு எதிராக பேசியதை எல்லாம் விஜய் ரசிகர்களால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அதே நேரத்தில் சத்யராஜின் மகன் சிபிராஜ் விஜய்க்கு ஆதரவாக பேசி வருகிறார். நடிகர் ஜெய், பிளாக் பாண்டி உள்ளிட்ட சில பிரபலங்கள் விஜய்க்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X