தித்யா ஆடிய லக்ஷ்மி படத்தின் பாடல் பல குழந்தைகளுக்கு ஸ்பெஷல்...5,6,7,8 என்று அடுத்த ஆட்டம் ரெடி
சென்னை: சின்ன சின்னக் குழந்தைகள் என்னைப் பார்த்து நடனமாடுவதை பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என 'லஷ்மி' திரைப்பட குழந்தை நட்சத்திரம் தித்யா பாண்டே தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழில் நிறைய வார்த்தைகள் கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.துறுதுறு என்று இயங்க கூடிய தித்யா சிரித்த முகத்துடன் நம்முடன் பல விஷயங்கள் பகிர்ந்தார
2018-ம் ஆண்டு ஏ.எல். விஜய் இயக்கி வெளிவந்த லஷ்மி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகம். இந்தித் தொலைக்காட்சி நிகழ்ச்சியான சூப்பர் டான்ஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற தித்யா பாண்டே நமது பிலிம்பீட் வினோத்திற்கு அளித்த ஸ்பெஷல் பேட்டியை இங்கு காணலாம்.

மிகுந்த மகிழ்ச்சி
கேள்வி: லஷ்மி திரைப்படத்தில் உங்களின் நடனம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதைப் பற்றி தங்களின் கருத்து?
பதில்: லஷ்மி திரைப்படத்தில் நடித்ததற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அப்படத்திற்குப் பிறகு சின்னச் சின்னக் குழந்தைகள் என்னைப் போல் நடனமாடுவதைப் பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

குறும்படம் பண்ணியிருக்கிறேன்
கேள்வி: நீங்கள் தற்போது நிறைய நடனம் தொடர்பான திரைப்படங்களில் நடிப்பது பற்றி உங்கள் கருத்து....
பதில்: நான் இப்ப ஒரு குறும்படம் பண்ணியிருக்கிறேன். மேலும் நான் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்கள் எதுவாக இருந்தாலும் அதை சிறப்பாக செய்ய விரும்புகிறேன். அது நடனம் தொடர்பானதாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் சரி, நான் என் வேலையை சிறப்பாக செய்வேன் என்றார்;.

சுவாரசியமான படம்
கேள்வி: Five, Six, Seven, Eight - திரைப்படம் குறித்து நீங்கள் கூற விரும்புவது?
பதில்: படத்தின் தலைப்பு நடனத்தை மையமாக வைத்து அமைத்துள்ளார்கள். அதாவது நடனமாட ஆரம்பிக்கிற போது கவுண்டிங் சொல்லித்தான் ஆரம்பிப்பாங்க. அதனால் தான் இந்தப் படத்திற்கு Five, Six, Seven, Eight எனும் தலைப்பை வைத்துள்ளார்;கள். இப்படம் முழுக்க முழுக்க நடனம் தொடர்பான சுவாரசியமான படம் என தெரிவித்தார். இப்படத்தில் சிம்பா பாடல் ரொம்ப நல்லா வந்திருக்கு. ரசிகர்களுக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் என்றார்.
ரொம்ப சந்தோஷமாக இருக்கு
கேள்வி: நீங்கள் தற்போது தமிழ் வார்த்தைகள் எவ்வளவு கற்றுக்கொண்டீர்கள்?
பதில்: தமிழில் நிறைய வார்த்தைகள் பேசக் கற்று கொண்டதாக கூறிய தித்யா பாண்டே 'எல்லோருக்கும் வணக்கம்', 'நன்றி', 'ரொம்ப சந்தோஷமாக இருக்கு'என தமிழில் பேசினார்.இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://www.youtube.com/watch?v=tjDJ669EnTA இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். பில்மிபீட் ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் வினோத் மற்றும் தித்யா பாண்டே இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.


Click it and Unblock the Notifications











