நான் சின்ன பொண்ணு.. வயசு 19 தான் ஆகுது.. பாடகி சிவாங்கி
சென்னை : விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தனது வசீகர குரலால் பிரபலபான, சிவாங்கி தனக்கு இப்பொழுது தான் 19 வயசு ஆகுது நான் ரொம்ப சின்ன பொண்ணு என்று கூறியுள்ளார்.
சிவாங்கியை நாம் தொலைக்காட்சியில் பார்த்து இருப்போம். முதலில் சூப்பர் சிங்கரில் இவ்வளவு அழகான குரலா என்று பிரமிக்க வைத்தவர் பின்பு சூப்பர் சிங்கரிலே பல அட்டகாசங்கள் செய்து நம்மையும் நடுவர்களையும் கதிகலங்க வைத்தவர். மீண்டும் அதே தொலைக்காட்சியிலே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து நம்மை சிரிக்க வைத்து வருகிறார் .

சிவாங்கிக்கு அடையாளம் என்றால் அவரது குரல் தான். அவர் சாதாரணமாக பேசும் போது அவருக்கும் அவர் வயதிற்கும் சம்மந்தம் இல்லாத குரல் போல இருக்கும் அதை பார்த்து அவருக்கு பெரிய வயது பெண் என பலரும் நினைத்து வந்தனர். தற்போது அவர் எனக்கு வெரும் 19வயது தான் ஆகிறது என்று கூறியுள்ளார். மேலும் அவர் தற்போது தான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறாராம் .

சிவாங்கி பேசும் போது வேண்டுமானால் குரல் கடுமையாக இருக்கலாம் ஆனால் அவர் பாடும் போது அவரின் குரலில் யாரும் குறை கூற முடியாது அந்த அளவிற்கு நேர்த்தியான குரல் வளம் கொண்டவர் சிவாங்கி.

சூப்பர் சிங்கரின் போது சிவாங்கி பாடிய ஒரு பாடலுக்கு சங்கர் மகாதேவன் நடுவர் சீட்டில் இருந்து இறங்கி வந்து மேடையில் சிவாங்கியை பாராட்டினர். இது அந்த நேரத்தில் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது. மேலும் பாடகி சித்ரா சிவாங்கியின் குரலை தவிர வேறு என்ன பெரிய வரம் வேண்டும் என்று சிவாங்கியின் பெற்றோரிடம் கூறியிருக்கிறார். இது இரண்டும் என்னால் சூப்பர் சிங்கர் நிகழ்வுகளில் மறக்கமுடியாத ஒன்று எனக்கூறினார் .

மேலும் குரல் வளம் மிக்க பலர் சினிமாவில் சாதித்து இருக்கிறார்கள் அவர்கள் போல் சினிமாவில் சிவாங்கி நுழைவாரா என்ற கேள்விக்கு இல்லை எனக்கு இப்போதைக்கு சினிமாவுல ஆர்வம் இல்லை என்று தெரிவித்தார் .அப்படி சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் ஒரு விஜயின் தங்கை , அஜித்தின் மகள் அப்படி தான் சினிமாவில் நடிப்பேன் என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











