கூலி படத்தில் ரஜினியே இல்ல.. எல்லாமே டூப்.. விளாசிய பிரபலம்!

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'கூலி' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று தியேட்டரில் வெளியாகியுள்ளது. நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் பாலிவுட் ஸ்டார் அமீர்கான் நடித்துள்ளனார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படம் குறித்து Kingwoods TV யூடியூப் சேனலுக்கு நந்தவனம் நந்தக்குமார் பேசி உள்ளார். இதில், ரஜினி பல வருடத்திற்கு முன்பு 16 வயது திரைப்படத்தில் பரட்டை கேட்கிற ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து பல ஆண்டுகள் கழித்து கூலி படத்தில் ஒரு நெகட்டிவாக நடித்திருக்கிறார். இரண்டாவது கதாநாயகனாக நாகார்ஜுனன் நடித்திருக்கிறார். ஸ்ருதிஹாசனை சுற்றி தான் படத்தின் கதையை நகர்கிறது. சங்கர் இயக்கிய எந்திரன் திரைப்படத்தில் சிட்டி என்ற கதாபாத்திரத்தில் ஒரு நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு கூலி படத்தில் ரஜினிகாந்த் மிரட்டலாக நடித்திருக்கிறார்கள் என்கிறார். ஆனால், கூலி படத்தின் பல காட்சிகளில் ரஜினி நடிக்கவே இல்லை, சும்மா வந்து செல்கிறார். அதுவும் சண்டை காட்சியில் டூப் போட்டுத்தான் எடுத்து இருக்கிறார்கள். இதில் எப்படி ரஜினி மிரட்டி விட்டார் என்று சொல்ல முடியும். ஒரு காட்சியில் முகம் தெரிந்துவிட்டால், ரசிகர்கள் கொந்தளித்து விடுவார்கள்.

coolie Nandhavanam Nandhakumar interview
Photo Credit:

கூலி: கூலி படத்தில் கதையே இல்லை லோகேஷ் கனகராஜின் மாநகரம், கைதி திரைப்படங்கள் நல்ல கதை அம்சத்தை கொண்ட திரைப்படங்களாக இருக்கும். ஆனால், அதன் பிறகு வந்த எந்த திரைப்படத்தின் கதையும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு கதை இல்லை. விக்ரம் படத்தின் வெற்றிக்கு காரணம், ரெட் ஜெயண்ட் தயாரிப்பு நிறுவனம் என்பதால் படம் வெற்றி பெற்றுவிட்டது. அதுமட்டுமில்லாமல், கமலுக்கு சினிமாவில் எதிர்காலம் முடிந்துவிட்டது, கமல் ஏழையாகிவிட்டார் என கருத்து பரவியதால், அந்த படத்தை ரசிகர்கள் வெற்றி பெறவைத்தார்கள் மற்றபடி கூலி படத்தில் எதுவும் இல்லை, அதுவும் இல்லாமல் லோகேஷ் கனகராஜ் சொல்வது போல படம் ஆயிரம் கோடி எல்லாம் எடுக்காது என்று இயக்குநர் நந்தவனம் நந்தகுமார் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Read more about: கூலி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X