கிரிக்கெட்டை ரசிப்பதெல்லாம் தேசப்பற்றாகிவிட முடியாது!- கமல் ஹாஸன்

By Shankar

மும்பை: கிரிக்கெட்டை ரசிப்பதை, அல்லது இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற வேண்டும் என விரும்புவதை தேசப்பற்று என்று சொல்லக் கூடாது என்று நடிகர் கமல் ஹாஸன் கூறினார்.

மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் கமல் ஹாஸன்.

கேள்வி 1

கேள்வி 1

தேசப்பற்று படங்களில் நடிக்க முக்கியத்துவம் அளிக்கிறீர்களே? ஏன்?

தேசப் பற்று என்ற வார்த்தையை சரியாக பயன்படுத்தாவிட்டால் ஆபத்தாகி விடும். கிரிக்கெட் மீதான ஈடுபாடு தேசப்பற்று ஆகிவிடாது. இந்திய அணி ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பது தேசப்பற்றாகிவிடுமா?

நான் காந்தியின் ரசிகன். ஆனால் அவரை மகாத்மா என்று அழைத்து தலைக்கு பின்னால் ஒளிவட்டம் இருப்பது போல் சித்தரிப்பதை விரும்பவில்லை. சராசரி மனிதராக இருந்து சாதித்தவர் காந்தி. சாமியாராக, முனிவராக பார்க்க கூடாது.

சாதாரண மனிதராக இருந்து அர்ப்பணிப்பு உணர்வோடு தேசத்துக்காக பாடுபட்டார். ஹேராம் படத்தை அதற்காகத்தான் எடுத்தேன்.

கேள்வி 2

கேள்வி 2

விஸ்வரூபம் படப்பிடிப்பின் லொகேஷன்களுக்கு சிரமப்பட்டீர்களா?

உண்மாதான். படப்பிடிப்பு லொக்கேஷன்களுக்காக நிறைய ஆராய்ச்சி செய்தோம். ஆப்கானிஸ்தானில் படப்பிடிப்பை நடத்த முயன்றோம். ஆனால் அதில் பல சங்கடங்கள் இருந்ததால் தனிப்பட்ட முறையில் என்னால் போக முடியவில்லை. ஆப்கானிஸ்தான் ஜலாலா பாத்தின் 4 ஆயிரம் புகைப்படங்களை பார்த்தேன் அதன் பிறகு படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

கேள்வி 3

கேள்வி 3

விஸ்வரூபம் 2 படம் எப்படி இருக்கும்?

ப: விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சியாகவோ அல்லது முற்பகுதியாகவோ விஸ்வரூபம் இரண்டாம் பாகம் எடுக்கப்படவில்லை. ஆனால் முந்தைய படத்தின் உணர்வு தெரியும்.

கேள்வி 4

கேள்வி 4

நேரடி இந்திப் படம் பண்ணும் திட்டமிருக்கிறதா?

சில கதைகள் இருக்கின்றன. தயாரிப்பாளர் தேடுகிறேன்.

கேள்வி 5

கேள்வி 5

உங்களுடன் நடிக்க ஆர்வமாக உள்ளதாக ஸ்ருதி கூறியிருந்தாரே?

ஸ்ருதி ஹாசன் பிசியான நடிகை இப்போது. அது பெருமையாகத்தான் இருக்கிறது. நேரம் அமைந்தால் இணைந்து நடிப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X