விஜய்சேதுபதி மகனுக்கு வீட்டிலேயே இப்படியொரு பிரச்சனையா?.. பீனிக்ஸ் வீழானை வெளுத்து வாங்குறாங்களே!

சென்னை: விஜய்சேதுபதி தொகுப்பாளராக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசி வருவது எல்லாமே ரசிகர்களை ரசிக்க வைக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் அடிக்கும் பன்ச் மற்றும் போட்டியாளர்களை வார்த்தை விளையாட்டால் மடக்கும் விதம் என அனைத்துமே சூப்பராக உள்ளது.

ஆனால், விஜய் சேதுபதியின் மகன் எதார்த்தமாக பேசும் அத்தனை விஷயங்களும் அவருக்கு எதிரான கன்டென்ட்டாக மாறி ட்ரோல்களுக்கு ஆளாகி வருவதாக அவரே சமீபத்திய பேட்டியில் புலம்பித் தள்ளியிருக்கிறார்.

vijay sethupathi phoenix

சூர்யா மட்டும் தான் என்றும் சூர்யா சேதுபதி என அப்பாவின் பெயரைக் கூட பயன்படுத்த மாட்டேன் என சொன்னதில் இருந்து சூர்யாவின் கங்குவா படத்துக்குப் போட்டியாக தனது பீனிக்ஸ் வீழான் படத்தை ரிலீஸ் செய்யப் போவது வரை ஏகப்பட்ட சிக்கலில் சிக்கித் தவித்து வருகிறார் சூர்யா சேதுபதி.

அப்பா வேற.. நான் வேற: விஜய்சேதுபதி நடித்த சிந்துபாத் படத்தில் அவருடன் இணைந்து நடித்து சினிமாவில் அறிமுகமானவர் தான் சூர்யா சேதுபதி. தற்போது ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா சேதுபதி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள பீனிக்ஸ் வீழான் திரைப்படம் வரும் நவம்பர் 14ம் தேதி திரைக்கு வருகிறது. அப்பா வேற... நான் வேற.. என சூர்யா பேசியது ஏகப்பட்ட ட்ரோல்களை அவருக்கு பெற்றுத் தந்தது. அதன் பின்னர், தனது படத்தின் டீசர் வெளியீட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அப்பா விஜய் சேதுபதியை வரவழைத்து இருந்தார் சூர்யா சேதுபதி.

வீட்டிலேயே கலாய்க்கிறாங்க: அப்பா வேற.. நான் வேறன்னு சொன்னதை வைத்து சோஷியல் மீடியாவில் தான் ட்ரோல் பண்றாங்கன்னு பார்த்தால். எங்க வீட்டுல அதுக்கு மேல என்ன வச்சு செஞ்சிட்டாங்க.. அப்பா வேற.. நான் வேறன்னு எதுக்கு எடுத்தாலும், என்ன கேட்டாலும் சொல்லி கலாய்க்க ஆரம்பித்து விட்டனர். அந்த விஷயத்தையும் என் குடும்பத்தினர் ஜாலியாக எடுத்துக் கொண்டது ஆரம்பத்தில் குவிந்த ட்ரோல்களை பார்த்து பட்ட மனக் கஷ்டத்தை காணாமல் போக செய்து விட்டது என சூர்யா சேதுபதி கூறியுள்ளார்.

கங்குவாவுடன் கிளாஷ்: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி நடித்துள்ள கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வெளியாகிறது. ஹீரோவாக அறிமுகமாகியுள்ள சூர்யா சேதுபதியும் தனது படத்தை அதே தினத்தில் வெளியிடுகிறார். இரண்டு சூர்யா படங்கள் ஒரே நாளில் வெளியாகும் நிலையில், தியேட்டரில் குழப்பம் எழாமல் இருந்தால் சரிதான் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X