உலகம் முழுவதும் அசிங்கம்.. இந்தியன் 2வுக்கு பிறகு அதிக ட்ரோலான படம்.. கங்குவா குறித்து பிஸ்மி!

சென்னை: கங்குவா திரைப்படம் இத்தனை பெரிய மோசமான விமர்சனங்களை அடைய முக்கிய காரணமே அந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படத்தைப் பற்றி பேசாமல் அவர்கள் போட்ட உழைப்பை பற்றி பேசாமல் படம் இத்தனை கோடி கலெக்ஷன் அள்ளும். பாலிவுட்டில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும். உலகளவில் 2000 கோடி வசூலை வாரி குவிக்கும் என்றெல்லாம் பேசியதுதான் தற்போது கங்குவா படத்தை பலரும் இப்படி தாக்கும் அளவுக்கு கொண்டு சென்றது என பிஸ்மி ரோஸ்ட் செய்துள்ளார்.

சிறுத்தை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சிவா நடிகர் அஜித் குமாரை வைத்து வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என நான்கு படங்களை இயக்கியுள்ளார். ரஜினிகாந்தை வைத்து அண்ணாத்த படத்தை அவர் இயக்கிய பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காது என எதிர்பார்க்கப்பட்டது.

kanguva bismi suriya


ஆனால், நடிகர் சூர்யா வாடிவாசல் படத்தை ஆரம்பிக்காமல் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தை பெரும் நம்பிக்கையுடன் ஆரம்பித்தார். அப்பவே ரசிகர்கள் இவர் வேண்டாம் அண்ணே எனக் கூறி வந்த நிலையில், கடைசியில் ரசிகர்கள் பயந்தது போலவே கங்குவா திரைப்படம் குப்பை படமாக வெளியாகி இருக்கிறது என பிஸ்மி பந்தாடியுள்ளார்.

மதன் கார்க்கி 100 தடவை பார்த்தாரா?: கங்குவா படத்தை முதல் தடவை பார்த்தாலே காது ஜவ்வு கிழிந்து விடுகிறது. இந்த படத்தை மதன் கார்க்கி எப்படி 100 தடவை பார்த்தார் என்கிற கேள்வி தான் எழுகிறது. ஒரு தடவை கூட படத்தை பார்த்துவிட்டு கரெக்‌ஷன் சொல்லவில்லையா? ரசிகர்கள் சொன்னதும் 2 பாயிண்ட் வால்யூமை குறைக்க சொல்றாங்க, படத்தை இவர்கள் எத்தனை முறை பார்த்து இருப்பார்கள் ஒருவருக்கு சினிமா ஞானம் இல்லையா? இல்லை ரசிகர்களை ஏமாற்ற செய்த செயலா? என்றும் கேட்டுள்ளார்.

உலகம் முழுவதும் அசிங்கம்: சிங்கம் படத்தில் நடித்து மாஸ் காட்டிய சூர்யா ஹரி டைரக்‌ஷனில் அருவா படத்தில் நடிக்க மாட்டேன் என்றும் பாலா இயக்கத்தில் நடித்து வந்த வணங்கான் படத்திலிருந்தும் விலகினார். சுதா கொங்கரா இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட புறநானூறு படத்திலிருந்தும் விலகினார். இப்படி பல நல்ல இயக்குநர்களை நீக்கிவிட்டு கடைசியில் அவர் நடித்து வெளியான கங்குவா படம் இப்படி இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து இடங்களில் படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய அடிவாங்கி உள்ளது. மேலும், உலகம் முழுவதும் தமிழ் சினிமாவுக்கு அசிங்கத்தை தான் இந்த படம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது என பிஸ்மி வெளுத்து வாங்கியுள்ளார்.

ஹீரோக்கள் திருந்துவார்களா?: பிரம்மாண்ட படங்களை எடுத்து விட்டால் பான் இந்தியா நடிகராக மாறிவிடலாம் என நினைப்பதை முதலில் ஹீரோக்கள் மாற்ற வேண்டும். நல்ல கதை தான் முதலில் முக்கியம். கதையே இல்லாமல் பிஜிஎம்மை போட்டும் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்டியும் சண்டைக் காட்சிகளை வைத்தும் படம் இயக்கினால் அதன் ரிசல்ட் இப்படித்தான் இருக்கும் என்பதை இனியாவது ஹீரோக்கள் புரிந்துகொண்டு திருந்த வேண்டும் என பிஸ்மி அட்வைஸ் கொடுத்துள்ளார். இந்தியன் 2 படத்தை டிஸ்சார்ஜ் செய்து விட்டு ரசிகர்கள் தற்போது கங்குவா படத்தை அட்மிட் செய்து அடி பொளந்து வருகின்றனர். அடுத்து எந்த படம் சிக்கப் போகிறதோ பார்ப்போம் என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X