ஸ்டூடியோவில் வைத்து அத்துமீறிய இசையமைப்பாளர்.. பாடகி ஸ்வாகதா பகிர்ந்த வேதனை.. யார் அந்த கொடூரன்?
சென்னை: பாடகி ஸ்வாகதா தமிழ் திரையுலகில் மிகவும் அறியப்பட்ட பாடகி மற்றும் இசைக் கலைஞர். இவர் பிக்பாஸ் புகழ் மாயாவின் உடன் பிறந்த சகோதரி. இவர் அண்மையில் அளித்துள்ள பேட்டி பலருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் உள்ளது.
பாடகி ஸ்வாகதா அண்மையில் சிவரஞ்சனி டாக்ஸ் என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த நீண்ட பேட்டி ஒன்றில் தன்னை ஒரு இசையமைப்பாளர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார். என்றும் அதில் இருந்து மீண்டு வர தனது குடும்பத்தினர் தான் உதவினர் என்றும் தெரிவித்துள்ளார்.
அவர் அந்த பேட்டியில், " நான் அந்த இசையமைப்பாளரிடம் சில ஆண்டுகள் இசைக் கலைஞராக பணியாற்றி வந்தேன். அவர் என்னிடத்தில் நன்றாகத்தான் பழகினார். என்னிடத்தில் இருந்து அவ்வப்போது செலவுக்கு பணம் வாங்கினார். இப்படி என்னிடத்தில் லட்சக்கணக்கில் வாங்கி விட்டார்.
ஒருமுறை என்னிடத்தில் அவரது ஸ்டூடியோவில் அத்துமீறி நடந்து கொண்டார். 7 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இந்த சம்பவத்தின் போது நான் மிகவும் சின்ன பெண். அந்த இசையமைப்பாளர் மிகவும் பெரிய ஆள். நான் காவல்துறையில் சென்று புகார் சொன்னாலும் எதுவும் எடுபடாது. சில நாட்கள் பேசிவிட்டு நகர்ந்து விடுவார்கள்.

பிளாக் மெயில்: ஸ்டூடியோவில் வைத்து அத்து மீறியது தொடர்பான சிசிடிவி வீடியோவைக் காட்டியும் என்னை பிளாக் மெயில் செய்தார். நான் இந்த வீடியோவை ரிலீஸ் செய்தால் உன்னுடைய மானம் தான் போகும். எனக்கு எந்த பயமும் இல்லை, நான் காவல்துறைக்கு போகிறேன் என்று கூறினேன். அதன் பின்னர் எனது காலில் எல்லாம் விழுந்து மன்னிப்பு கேட்டார். எனது வீட்டிற்கே வந்து எனது காலில் விழுந்தார். எனது சகோதரி மாயா மற்றும் மாயாவின் தோழிகள் கண் முன்னே தான் எனது காலில் விழுந்தார்.
சட்டப்படி நடவடிக்கை: நான் அவரது மியூசிக் கார்டுகளை திருடி விட்டேன், எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று கூறி மற்றவர்களைச் சமாளித்தார். எனது பெற்றோர்களுக்கு இந்த விஷயம் எல்லாம் தெரியும், இதைச் சொன்னதும் அவர்கள் பயந்து, எனக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து, மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துவிட்டனர். எனது சகோதரி மாயா தான் என்னை தமிழ்நாட்டில் இருந்து ரிஷிகேஷிக்கு அனுப்பி வைத்தார். நான் முறையாக சட்டப்படி அந்த இசையமைப்பாளரை அம்பலப்படுத்துவேன்" என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இவரது இந்த பேட்டியைப் பார்த்த ரசிகர்கள் பலரும் யார் அந்த காம கொடூரன் இசையமைப்பாளர் என்று கேட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications