இசையமைப்பாளர் தொட்ட இடத்தில் எல்லாம்.. அழுது கொண்டே வேதனையைக் கொட்டிய பிக்பாஸ் மாயாவின் சகோதரி

சென்னை: பாடகி ஸ்வாகதா தமிழ் திரையுலகில் மிகவும் அறியப்பட்ட பாடகி மற்றும் இசைக் கலைஞர். இவர் பிக்பாஸ் புகழ் மாயாவின் உடன் பிறந்த சகோதரி. இவர் அண்மையில் அளித்துள்ள பேட்டி பலருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் உள்ளது.

பாடகி ஸ்வாகதா அண்மையில் சிவரஞ்சனி டாக்ஸ் என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த நீண்ட பேட்டி ஒன்றில் தன்னை ஒரு இசையமைப்பாளர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார். என்றும் அதில் இருந்து மீண்டு வர தனது குடும்பத்தினர் தான் உதவினர் என்றும் தெரிவித்துள்ளார்.

அவர் அந்த பேட்டியில், " அவர் பெரிய இசையமைப்பாளர், ஆனால் ஒழுங்காக பியானோ கூட கையாளத் தெரியாது. விருது கொடுப்பவர்கள் எப்படி இப்படிப்பட்ட நபர்களுக்கு எல்லாம் விருது கொடுக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

என்னிடத்தில் அந்த இசையமைப்பாளர் அத்துமீறி நடந்து கொண்ட பின்னர், நான் அந்த கொடூரன் என்னைத் தொட்ட இடத்தில் இருக்கும் தோல் உரிந்து, புதுத் தோல் வரும்படியான சிகிச்சையை மேற்கொண்டேன். எனது மொபைலில் கூட அந்த இசையமைப்பாளரின் பெயர் வரக் கூடாது என்பது போல செட்டிங்ஸ் அமைத்து வைத்துள்ளேன்.

Swagatha S Krishnan Shares Shocking Abuse Allegations Against Music Composer Emotional Interview

தைரியம்: இன்றைக்கு நான் அந்த பயம், மன உளைச்சல் என எல்லாவற்றிலிருந்தும் வெளியே வந்துவிட்டேன். ஆனால் இப்போது நான் தைரியமான பெண்ணாக இருக்கிறேன். நான் அந்த இசையமைப்பாளரின் பெயரைச் சொல்லாமல் விஷயத்தை சொல்லி உள்ளதால், அந்த இசையமைப்பாளர் என்னை ஏதாவது செய்ய முயற்சிக்கலாம், பெரிதாக என்ன செய்துவிட முடியும் என்ற தைரியம் தற்போது உள்ளது.

பல பெண்களிடம்: என்னிடத்தில் மட்டும் இல்லாமல் வேறு சில பெண்களுடனும் அந்த கொடூரன் இப்படித்தான் நடந்து கொண்டுள்ளார். நான் சில பெண்களுக்கு அந்த பாதிப்பில் இருந்து வெளியே வர உதவி செய்துள்ளேன். இது அந்த இசையமைப்பாளரின் மனைவிக்கும் தெரியும், தெரிந்து கொண்ட பின்னரும் அந்த இசையமைப்பாளருடன் தான் அவர் வாழ்ந்து வருகிறார்.

மோசமான இசையமைப்பாளர்: சமீபத்தில் வெளியானது அல்லவா எப்ஸ்டீன் ஃபைல்ஸ், அதை விட மோசமானவன் இந்த இசையமைப்பாளர், சின்னக் குழந்தைகள் பாட வருவார்கள், அவர்களை சிசிடிவி கேமராவில் பார்த்துக் கொண்டு இருப்பான். மிகவும் மோசமானவர். நான் சீக்கிரமே ஆதாரத்துடன் அந்த இசையமைப்பாளர் யார் என்று கூறுவேன். சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். எனக்கு இப்போது அந்த தைரியம் வந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டிக்குப் பின்னர் பலரும் அந்த இசையமைப்பாளர் யாராக இருக்கும், அவராக இருக்குமோ, இவராக இருக்குமோ என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் சிலரோ, உங்களுக்கு தைரியம் வந்த பின்னர் ஏன் அமைதியாக இருக்க வேண்டும், அந்த குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்துங்கள் என்று தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X