விபச்சார வழக்கிலிருந்து விடுதலையான பிறகு கவிஞராக மாறிய ஸ்வேதா பாசு
ஹைதராபாத்: விபச்சார வழக்கில் கைதாகி, காப்பகத்தில் வைக்கப்பட்டு இப்போது வீடு திரும்பியுள்ள பிரபல நடிகை ஸ்வேதா பாசு இப்போது கவிஞராக மாறியுள்ளார். அவர் எழுதிய கவிதையையும் வெளியிட்டுள்ளார்.
ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விபசாரத்தில் ஈடுபட்டதாக போலீசாரால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டவர் ஸ்வேதா பாசு.
ஸ்வேதா 2 மாதங்கள் வரை பெண்கள் காப்பகத்தில் இருந்தார். பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி அவர் தாயாருடன் அனுப்பி வைக்கபட்டார்.

பேட்டி
சமீபத்தில் பேட்டி அளித்த அவர், "என்னை யாரும் கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தவில்லை. எனக்கு சினிமா துறையில் நல்ல வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. விபசாரத்திற்காக எந்த ஏஜெண்டும் என்னை ஹைதராபாத் அழைத்து செல்லவில்லை" என்று கூறினார்.

கவிதை
பெண்கள் காப்பகத்தில் இருந்த போது கடத்தலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆங்கிலம்,இந்தி மொழி மற்றும் இந்திய பாரம்பரிய இசை கற்று கொடுத்து தனது பொழுதை கழித்தார். மீதம் உள்ள நேரங்களில் ஆங்கிலத்தில் கவிதை எழுதினாராம்.

மலையிலிருந்து..
கவிதையின் தலைப்பு, 'மலையிலிருந்து....'
அந்தக் கவிதையில், "எனக்கு தற்கொலை அல்லது ஏதாவது செய்து கொள்ள தெரியவில்லை. உங்களுக்கு தெரியுமா !
நான் பறக்க எண்ணினேன் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக இருக்க எண்ணினேன்.." எனத் தொடங்குகிறார்.

தொடர்ந்து...
இடியோசை கேட்கிறது !
நான் தனியாக இருக்கிறேன்
நான் ஒரு மலையின் விளிம்பில் நிற்கிறேன்.
நான் அடர்ந்த காட்டில் உருட்டப்பட்டேன்
அங்குள்ள பழங்குடியினர் மற்றும் நாடோடிகள்
மலையில் இருந்து குதிக்க சொல்கிறார்கள்
நான் நிர்வாணமாக கீழே பார்க்கிறேன்!
குளிரால் நடுங்குகிறேன்,
மூர்க்கத்தனமான கடல்
அது என்னை விழுங்க
வாய் திறந்து தயாராக உள்ளது
இருட்டில் பகுதியில் கர்ண கொடூரமான அலறல்கள்
நான் கடலில் குதிக்க முடிவு செய்து விட்டேன்
அப்போது நான் ஒரு பிரகாசமான நட்சத்திரத்தைப் பார்த்தேன்....
இப்படி நீள்கிறது அந்தக் கவிதை...


Click it and Unblock the Notifications











