»   »  சிந்தி சின்ட்ரெல்லா தமன்னா!

சிந்தி சின்ட்ரெல்லா தமன்னா!

Subscribe to Oneindia Tamil

இந்தியாவில் மதம், மொழி, இனம் என பாரபட்சம் (ஆனால் கலர் மட்டும் கண்டிப்பாக நல்லா இருக்கோணும்!) பார்க்காத ஒரே இடம் சினிமாமட்டும்தான். அதற்கு சரியான உதாரணம் - தள தள தமன்னா!

சமீப காலமாக தென்னிந்தியா திரையுலகில் கேரளாவிலிருந்து வதவதவென அழகிகளின் படையெடுப்பு அமோகமாக நடந்து வருகிறது. அதற்குமாறாக வட இந்தியாவிலிருந்து வருவோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. விதி விலக்காக தமன்னா.

சிந்தி இனத்து சின்ரெல்லா தமன்னா. நல்ல உசரம், தொட்டால் ஒட்டிக் கொள்ளும் குங்குமப்பூ நிறம், ஆளை அசத்தும் அழகு என படு பக்காவாகஇருக்கிறார் தமன்னா.

தமிழ், தெலுங்கு என இரு திரையுலகிலும் இனிய இம்சையாக மாறி வருகிறார் தமன்னா. தமிழிலும், தெலுங்கிலும் வெளியான கேடிதான் அவரைஇரு மொழிகளிலும் அடையாளம் காட்டிய படம். படம் போண்டி ஆனாலும், தமன்னா மட்டும் தேறி விட்டார்.

நெகட்டிவ் நிழலுடன் கூடிய நாயகியாக அதில் அசத்தியிருந்தார் தமன்னா. கிட்டத்தட்ட நீலாம்பரி கேரக்டர் போலத்தான். கேடிக்கு முன்பாகமோகன்பாபுவின் மகன் மனோஜுக்குச் ஜோடியாக ஸ்ரீ என்ற படத்தில் நடித்திருந்தார் தமன்னா. மிகப் பெரிய ஹிட் படம் அது. அதைப் பார்த்துவிட்டுத்தான் இயக்குநர் ஜோதிகிருஷ்ணா தனது தம்பி ரவிகிருஷ்ணாவுக்கு ஜோடியாக கேடியில் தமன்னாவை நடிக்க வைத்தார்.

சினிமாவுக்கு வரும் முன்பே சக்தி மசாலா, ஆர்.எம்.கே.வி., சரவணா ஸ்டோர்ஸ் என நிறைய விளம்பரப் படங்களில் நடித்திருந்தார் தமன்னா.இப்போது தமிழ் தவிர இந்தியிலும் விளையாடி வருகிறாராம் தமன்னா.

ஷக்தி சிதம்பரத்தின் இயகத்தில், கிளாமர் கில்லாடி எஸ்.ஜே. சூர்யாவுடன் வியாபாரி படத்திலும், பாலாஜி சக்திவேலின் படத்திலும் திறமை காட்டிவருகிறார் தமன்னா.

வியாபாரி படத்துக்கா ஏவி.எம். ஸ்டுடியோவில் முகாமிட்டிருந்த தமன்னாவைப் பிடித்து புளிய மரம் ஒன்றின் நிழலில் உட்கார வைத்து சிலகேள்விக்கணைகளை வீசி எறிந்தோம். அதை லாவகமாகப் பிடித்து லயிப்போடு பதில் சொன்னார் தமன்னா.

எனக்கு தமிழ் புதிதல்ல. எனக்கு நன்றாக தமிழ் பேசத் தெரியும் (தெரியுமா?). ஆனால் ரசிகர்களை கொடுமைப்படுத்த நான் விரும்பவில்லை.அதனால்தான் எனக்கு சுசி டப்பிங் கொடுக்க ஒப்புக் கொண்டேன் (ஆனால் தமன்னாவின் குரல் அவ்வளவு மோசமாக இல்லை!)

கேடி படத்தில் நான் ஹஸ்கி வாய்ஸில் அழகாக பேசியிருப்பதை நிறையப் பேர் பாராட்டினார்கள். உண்மையில் அது சுசிக்குதான் போக வேண்டும்.

எனக்கு இம்புட்டு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கவே இல்லை பாஸ். முதல் படம் தமிழில் எனக்கு பிளாப் ஆனாலும் கூட மார்க்கெட் ஸ்டெடியாகிவிட்டது. என் மீது தமிழ் ரசிகர்கள் வைத்துள்ள நம்பிக்கை தான் இதற்கு காரணம்.

இப்ப என்ன படம் நடிக்கிறீங்க?

வியாபாரி படத்தில் நடிக்கிறேன். எஸ்.ஜே.சூர்யாவின் காதலியாக நடிக்கிறேன். சூர்யாவுடன் நடிப்பது புது அனுபவமாக இருக்கிறது. ரொம்பதிரில்லிங்காக இருக்கிறது. அடுத்த மாதம் படம் ரிலீஸாகிறது.

அப்புறம் பாலாஜி சக்திவேலின் படத்தில் புக் ஆகியுள்ளேன். தெலுங்கிலும் 2 படங்கள் இருக்கின்றன. இந்தியில் இண்டு படங்களில் நடிக்க பேச்சுநடந்து கொண்டிருக்கிறது. முடிஞ்சதும் சொல்றேன்.

கிளாமர் நாயகியாகவே தொடருவீர்களா?

ஏன் கிளாமராக நடிக்கக் கூடாதா? ஆபாசம் கலக்காத வரை கிளாமராக நடிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. தொடர்ந்து செய்வேன் (அப்பாடா,இப்பத்தாம்லே நிம்மதியா இருக்கு!)

உங்க கூட கேடியில் நடித்த இலியானா தெலுங்கில் சூப்பர் ஹிட் நாயகிய விட்டார், இது உங்களுக்கு உறுத்தலா இல்லையா?

கண்டிப்பாக இல்லை. எனக்கு இதுபோல கம்பேர் செய்து பேசுவதே பிடிக்காது (இனிமே பேச மாட்டோமக்கா!) எனது ஸ்டைலில் நான் கலக்குவேன்.யாரும் எனக்கு போட்டி இல்லை.

பிடிச்ச ஹீரோ??

ஒன்னு இல்லை, பாஸ், நிறைய பேர் இருக்காங்க. எப்பவும் பிடிச்ச ஹீரோ ரஜினிதான் (அட்ரா, அட்ரா, அட்ரா). அவருடன் நடிக்க வாய்ப்புகிடைத்தால், பிட்டு ரோல் கிடைத்தால் கூட போதும், ரொம்ப சந்தோஷப்படுவேன்.

அப்புறம், விஜய், அஜீத், சூர்யா எல்லோரும் கூட எனக்குப் பிடிச்சவங்கதான்.

அழகாக இருப்பதோடு, நல்லா பேசவும் கத்துக்கிட்டார் இந்த சிந்தி பாப்பா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil