அஜித்தின் 'விவேகம்' அறிவுரையை பின்பற்றும் தமன்னா?

By Siva

Recommended Video

தன்னை பற்றி வரும் வதந்திகள் பிடிக்கும் என்கிறார் தமன்னா- வீடியோ

சென்னை: தன்னை பற்றி வரும் வதந்திகள் பிடிக்கும் என்கிறார் தமன்னா.

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடித்த கண்ணே கலைமானே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதிலும் குறிப்பாக படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் தமன்னாவின் நடிப்பை பாராட்டுகிறார்கள்.

ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்து பெயர் வாங்கிவிட்டார் தமன்னா.

கெரியர்

கெரியர்

தமன்னாவின் கெரியர் எப்பொழுதும் ஒரே மாதிரி இருந்தது இல்லை. அவருக்கு மட்டும் அல்ல அனைத்து நடிகைகளுக்கும் இப்படி இருப்பது வழக்கமே. தமன்னாவின் கெரியர் முடிந்துவிட்டது அவர் யாராவது தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகும் நேரம் வந்துவிட்டது என்று அவ்வப்போது பேச்சுகள் எழும்.

படங்கள்

படங்கள்

தமன்னாவின் கெரியர் காலி என்று அவ்வப்போது ட்வீட்டுகளும் வரும். இது எல்லாம் தமன்னாவுக்கு தெரியாமல் இல்லை. தன் கெரியர் படுத்துவிட்டது என்று வரும் கிசுகிசுக்கள், ட்வீட்டுகள் தமன்னாவுக்கு மிகவும் பிடிக்குமாம். இப்படி கிசுகிசுக்கள் வந்தாலோ, ட்வீட்டுகள் வந்தாலோ நடிகைகள் டென்ஷன் ஆகும் நேரத்தில் தமன்னா கூலாக உள்ளார்.

ஆர்வம்

ஆர்வம்

கெரியர் காலி என்று பேச்சு கிளம்பினாலோ, ட்வீட்டுகள் வந்தாலோ தமன்னாவுக்கு த்ரில்லாக இருக்குமாம். ஒருவரின் கெரியர் முடிந்துவிட்டது என்று யாராலும் கூற முடியாது. நடித்தது போதும் என்று நான் என்று முடிவு செய்கிறேனோ அன்று தான் என் கெரியர் முடியும் என்கிறார் தமன்னா. தமன்னா சொல்வதை பார்த்தால் விவேகம் படத்தில் அஜித் சொல்லியதை பின்பற்றுகிறாரோ?( "இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையிலும் நீ தோத்துட்ட... தோத்துட்ட...ன்னு உன் முன்னாடி நின்னு அலறுனாலும், நீயா ஒத்துக்குற வரைக்கும் எவனாலும், எங்கேயும் எப்பவும் உன்னை யாராலும் ஜெயிக்க முடியாது")

கோரிக்கை

கோரிக்கை

ஆண்டுக்கு ஒரு முறையாவது சீனுராமசாமி படத்தில் நடிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தமன்னாவுக்கு கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கையை அவர் நிறைவேற்றினால் அவரின் கெரியருக்கு பக்கபலமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X