ரஞ்சிதா எல்லாத்தையும் வளர்த்துட்டு இருக்காங்க.. நடிகை கஸ்தூரி இப்படிப் போட்டு உடச்சுட்டாங்களே

சென்னை: நடிகை கஸ்தூரி அண்மையில் அளித்துள்ள பேட்டியில் அவர் பகிர்ந்து கொண்டுள்ள தகவல்கள் ரசிகர்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருந்தவர்கள் குறித்து கஸ்தூரி பகிர்ந்து கொண்டது பலரது கவனத்தை ஈர்த்தது.

அதாவது அவர் கூறுகையில், எனக்கு எப்போதுமே கருப்பு நிற ஆண்களையும் பெண்களையும் தான் அதிகம் பிடிக்கும். நடிகை ரம்யா கிருஷ்ணன் எனக்கு சீனியர். அவர் படப்பிடிப்பு தளத்திலும் அப்படித்தான் நடந்து கொள்வார். அதேபோல் நடிகை ரோஜாவுடன் நான் இணைந்து பணியாற்றி உள்ளேன். அவர் மிகவும் தைரியமான நடிகை. அதேபோல் நடனம் ஆடுவதில் அவருக்கு அதிக ஆர்வம் உள்ளது.

ரஞ்சிதா: நடிகை ரஞ்சிதா எனக்கு கல்லூரியில் சீனியர், அவருடன் எல்லாம் என்னை ஒப்பிடவே கூடாது. நான் எங்கோ ஒரு மூலையில் இரண்டு குழந்தைகளை வளர்த்துக் கொண்டு இருக்கிறேன். ஆனால் அவர் எங்கோ எல்லாத்தையும் வளர்த்துக் கொண்டிருக்கிறார்.

Tamil Actress Kasthuri Slams Ranjitha Reveals Shocking Comments on 90s Actresses

சுகன்யா: நடிகை சுகன்யா குறித்துச் சொல்ல வேண்டும் என்றால், தற்போது டிரெண்ட் ஆன பாடலான கருத்த மச்சான் பாடலுக்கு அவர் தான் உண்மையிலேயே ஓ.ஜி. அவர் மிகவும் திறமையானவர். அப்போது இருந்த நடிகைகள் பலருக்கும் அரவிந்த் சுவாமியுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அவருக்கு என் மேல் கிரஷ் இருந்தது. இது தொடர்பாக யாருமே கிசுகிசு எழுதவில்லை, இப்போது நானே கூறுகிறேன்.

அரவிந்த் சுவாமி: தளபதி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது, ஆனால் அப்போது நான் மிகவும் சின்ன பெண், அதனால் நடிக்க முடியவில்லை" என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார். நடிகர் அரவிந்த் சுவாமி குறித்தும் நடிகை ரஞ்சிதா குறித்தும் நடிகை கஸ்தூரி பகிர்ந்துக்கொண்ட தகவல்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. சிலரோ நடிகை ரஞ்சிதா குறித்தான இப்படியான விமர்சனத்தை தவிர்த்திருக்கலாம் என்று சிலரும், அரவிந்த் சுவாமியுடன் இணைந்து நடிக்க ஆசைப்பட்டேன் என்று நேரடியாகவே கூற வேண்டியது தானே என்றும் பதிவிட்டு வருகிறார்கள். நடிகை ரஞ்சிதா தற்போது நித்தியானந்தாவுடன் கைலாசா தீவில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X