Babloo Prithiveeraj : நீங்க நாசமா போவீங்க.. போட்டோவை பார்த்து மோசமாக திட்டுனாங்க.. கலங்கிய பப்லு !

சென்னை : தமிழ் சினிமா உலகில் குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் பப்லு என்கிற பிரித்திவிராஜ்.

மர்மதேசம், அரசி, வாணி ராணி உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள பப்லு சன் டிவியில் கண்ணான கண்ணே என்ற சீரியலில் அப்பாவாக நடித்து வருகிறார்.

200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பெயர் எடுத்த நடிகர் பப்லு பிரித்விராஜ் தனது மனைவி ஷீத்தலுடன் ஷாகிலாவுக்கு பேட்டி அளித்துள்ளார்.

Tamil cinema popular actor Babloo Prithiveeraj interview

நடிகர் பப்லு பிரித்விராஜ் : அந்த பேட்டியில், 54 வயதில் 24 வயது பெண்ணை காதலிக்கும் பப்லு என்றும், நாங்கள் இருவரும் ஏதோ கொலை குற்றம் செய்தது போல பலரும் எங்களை விமர்சித்து கடுமையாக கிண்டல் செய்தார்கள். ஆரம்பத்தில் இந்த விமர்சனங்களை எதிர்கொள்ள கஷ்டமாக இருந்தது. ஆனால், இப்போது இதை Fun ஆக எடுத்துக்கொள்கிறோம்.

பண்றது எல்லாம் பண்ணிட்டு : இப்போதும் என் முதல் மனைவியுடனும், மகனுடனும் நான் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். ஷூட்டிங் முடிந்து ப்ரீயாக இருக்கும் போது, அவனை வெளியில் அழைத்து செல்கிறேன். முன்பு அதை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாவில் ஷேர் செய்வேன் இப்போது அப்படி போடுவது இல்லை. பண்றது எல்லாம் பண்ணிட்டு பையன் போட்டோவை போட்டு சிம்பத்தி கிரியேட் பண்றீங்களானு கேக்குறாங்க அதற்காக அதை தவிர்த்து விட்டேன்.

மோசமாக திட்டினார்கள் : ஒரு முறை உப்பிலியில் கோவில் இருந்த இடத்தை சுற்றிப்பார்த்தோம். அந்த இடத்தில் இப்போது சிலையில்லை வெறும் மண்டபம் மட்டும் இருக்கிறது. அந்த இடத்தை சுற்றிப்பார்த்துவிட்டு, ஒரு மண்டபத்தில் என்மீது என் மகன் படுத்து இருக்கும் போட்டோவை ஷேர் செய்திருந்தேன். அந்த போட்டோவில் என் மகன் காலில் ஷூ இருந்தது. அதைப்பார்த்து விட்டு ஒருபிள்ளைய வளர்க்க தெரியாதா, நீங்க நாசமா போவீங்க, கோவிலில் செருப்பு போட்டுக்கொண்டு இருக்குறீங்க என்று மிகவும் மோசமாக திட்டினார்கள். இதற்கு எந்த விளக்கம் கொடுத்தாலும் யாரும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

Tamil cinema popular actor Babloo Prithiveeraj interview

செட் ஆகவில்லை : தொடர்ந்து பேசிய பப்லு, ஷீத்தலை பார்ப்பதற்கு முன்பே கடந்த ஆறு வருடமாக ஒரு பிளாட்டில் தனியாகத்தான் வாழ்ந்து வந்தேன். நானும் என் மனைவியும் பேசினாலே, அது சண்டையாகி விடும், இதனால், மகன் பாதிக்கப்பட்டதால், வீட்டைவிட்டு தனியாக வந்துவிட்டேன். அவங்க பெரிய தவறு எதுவும் செய்யவில்லை, நானும் தவறு எதுவும் செய்யவில்லை.ஆனால், எங்களுக்குள் செட் ஆகவில்லை.

முக்கிய காரணம் : மேலும், இருவரும் பிரிந்ததற்கு முக்கிய காரணமே எனக்கு அந்த வீட்டில் மரியாதை இல்லை. என் முதல் மனைவி தான் பெஸ்ட் ப்ரண்ட், ஆனால் திருமணத்திற்கு பிறகும் அவள் மனைவியாக மாறவில்லை அதுதான் பிரச்சனைக்கு காரணம். இத்தனை வருடத்தில் அவள் என்னை மூன்று முறை மட்டும்தான் சாப்டியானு கேட்டு இருக்கிறார் என்று பப்லு வேதனையுடன் கூறினார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X