இதைவிட வேற என்ன வேணும்.. உணர்ச்சிவசப்பட்டு பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர்!
சென்னை: தமிழக வெற்றக்கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் நேற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பேசிய எஸ்.ஏ. சந்திரசேகர், எல்லையில்லா மகிழ்ச்சியில் இருக்கிறேன். இதைவிட வேற என்ன வேணும் எனக்கு என உணர்ச்சிபூர்வமான பேசியுள்ளார்.
அதில், என்னுடைய மகன் என் கனவை நிறைவேற்றி இருக்கிறார், இதைவிட வேறு என்ன வேண்டும் எனக்கு? இன்று தமிழகத்திற்கு அவர் முதலமைச்சராகி இருக்கிறார். ஆட்சி அமைத்த உடனே மூன்று முக்கியமான கோப்புகளில் கையெழுத்திட்டிருக்கிறார். அவர் எப்போதுமே சொன்னதைச் செய்யக்கூடியவர். இப்போது மட்டுமல்ல, எந்த விஷயத்தை சொன்னாலும் அதை சிறப்பாக செய்து முடிப்பார், விஜய் எப்போது சொல்வார் என்ன சொல்கிறேனோ அதைத்தான் செய்வேன், என்ன செய்கிறேனோ அதைத்தான் சொல்வேன் என்பார். அந்த விஷயத்தில் சிறுவயதிலிருந்தே விஜய் உறுதியாக இருப்பார்.

சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்: ஒரு நடிகனாக உச்சத்துக்கு வந்து அங்கிருந்து இன்று முதலமைச்சராகி இருப்பதை பார்க்கும் போது உண்மையிலேயே நான் உணர்ச்சிவசப்படுகிறேன். அதேபோல், இடையில் பல கஷ்டங்களையும் சிரமங்களையும் தாண்டி இன்று 'ஜோசப் விஜய் ஆகிய நான்' என்று அவர் சொன்னது மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். 1973 ஆம் ஆண்டு எனக்கு திருமணமானது, 1974 ஆம் ஆண்டு விஜய் பிறந்தார். அந்த காலத்தில் நான் ஒரு உதவி இயக்குநராக தான் இருந்தேன். சாப்பாட்டிற்கே மிகவும் கஷ்டப்பட்டோம். அந்த விஷயத்தை விஜய் விழா மேடையில் நினைவுகூர்ந்து சொன்னதும் என் கண்கள் கலங்கிவிட்டது என எஸ்.ஏ.சந்திரசேகர் உருக்கமாக பேசி உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
முதல் கையெழுத்து: நேற்று விஜய் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றதுமே, விழா மேடையிலேயே மூன்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். முதல் கையெழுத்தாக, தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளிலும் இரு மாதங்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம், போதைப்பொருள் தடுப்புக்கு மாவட்டந்தோறும் சிறப்புப் படை, பெண்கள் பாதுகாப்பு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஆகிய உத்தரவுகளில் விஜய் பிறப்பித்தார்.


Click it and Unblock the Notifications