ரஜினி சினிமாவை விட்டு விலகுகிறாரா? அழுத்தம் கொடுக்கும் லதா.. அவரென்ன ஏடிஎம் மிஷினா? பிரபலம் பேட்டி!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் எந்த படத்திலும் கமிட்டாகாததால், அவர் ஓய்வு பெற இருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன. இதுகுறித்து தமிழா தமிழா பாண்டியன் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

இதில், ரஜினிகாந்த் சினிமாவை விட்டு விலகுகிறார் என்கிற செய்தி திரைத்துறையில் இருக்கக்கூடிய மூத்த திரைத்துறை கலைஞர்கள் மத்தியில் ஒரு மாதமாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு என்ன காரணம் என்றால், ரஜினி படத்துக்காக மட்டுமே ஒரு குழு எப்பவுமே தயாராக இருக்கும், அந்த குழு கலைக்கப்பட்டு விட்டது.
ரஜினி படத்தின் பட்ஜெட் குறைந்தது 500 கோடி, அதை ஆயிரம் கோடிக்கு விற்க வேண்டும். அப்படி இருக்கும்போது இவரின் படத்தை சுபாஸ்கரன், கலாநிதிமாறன், கல்பாதி எஸ் அகோரம் போன்ற பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் தான் 500 கோடி ரூபாய் வரை செலவு செய்து படத்தை எடுத்து அதை ஆயிரம் கோடிக்கு விற்க முடியும்.

Rajini jailer 2 interview 2

அழுத்தம் கொடுத்த லதா: ரஜினிகாந்தின் மனைவி லதா ஒவ்வொரு நிறுவனத்திற்கும் போன் செய்து கால் ஷீட் ஃப்ரீயாக இருக்கிறது என்று சொல்லி சொல்லி தான் ஐந்து படத்தில் நடித்தார். தற்போது லதா ரஜினிகாந்த் ஃபோன் செய்தால் அந்த நிறுவனத்தினர் எடுப்பதில்லை. ஏனென்றால் லதாவின் அழுத்தம் காரணமாகத்தான் அவருக்கு பட வாய்ப்பு வந்தது. அதிலும், ரஜினியின் மாஸ் வேலைக்கு ஆகாமல் போனதால், அபிதாப் பச்சன், மோகன் லால், சிவராஜ் குமார் என பெரிய நடிகர்கள் நடிக்க வேண்டி உள்ளது. தற்போது ரஜினி முகத்திற்கு படம் ஓடுவதே இல்லை. சன் பிக்சர்ஸ் எடுத்த ஜெயிலர் படத்தில் போட்ட பணத்தை கூட எடுக்கமுடியவில்லை. இதனால், கலாநிதி மாறன், வடஇந்தியாவில் படம் வியாபாரம் ஆனால், தான் கஷ்டம் வராமல் இருக்கும் என்று ரஜினியை உபிக்கு அனுப்பி யோகி ஆதித்யநாத்தை சந்தித்துவிட்டு ஆசி வாங்கி வர சொல்கிறார். ரஜினியும், கலாநிதி சொன்னதை கேட்டு யோகி ஆதித்யநாத்தை சந்தித்து அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார்.

Rajini jailer 2 interview 2

ரஜினிக்கு நிம்மதியே இல்ல: தமிழ் நாட்டில், அம்மா, அப்பா காலில் விழு என்று சொன்ன ரஜினி, கலாநிதி சொன்னதால், யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தார். அதுமட்டுமில்லாமல் துணை முதலமைச்சரை அழைத்துச் சென்று ஜெயிலர் படத்தை பார்த்தார். அப்படித்தான் ஜெயிலர் படம் வட மாநிலத்தில் ஓடியது. இதனால், இனிமேல் கலாநிதிமாறன், கல்பாதி எஸ் அகோரம் போன்றவர்கள் ரஜினியை வைத்து படம் எடுக்க மாட்டார்கள். அப்படியே படம் எடுத்தாலும் அந்த படம் ஓடுவது இல்லை. இதனால் தான் ரஜினி எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருக்கிறார். ரஜினிக்கு பல்லாயிரம் கோடி சொத்து இருக்கிறது, இந்த சொத்துக்களை பாதுகாப்பது தான் லதாவின் வேலை. அந்த சொத்துக்களை பாதுகாப்பதற்குத் தான் லதா, ரஜினியை தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார். லதா, ரஜினியை ஒரு ஏடிஎம் மிஷின் போலத்தான் பார்க்கிறார். இதை மனதில் வைத்துக்கொண்டு தான் ரஜினி ஒரு பேட்டியில், பெயர்,புகழ், பணம் எல்லாம் இருக்கிறது. ஆனால் நிம்மதி இல்லை என்று பேசி இருந்தார் என தமிழா தமிழா பாண்டியன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X