அனிருத், காவ்யா காதல் கிசுகிசு.. பின்னணியில் நடப்பது என்ன? பிரபலம் அதிர்ச்சி தகவல்!
சென்னை: சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன், இசையமைப்பாளர் அனிருத்தை காதலித்து வருவதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகிறது. பிரபல சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதனும், இந்த தகவல் உண்மையாக இருக்கலாம் என பகிர் தகவலை கூறி இருந்த நிலையில், சோசியல் மீடியாவில் இது பேசு பொருளாகி இருக்கிறது.
இதுகுறித்து, ரியல் ஒன் சேனலுக்கு தமிழா தமிழா பாண்டியன் பேட்டி அளித்துள்ளார். அதில், சமூக வலை தளங்களில் பரவும் இந்த செய்தி உண்மையா.. இல்லை வதந்தியா.. என்று தெரியவில்லை. ஒரு ஆணும், ஒரு பெண்ணும் காதலிப்பது என்பது சகஜமான ஒன்றுதான். ஆனால், இதில் பேசு பொருளாக ஆகி இருப்பது இருவருடைய தகுதி தான். அனிருத் மிகப்பெரிய இசை அமைப்பாளராக இருந்தாலும், கலாநிதி மாறன் குடும்பத்துடன் சேர்த்து பார்க்கவே முடியாது. ஏனென்றால், அவ்வளவு பணமும், அரசியல் செல்வாக்கும் இருக்கிறது.

காதல் கிசுகிசு: அனிருத். காவ்யாவை விரும்புகிறாரா? இல்லை காவ்யா அனிருத்தை விரும்புகிறாரா? என்ற விஷயம் கூடிய விரைவில் வெளி உலகத்திற்கு தெரிய வந்துவிடும். காவ்யா விரும்பினால், இந்த திருமணம் நடக்கும். காவ்யா விரும்பவில்லை என்றால் வதந்தியோடு இந்த செய்தி முடிந்து விடும். இன்று சமூக வலைதளங்களில் பல செய்திகள் வருகின்றன. ஆனால், அப்படி வரும் செய்திகள் அனைத்தும் பொய்யாக தான் இருக்கிறது. அதில் உண்மைத் தன்மை இருப்பது இல்லை. அப்படியே இந்த செய்தி உண்மையாக இருந்தால், இந்த திருமணம் நிச்சயம் நடக்கும். ஏன் என்றால், கருணாநிதியின் குடும்பம் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இல்லை, காதலிப்பதாக சொன்னால் அவர்களை திருமணம் செய்து வைத்துவிடுவார்கள்.
கருணாநிதி செய்த வேலை: அமெரிக்காவில் எம்.பி.ஏ படித்த காவ்யா மாறன், தற்போது சன் டிவியை நிர்வகித்து வருகிறார். அவர், அனிருத்தை காதலிப்பதாக சொன்னால், நிச்சயம் கலாநிதி மாறன் திருமணம் செய்து வைத்துவிடுவார். ஏன் என்றால், கலாநிதி மாறன் அமெரிக்காவில் படித்த போது, காவேரியை காதலித்து அங்கே திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். இந்த விஷயம் முரசொலி மாறனுக்கும் தெரியாது, கருணாநிதிக்கும் தெரியாது. இந்த விஷயம் தெரிந்த பிறகு தான், இந்தியா வரவைத்து அண்ணா அறிவாலையத்தில் திருமணம் நடந்தது. காவேரியின் உண்மையான பெயர் கங்கா, அவர் கர்நாடகத்தை சேர்ந்த பிராமின பெண். கங்கா என்ற பெயரை, அரசியலுக்காக காவேரி என பெயரை மாற்றியவர் கருணாநிதி தான்.
பல கோடி சொத்து: அதன் பின், முரசொலி மாறன், கலாநிதியை அமெரிக்கா செல்ல அனுமதிக்காமல் இங்கே பிஸ்னசை பாரு என்றார். அப்போது தான் சன் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. இன்றைக்கு தென்னிந்திய மொழிகளில் சன் தொலைக்காட்சி ஆதிக்கம் செலுத்தி வருகிறது சன் நெட்வொர்க். இப்படி ஒவ்வொரு சேனலில் இருந்தும் ஒரு மாத வருமானம் மட்டும் பத்து கோடி வருகிறது. இப்படி உலகம் முழுக்க பல இடத்தில் இருந்து பணம் வந்து கொண்டே இருக்கிறது. கவ்யாவிற்கு தற்போது 32 வயதாகிறது, இதுவரை ஏன் திருமணம் செய்யவில்லை என்று தெரிவில்லை என தமிழா தமிழா பாண்டியன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











