நீங்கள் திருநங்கையா.. மனமுடைய வைத்த கமெண்ட்.. வருத்தத்துடன் தான்யா ஹோப் !
சென்னை : ரசிகர் ஒருவரின் தவறான கமெண்டால் மிகவும் வருத்தப்பட்டேன் என்று தான்யா ஹோப் கூறினார்
நடிகை தான்யா ஹோப் தமிழ் ,தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் தமிழில் நடித்த முதல் படமான தடம் படம் பெரிய வெற்றியை பெற்றது. இதையடுத்து, தொடர்ந்து தமிழிலும் ஒப்பந்தமாகி வருகிறார். சமீபத்தில் இவர் ஹரீஸ் கல்யாணுக்கு ஜோடியாக தாராள பிரபு படத்தில் நடித்து இருந்தார். இந்த படமும் நல்ல வெற்றியை பதிவு செய்துள்ளது .

சமீபத்தில் ஒரு நேர்காணலில் தனக்கு நடந்த கசப்பான அனுபவம் பற்றி பகிர்ந்துள்ளார் தான்யா ஹோப். அதில் தாராள பிரபு படத்தின் பாடல் வெளியீட்டிற்கு பின் விளம்பரத்திற்காக ஒரு நேர்காணலில் பங்கேற்க நேர்ந்தது. அந்த நேர்கணாலின் யூடியூப் பதிவில் ஒருவர் இந்த படத்தின் நாயகி திருநங்கையா என கேள்வி எழுப்பிருந்தார். அந்த விஷயம் தன்னை மிகவும் பாதித்தது என பகிர்ந்து உள்ளார் .
தான்யா அந்த பதிவை மறந்தே விட்டேன், அந்த பதிவு எந்த விதத்திலும் என்னை பாதிக்கவில்லை. நான் அந்த மோசமான விஷயத்தை எதிர்கொண்டு விட்டேன் அதை புறம் தள்ளிவிட்டு தைரியமாக தற்போது பகிர்ந்து கொள்கிறேன் என்றார்.

தான்யா ஹோப் வளர்ந்து வரும் நாயகிகளில் முக்கியமானவர். அவர் இந்த மாதிரியான மோசமான கமெண்டுகளை கண்டு முதலில் வருத்தபட்டிருக்கிறார் இதன் பின் தைரியமாக செயல்பட வேண்டும் என எண்ணி இப்படி கமெண்ட் செய்பவர்களை தனது சமூக வலைத்தள பக்கங்களிலும் தற்போது பிளாக் செய்து விட்டாராம்.
தான்யா ஹோப்பிற்கு தற்போது இன்ஸ்டாகிராமில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் பல ரசிகர்களின் அன்புக்கு சில சமயங்களில் எந்த முகசுழிப்புமின்றி பதில் கூறி வருகிறார் தான்யா .

தான்யா ஹோப் தமிழில் நடித்த தாராள பிரபு படம் நல்ல வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இந்நிலையில் இவர் அடுத்ததாக கன்னடத்தில் ஹோம் மினிஸ்டர் என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதி வேலைகள் போய் கொண்டிருப்பதால் கூடிய விரைவில் இந்த படமும் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.


Click it and Unblock the Notifications











