»   »  சினிமாவுக்கு தாரிகா ஸாரி!

சினிமாவுக்கு தாரிகா ஸாரி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தாரிகா இனிமேல் சினிமாவுக்குத் திரும்ப மாட்டாராம். அந்தளவுக்கு கையில் நிறைய டிவி சீரியல்கள்இருக்கிறதாம்.

ஆரம்ப காலத்தில் கன்னடத்தில் ஏகப்பட்ட படங்களில் நடித்தவர் தாரிகா. அவற்றில் பெரும்பாலான படங்களில்ஏடாகூடமான கேரக்டர்கள்தான். கவர்ச்சியில் சக்கை போடு போட்ட அவர் அப்படியே சென்னைக்கு ஷிப்ட்ஆனார்.

சென்னைக்கு வந்த அவருக்கு சினிமா முதலில் ரெட் கார்ப்பெட் விரிக்கவில்லை. இதனால் டிவி தொடர்களில்நடிக்க ஆரம்பித்தார். சித்தி தொடர் மூலம் அவருக்கு டிவி வட்டாரத்தில் நல்ல அறிமுகம் கிடைத்தது. இதனால்தொடர்ந்து டிவிக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்தார்.

இப்படியே இருந்தால் கல்லா நிறையாது என்பதால் சினிமாவிலும் முயற்சிக்க ஆரம்பித்தார். அப்போது கிடைத்தவாய்ப்புதான் புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் இடம்பெற்ற நாட்டுச் சரக்கு நச்சுன்னுதான் இருக்குஎன்ற குத்துப் பாட்டு.

இப்பாட்டுக்கு தாரிகா போட்ட ஆட்டத்தைப் பார்த்து வாலிபப் பசங்களுக்கு வலிப்பு வராத குறை. அந்தஅளவுக்கு கிளாமரில் சிங்கி அடித்திருந்தார் தாரிகா. தொடர்ந்து இதேபோல நிறைய குத்துப் பாட்டுக்கள் வரும்,குமுறித் தள்ளிடலாம் என ஆவலோடு இருந்தார் தாரிகா.

ஆனால் ஒரு வாய்ப்பும் வராததால் கடுப்பாகிப் போன தாரிகா, மலையாளப் பக்கம் பார்வையைத் திருப்பினார்.அங்கு மப்பும் மந்தாரமுமாக 4 தி பீப்பிள் என்ற படத்தில் ஒரு குத்துப் பாட்டுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால்அங்கேயும் இந்த ஒத்தப் பாட்டோடு சரி, வேறு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனால் மீண்டும் தமிழுக்கேத் திரும்பி வந்தார். ஹீரோயின் தோழி, மச்சினி, நாத்தனார் என குட்டிக் குட்டிரோல்களே கிடைத்தன. இதனால் அப்செட் ஆகிப் போன தாரிகா, மீண்டும் டிவி பக்கம் திரும்பினார்.

மீண்டும் வந்த தாரிகாவை, சின்னத் திரை, சிறப்பாகவே வரவேற்றது. இப்போது தாரிகா கை நிறையசீரியல்களுடன் கலக்கி வருகிறார். புதிதாக வரும் சீரியல்கள் பெரும்பாலானவற்றில் தாரிகாவைக் காண முடிகிறது.மலையாள டிவி தொடரிலும் கூட நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாம்.

திருப்திகரமான அளவுக்கு சீரியல்கள் இருப்பதால் இனிமேல் சினிமா வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளாராம்தாரிகா. இந்த முடிவில் மாற்றம் வருமா தாரிகா என்று கேட்டால், நிச்சயம் வராது என்றுதான் நினைக்கிறேன்என்கிறார்.

அது சரி, நல்ல இளமையோடு கொப்பும், குலையுமாக இருந்தபோதே சரியான வாய்ப்புகள் வரவில்லை.ஊட்டம் குறைந்த பிறகா வாய்ப்பு வந்து குவிந்து விடும் என கூறுகிறார்கள் ஏற்கனவே கிளாமர் போட்டியில்சிக்கி அல்லாடிக் கொண்டிருக்கும் குத்தாட்ட நாயகிகள்.

அவங்க சொல்வதிலும் நியாயம் கீது நைனா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil