twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிறந்தது லண்டன்... தமிழ்தான் உயிர்.. - அசுரன் டீஜே அருணாசலம் பேட்டி

    |

    Recommended Video

    Asuran | Teejay Interview | வெற்றிமாறன் சார் என்கிட்ட 6 கேள்வி கேட்டார்!-வீடியோ

    சென்னை: நான் பிறந்து வளர்ந்தது லண்டனாக இருந்தாலும் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது தாய்மொழியான தமிழுக்கு தான். என்னதான் நான் இங்கிலீஷ் ஸ்கூல்ல படிச்சிருந்தாலும் தமிழை மறக்க முடியாது என்று கூறியுள்ளார் அசுரன் படத்தில் நடித்துள்ள டீஜே அருணாசலம். அசுரன் படத்தில் டிஜே அருணாசலம், குறைந்த நேரமே படத்தில் வந்தாலும் அனைவராலும் கவனிக்கப்படும் வகையில் படத்தில் நடித்திருக்கிறார். அசுரன் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு பற்றியும் அந்த படத்தில் நடித்த அனுபவங்களையும் நம்முடைய ஃபிலிமிபீட் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டார் டீஜே அருணாசலம்.

    எனக்கு தமிழ் தான் ரொம்ப பிடிக்கும். நான் அசுரன் படத்தில் இணைந்ததற்கு முக்கிய காரணம் வெற்றிமாறன் சார் தான். ஏன்னா அவர் தான் எல்லார்கிட்டேயும் என்னை அறிமுகம் செஞ்சி வச்சாரு. வெற்றிமாறன் சாரை எப்படி தெரியும்னா, ஆண்ட்ரியா மூலமா தான் அவர் எனக்கு அறிமுகமானார். ஆண்ட்ரியா எனக்கு நல்ல ஃபிரண்ட்.

    Teejay Arunachalam exclusive interview

    கடந்த ஒரு வருஷத்துக்கு முன்னாடி நானும் ஆண்ட்ரியாவும் சேர்ந்து ஒரு பாட்டு பாடியிருக்கோம். அந்த பாட்டு மூலமா அவர் எனக்கு நல்ல ஃபிரண்டாயிட்டாரு. சுருக்கமா சொல்லணும்னா மியூசிக் தான் எங்களை இணைச்சது. இந்த இடத்துல நான் ஆண்ட்ரியாவுக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும்.

    ஆண்ட்ரியா ஒரு நல்ல ஃபிரண்டு மட்டும் கிடையாது. அதுக்கும் மேல ஒரு அம்மா மாதிரி (Mother Kind). அவங்கதான் எனக்குள்ள எதோ ஒரு டேலண்ட் இருக்குன்னு நம்புனாங்க. ஏதோ ஒரு கலை (Art) அதோட நல்ல மனசு (Good Heart) இருக்குன்னு உறுதியா நம்புனாங்க. அவங்க தான் அதைப் பத்தி வெற்றிமாறன் சார் கிட்டே சொல்லி இருக்கார்.

    அதுக்கப்புறம் தான் வெற்றிமாறன் சார் எனக்கு ஃபோன் பண்ணினார். நான் அப்போ லண்டன்ல தான் இருந்தேன். பேசும்போதே ரொம்ப கேஷுவலா தான் பேசுனாரு. பேசும்போதே, ஆறு கேள்விகள் கேட்டாரு. நீ என்ன படிக்கிறே, தமிழ் நல்லா பேசுவியா, தமிழ் சினிமா பாக்குறியா, சினிமாவை நீ எப்பிடி பாக்குறே, உன்னோட கன்னோட்டம் என்ன, இதுக்கப்புறம் உன்னோட ஐடியா என்ன, உன்னோட அவைலபிலிட்டி என எல்லாத்தையும் எனக்குள்ள இருந்து வெளில எடுத்துட்டாரு.

    அதுக்கப்புறமா தான் அசுரன் படத்துல தனுஷ் சார் பையனா நடிக்கிறியான்னு கேட்டாரு. மொதல்ல எந்த படம்னு சொல்லலை. உனக்கு தனுஷ்னா யாருன்னு தெரியுமான்னு தான் கேட்டாரு. தனுஷ் சார் பத்தி யாருக்குதான் தெரியாது. கண்டிப்பா தெரியும் சார்னு சொன்னேன். அதுக்கு பின்னாடி தான் அசுரன் படத்துல தனுஷ் சாருக்கு பையனா நடிக்கிறியான்னு கேட்டாரு.

    Teejay Arunachalam exclusive interview

    இதை நான் ஏன் சொல்றேன்னா, முதல்ல வெற்றிமாறன் சார் என்கிட்டே நடிக்க விருப்பமான்னு கேட்டாரு. எனக்கு நடிக்க அவ்வளவா விருப்பமில்லை. எனக்கு மியூசிக் மட்டும் தான் பிடிக்கும்னு சொன்னேன். அதனால தான் அவர் அப்படி கேட்டதும் எனக்கு பக்குன்னு ஆயிடிச்சி. ஐயய்யோ கொடுத்த வாய்ப்பையும் நம்ம மிஸ் பண்ணிட்டோமோன்னு பயந்தேன்.

    ஆனால் அதே சமயத்துல எனக்கு பெர்ஃபார்மென்ஸ் ரோல் பண்றதுக்கு ரொம்ப பிடிக்கும். அதனால வெற்றிமாறன் சார் கிட்டேயே சொன்னேன். சார் எனக்கு பெர்ஃபார்மென்ஸ் ரோல்னா பண்றேன் சார்னு. ஏன்னா ஒரு நடிகனுக்கு பெர்ஃபார்மென்ஸ் ரொம்ப முக்கியம். நம்ம படத்துல காமெடி பண்ண போகலை. அதனால், நான் வெற்றிமாறன் சார் படம்னா நான் நடிக்கணும். சுருக்கமா எந்த கேரக்டர் கொடுத்தாலும் நான் பெர்ஃபார்மென்ஸ் பண்ணணும். அதைத்தான் நான் அவர்கிட்டே எடுத்து சொன்னேன். அதை கேட்டுட்டு தான் அசுரன் படத்துல தனுஷ் சாருக்கு மகனா நடிக்க வச்சாரு என்று அசுரன் படத்தில் நடித்த அனுபவங்களை கூறினார் டீஜே அருணாசலம்.

    English summary
    Whatever I was born and raised in London, I give importance to the mother tongue Tamil. Even though I attended English school, I can not forget Tamil. Teejay Arunachalam shared with our FilmiBeat readers about the chance to act in the movie Asuran.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X