»   »  டென்ஷன் தேஜாஸ்ரீ!

டென்ஷன் தேஜாஸ்ரீ!

Subscribe to Oneindia Tamil

ஒயிலழகி தேஜாஸ்ரீக்கு சென்னையின் டிராபிக் பெரும் டென்ஷனாக இருக்கிறதாம்.மும்பைப் போல வருமா என்று புலம்புகிறார்.

அழகாக கார் ஓட்டும் நடிகைகள் நிறைய இருக்கிறார்கள். ஆனால் அட்டகாசமாக,அதிரடியாக கார் ஓட்டும் நடிகை தேஜாஸ்ரீ. ஸ்டியரிங்கைப் பிடித்து விட்டால் மின்னல்வேகத்தில்தான் கிளம்புவாராம்.

மும்பையில் இருந்தால் காரில் தான் தினசரி பறப்பாராம் தேஜாஸ்ரீ. படு வேகமாக கார்ஓட்டும் அவருக்கேற்றார் போல மும்பையில் அகலமான பெரிய சாலைகள்இருப்பதால் தப்பித்தார்.

ஆனால் சென்னைக்கு வந்து விட்டால்தான் தேஜாஸ்ரீ டென்ஷனாகி விடுகிறாராம்.காரணம் இங்குள்ள போக்குவரத்து நெரிசல் அவரது இஷ்டத்திற்கேற்ப கார் ஓட்டமுடியவில்லையாம்.

அய்யோ, என்ன சார் சென்னை இது. வண்டியை பிரேக் போடாமல், கியரைமாற்றாமல் ஓட்டவே முடியவில்லையே. திடீர் திடீர்ன டூவிலர்கள், ஆட்டோக்கள்குறுக்கே புகுந்து விடுகின்றன. ரொம்ப டென்ஷனாகி விடுகிறது.

யார் மீதாவது மோதிடுவோமோ என்று பயந்து பயந்து கார் ஓட்ட வேண்டியுள்ளது.இதுவே மும்பையா இருந்தா அவ்வளவுதான், என்னோட கார் ஸ்பீடாமீட்டர் 120க்குமேலதான் நார்மலாவே இருக்கும். அவ்ளோ ஸ்பீடா வண்டி ஓட்டுவேன் என்கிறார்.

இவ்வளவு டென்ஷனாக இருந்தாலும் சென்னையில் இருக்கும்போது அவரேதான் கார்ஓட்டுகிறாராம். சில ஏரியாக்களை நன்கு பழகி விட்ட தேஜாஸ்ரீக்கு, புதியஇடங்களுக்குப் போனால் தான் ரோடு புரியாமல் குழம்பி விடுகிறாராம்.

சில நேரங்களில் கண்ணாடியை இறக்கி விட்டு, பிளாட்பாரத்தில் போகிறவர்களைக்கூப்பிட்டு எக்ஸ்கியூஸ் மீ, எந்த ரோடு இது, அங்க எப்படிப் போகணும் என்று அட்ரஸ்கேட்டு விசாரித்துப் போய் விடுவாராம். இதுமாதிரியான நேரத்தில் இன்னொருடென்ஷனும் வருமாம்.

ரசிக மக்காக்கள் தேஜாஸ்ரீயை அடையாளம் கண்டு அட்ரஸ் சொல்வதற்குப் பதில்ஆட்டோகிராப் கேட்டு அனத்துவார்களாம். அய்யோடான்னு இருக்கே என்றுஅலுத்துக் கொள்கிறார் தேஜாஸ்ரீ.

சரி, படத்தை ஒண்ணையும் காணோமே, என்னாச்சு என்று டிரைவிங் புராணத்தை ஓரம்கட்டி விட்டு திரைப் புராணத்துக்குத் தாவினோம். வருது சார், வருது, இந்தவருஷத்துல நான் யார் என்பதை நிரூபிக்கிறேன் பாருங்க என்று கூலாக சொல்லிவிட்டு வண்டியை எடுத்தார் தேஜாஸ்ரீ.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil