தெலுங்கில் இந்த படம் தான் நேரடியாக ஆன்லைனில் ரிலீஸ்.. என்ன சொல்கிறார் இயக்குநர் லக்ஷ்மிகாந்த்!
சென்னை: இயக்குநர் லக்ஷ்மிகாந்த் இயக்கத்தில் நவ்தீப் நடிப்பில் வெளியாகி உள்ள 'ரன்' திரைப்படம் தெலுங்கு சினிமாவின் முதல் நேரடி ஆன்லைன் ரிலீஸ் திரைப்படம் என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளது.
இதுகுறித்து ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு இயக்குநர் லக்ஷ்மிகாந்த் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
அமேசான் பிரைமில் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் நேற்று வெளியான நிலையில், ஆஹா எனும் OTT தளத்தில் தெலுங்கு படமான 'ரன்' ரிலீசானது.

ஆனால், பொன்மகள் வந்தாள் படத்தை போல அல்லாமல், இந்த படம் OTT தளத்திற்கு என்றே உருவாக்கப்பட்ட படம் என இயக்குநர் லக்ஷ்மிகாந்த் தெரிவித்துள்ளார்.
அறிந்தும் அறியாமலும், அலா வைகுந்தபுறமுலோ உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் நவ்தீப் நடிப்பில் கிரைம் த்ரில்லர் படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது.
மனைவியை கொலை செய்த கொலைகாரனை நவ்தீப் கண்டுபிடிப்பதே படத்தின் கதை.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக லாக்டவுன் ஏற்பட்டுள்ள நிலையில், இனிமேல் பல படங்கள் நேரடியாக ஆன்லைன் ரிலீசுக்கு என்றே உருவாகும் நிலை உருவாகி இருக்கிறது.
சின்ன பட்ஜெட் படங்களை தியேட்டர்கள் வாங்காமல் இருந்து வந்த நிலையில், சிறு பட்ஜெட் படங்களுக்கு ஆன்லைன் தளங்களில் நல்ல எதிர்காலம் இருப்பதாகவும், இயக்குநர் லக்ஷ்மிகாந்த் கூறியுள்ளார்.
ஒன்றரை மணி நேரமே ஓடக்கூடிய இந்த கிரைம் த்ரில்லர், ரசிகர்களை சீட் நுனிக்கே கொண்டு வந்து விடும் என்றும் பைரஸி தளங்களில் பார்க்காமல் அதிகாரப்பூர்வமான தளங்களில் பாருங்கள் என தட்டு தடுமாறினாலும், கொஞ்சும் தமிழில் பேசியுள்ள முழு பேட்டியை காண லிங்கை கிளிக் செய்யுங்க!


Click it and Unblock the Notifications











