எப்போ டிரஸை கழட்டினேனோ.. அப்பவே என் வாழ்க்கை போச்சு.. கண்கலங்கிய ஸ்ரீரெட்டி!
சென்னை: போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த், ஸ்ரீகிருஷ்ணா கைதாகி இருக்கும் நிலையில். திரைத்துறையில், கொக்கைன் போதைப் பொருளின் பயன்பாடு அதிகரித்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகை ஸ்ரீரெட்டி, ஒரு பார்ட்டியில் ஒரு நடிகர் என் உதட்டின் மீது கொக்கைனை தடவினார் என்று கூறியிருந்தார். நடிகை ஸ்ரீ ரெட்டி அந்த நடிகரின் பெயரை சொல்லாததால், சோஷியல் மீடியாவில் அந்த நடிகர் ஸ்ரீகாந்த் தான் என பேச்சு எழுந்துள்ள நிலையில், தற்போது நடிகை ஸ்ரீ ரெட்டி குமுதம் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், ஆறு வருடத்திற்கு முன் நான் மீடூ பற்றியும், போதை பொருள் பற்றியும், என் வாழ்க்கையில் சந்தித்த பல பிரச்சனைகள் குறித்து பேசினேன். அப்போது, யாரும் எனக்கு ஆதரவாக நிற்கவில்லை, பிரபலமாவதற்காக பேசுவதாக சிலர் கூறினார்கள். சில அந்த பெண்ணே தப்பானவள் என்றார்கள். அந்த நேரம் நான் யாருடைய ஆதரவும் இல்லாமல் இருந்தேன். இன்று அதே மனநிலையில் தான், போதை வழக்கில் கைதானவர்களும், வழக்கில் சிக்கியவர்களும் இருப்பார்கள், இதனால், நான் அவர்கள் குறித்து எந்த விதமான கருத்தையும் கூற விரும்பவில்லை. சில ஆண்டுக்கு முன், நான் அந்த போதைப் பொருளை பற்றி பேசியது இப்போது வைரலாகி கொண்டு இருக்கிறது. இப்பொழுது நான் யாருடைய பெயரையும் சொல்லவில்லை. பாலிவுட், கோலிவுட், டோலிவுட்டில் இந்த போதை பொருள் கலாச்சாரம் புழக்கத்தில் இருக்கிறது என்பது தான் உண்மை.

தவறு செய்துவிட்டேன்: நான் வாழ்க்கையில் பார்க்கலாத பிரச்சனைகளே இல்லை, அனைத்தையும் பார்த்து விட்டேன். சினிமாவில் பெரிய ஆளாக இருப்பவர்கள் தவறு செய்ததை வெளியில் சொல்லி என் வாழ்க்கையை தானே கெடுத்துக்கொண்டேன். சினிமா என்பது பெரிய கடல், அதில் நான் ஒருத்தி மட்டும், தப்பு செய்தவர்களுக்கு தண்டனை வேண்டும் என்று போராட்டம் செய்தால் என்ன நடக்கும், ஒன்னும் நடக்காது. அன்னைக்கு நான் அமைதியாக இருந்து இருக்க வேண்டும், ஆனால், நான் அதை செய்யாமல், என்னுடைய பிரச்சனைக்காக தெருவில் இறங்கினேன் கடைசியில் என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது.
வாழ்க்கையே போச்சு: அன்று மட்டும் நான் என் கோவத்தை அடங்கி அமைதியாக இருந்து இருந்தால், இன்னைக்கு திருமணம் செய்து கொண்டு குழந்தைகளோடு நன்றாக வாழ்ந்து இருப்பேன். என்னைக்கு நான் டிரஸை கழட்டினேனோ.. அப்பவே என் வாழ்க்கை போச்சு... அப்பா, அம்மா பேச்சை கேட்காமல் சினிமாவில் சாதிக்கலாம் என்று வந்தேன். ஆனால், என்னால் எதையும் செய்ய முடியல, கடைசியில் யாருடைய ஆதரவும் இல்லாமல் இப்போது தனியாக வாழ்த்து கொண்டு இருக்கிறேன். இது எல்லாம் எதனால், நான் அன்னைக்கு செய்த தவறால் தான். வாழ்க்கையில் எனக்கு கிடைத்த பாடத்தால், இப்போது நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன். என்னுடன் கிருஷ்ணர் இருக்கிறார். அவர் என்னை பார்த்துப்பார். அவரை நினைத்து துளசி மாலையை கழுத்தில் போட்டு இருக்கிறார். அந்த மாலையை போட்டுவிட்டால், மாமிசம் சாப்பிடக்கூடாது, மது அருந்தக்கூடாது, செக்ஸ் வைத்துக்கொள்ளக்கூடாது. கிருஷ்ணருக்காக நான் எல்லாத்தையும் விட்டு விட்டு இப்போது யூடியூபில் சமையல் செய்து வீடியோ வெளியிட்டு சம்பாதித்து வருகிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications











