ஒருதலை காதல்.. 16இடத்தில் வெட்டு.. அன்னைக்கே செத்து இருப்பேன்.. தாய்கிழவி பட நடிகையின் கண்ணீர் கதை

சென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இளம் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார் ரேஞ்சல் ரெபேக்கா. பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இவர், தற்போது அளித்துள்ள ஒரு பேட்டியில் தனது வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சிகரமான அனுபவத்தை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ரேஞ்சல் ரெபேக்கா: "தாய் கிழமையில்" படத்தில் நடிகை ராதிகாவின் செல்ல மகளாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ரேஞ்சல் ரெபேக்கா, தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். " கடைசி விவசாயி", "குட் நைட்", "லக்கி மேன்" போன்ற திரைப்படங்களில் இவரது இயல்பான நடிப்பு கவனிக்கத்தக்கதாக இருந்தது. ரேஞ்சல் ரெபேக்கா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தனது வாழ்க்கையில் நடந்த ஒரு கொடூர சம்பவத்தை, அவர் கண்கலங்க பகிர்ந்துள்ளார். அதில், நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டு இருந்த போது, ஒருவன் என்னை ஒருதலைக்காதலாக காதலித்து தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தேன். நான் காதலை நான் ஏற்கவில்லை என்பதற்காக வீட்டிற்குள் அப்பா இல்லாத நேரத்தில் புகுந்து என்னையும், என் அம்மாவையும் கத்தியால் தாக்கினார்.

Thai Kizhavi painful cinema story
Photo Credit:

செத்து இருப்பேன்: 16 இடங்களில் வெட்டு, ரத்த வெள்ளத்தில் கிடந்த என்னையும் என் அம்மாவையும் அருகில் இருந்தவர்கள் தான் மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தார்கள். கிட்டத்தட்ட பல மணி நேரம் எனக்கு சிகிச்சை அளித்து என்னை காப்பாற்றினார்கள். அந்த தாக்குதலில் பெரிய அளவில் ரத்தத்தை இழந்துவிட்டேன். அப்போதே என் அப்பா செய்த நல்ல உதவிகளால் பலர் எனக்கு ரத்தம் தந்து என்னை காப்பாற்றினார்கள். இன்று நான் உயிருடன் இருப்பதற்கு காரணம் அந்த மனிதர்கள் தான் என உருக்கமாக பேசி உள்ளார். இந்த சம்பவம் அவரது வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பமாக இருந்ததுடன், மனித நேயத்தின் அருமையை உணர்த்தியதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த அனுபவம் தான் இன்று வாழ்க்கையை வேறுபட்ட பார்வையில் பார்க்க உதவியது என்றும் ரேஞ்சல் தெரிவித்துள்ளார்.

ஆயுர்வேத மருத்துவர்: 1989 ஆம் ஆண்டு வேலூர் மாவட்டத்தில் பிறந்த ரேஞ்சல் ரெபேக்காவின் குடும்பம் ஆயுர்வேத மருத்துவ துறையில் இருந்ததால், சிறுவயதிலிருந்தே அவருக்கும் மருத்துவராக வேண்டும் என்ற கனவு இருந்ததால், ஆயுர்வேத மருத்துவரானார். ஆனால், வாழ்க்கை அவரை சினிமா துறைக்கு கொண்டு வந்தது. தற்போது, இவர் விஜய் நடித்த கடைசி திரைப்படமாக கருதப்படும் "ஜனநாயகம்" படத்தில் ரேஞ்சல் ரெபேக்கா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் வெளியான பிறகு அவருக்கு மேலும் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொண்டிருந்தாலும், தனது முயற்சி மற்றும் தைரியத்தின் மூலம் முன்னேறி வரும் ரேஞ்சல் ரெபேக்கா, இனி தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நடிகையாக உருவெடுப்பார் என்பதில் சந்தேகமில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X