ஆபாச போட்டோவை காட்டி பிளாக் மெயில்.. ஸ்ரீலங்கா பொண்ணு ஆதியால் செத்தே போச்சு.. தாமரை செல்வி பேட்டி!
சென்னை: சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதாவின் கணவர் ஆதி மீது, நடிகை தாமரை செல்வி 3 சவரன் நகையை ஏமாற்றிவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கும் நிலையில், ஆதி மீது தாமரை செல்வி பல அதிர்ச்சிகரமான தகவலை பேட்டியில் கூறியுள்ளார்.
யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த தாமரைச்செல்வி, தான் மிகவும் கஷ்டப்பட்டு கடுமையாக உழைத்து இந்தநிலைக்கு வந்து இருக்கிறேன். ஆதியை நான் தம்பி போல நினைத்து வீட்டில் தங்கவைத்தேன். ஆனால், அவன் நகைகளையும் ஏமாற்றி எடுத்து சென்றுவிட்டான். "சின்ன மருமகள்" சீரியலில் நடித்த காலத்தில், ஆதி எப்போதும் ஸ்வேதாவுடன் தான் இருப்பான். அவர் மீது வைத்த நம்பிக்கையால் ஷூட்டிங் நேரத்தில் என் மொபைலை அவரிடம் கொடுத்து விட்டு செல்வேன்

தாமரைசெல்வி பேட்டி: நாங்க, கோவா சென்றபோது, கேசினோ விளையாட்டில் பணம் சம்பாதிக்கலாம் என கூறி, தன்னை நம்ப வைத்து பெரும் தொகையை இழக்க வைத்துவிட்டார். அந்த விளையாட்டை பற்றி எனக்கும் என் கணவருக்கும் எதுவுமே தெரியாது. ஆதியின் வார்த்தைகளை நம்பி பணத்தை கொடுத்ததாகவும், அதன் மூலம் முழு தொகையும் இழந்துவிட்டோம். திரும்பி வருவதற்கு கூட எங்களிடம் பணம் இல்லாமல் ஒருவரிடம் கடனை வாங்கி அந்த பணத்தில் சென்னை வந்தோம்.
ஏமாற்றிவிட்டான்: அப்போது தான் ஆதியின் சுயரூபமே தெரிந்தது. அதன் பின்னர் ஏற்பட்ட பிரச்சனைகளால் தான், உதவியாக கொடுத்த மூன்று சவரன் நகையை திருப்பி கேட்டோம். ஆதி திருப்பி தராததால், அவரது குடும்பத்தினரிடம் கேட்டபோது, நிலத்தை விற்று பணம் தருகிறோம் என்று கூறி காலதாமதம் செய்தார்கள். இப்படியே பல மாதங்கள் போய்விட்டதால், வேறு வழியே இல்லாமல் தான் காவல் நிலையத்தில் ஆதி மீது புகார் கொடுத்தோம். தேர்தல் பணிகள் முடிந்த பின்,எஃப்.ஐ.ஆர் போடுவதாக சொல்லி இருக்கிறார்கள்.
பிளாக் மெயில்: ஆதியால் ஏமாந்தவர்கள் நான் மட்டுமல்ல, பலர் இருப்பதாகவும், ஆனால் அவர்கள் வெளியில் பேசவில்லை என்றும் கூறினார். குறிப்பாக, இலங்கையை சேர்ந்த ஒரு பெண்ணை ஆதி பிளாக்மெயில் செய்து அந்த பெண் இப்போது உயிருடனே இல்லை. அந்த பெண்ணுடன் ஆதி வீடியோ காலில் நெருக்கமாக பேசி இருக்கிறார். அதை அப்படியே ரெக்கார்ட் போட்டு வைத்துக்கொண்டு, அந்த பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், தொடர்ந்து பணம் கொடுக்க முடியாத நிலையில், அந்த பெண் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டதாக தாமரை செல்வி அந்த பேட்டியில் ஆதி மீது பல புகார்களை கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











