சுகன்யாவிற்காக காத்திருந்த ரஜினி.. வாழ்க்கையை சிதைத்த அரசியல் புள்ளி.. பிரபலம் சொன்ன தகவல்!

சென்னை: 80 காலகட்டத்தில் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சுகன்யா. பரதநாட்டிய கலைஞரான இவர் நடிப்பை தாண்டி நாட்டியம், இசையின் மீது மிகவும் ஆர்வம் கொண்டவர். புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார், முதல் படத்திலேயே விருதுகளை பெற்றார். அதன் பின் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது சினிமாவில் இருந்த ஒதுங்கி இருக்கும் இவர் குறித்து தமிழா தமிழா பாண்டியன் யூடியூப் சேனல் ஒன்றில் பேசி உள்ளார்.

அதில், நடிகை சுகன்யா,ஒரு பாரம்பரிய இசை குடும்பத்தை சேர்ந்தவர் அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற விருப்பமே இல்லை. அவருக்கு பல வாய்ப்புகள் தேடி வந்த போதும், விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டார். ஜெர்மன் நாட்டில் நடைபெற்ற கலாச்சார விழாவில் நடிகை சுகன்யா நாட்டியம் ஆடிவிட்டு, விமானத்தில் வரும் போது தான் கங்கை அமரன் சுகன்யாவிடம், தான் ஒரு படத்தை இயக்கப் போகிறேன் அந்த படத்தில் நீங்கள் நடிக்க சம்மதமா என்று கேட்டுள்ளார். ஆனால் சுகன்யாவோ எனக்கு நடிப்பதில் விருப்பம் இல்லை என்று கூறிவிட்டார்.

suganya thamizha thamizha pandian interview

கங்கை அமரன் செய்த வேலை: சுகன்யா சினிமாவில் நடிக்க வேண்டும் என்று அவரது பெற்றோர்கள் விரும்பியதால் அவரது ஜாதகத்தை ஜோசியரிடம் காட்டிய போது. இவர் சினிமா வேண்டாம் என்றாலும் சினிமாவில் இவருக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்று கூறியுள்ளனர். இதன் பிறகு தான், கங்கை அமரன் வற்புறுத்தி நடிகை சுகன்யாவை புது நெல்லு புது நாத்து என்ற படத்தில் நடிக்க வைத்தார். அவர் நடித்த முதல் படமே மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று அடுத்தடுத்து திரைப்படங்களில் காமிட்டானார்.

சுகன்யாவிற்காக காத்திருந்த ரஜினி: ரஜினியின் முத்து படத்தில் கமிட்டான போது, ரஜினியே மீனா கதாபாத்திரத்தில் சுகன்யா நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறி இருக்கிறார். இதற்காக பட குழுவினர், சுகன்யாவின் கால்ஷீட்டுக்காக ஒரு மாத காலம் காத்திருந்தனர். ஆனால், அப்போதும், அவரின் கால்ஷீட் கிடைக்க தாமதமாகிக் கொண்டே சென்றதால், அந்த கதாபாத்திரத்தில் மீனா நடித்தார். அதன் பிறகு சுகன்யாவால் ரஜினியுடன் சேர்ந்து எந்த படத்திலும், நடிக்கவே முடியாமல் போய்விட்டது. முத்து படத்தில் மட்டும் ரஜினிக்கு ஜோடியாக சுகன்யா நடித்திருந்தால் தற்போது வரை அவர் தான் டாப் நடிகைகளில் ஒருவராக இருந்திருப்பார்.

suganya thamizha thamizha pandian interview

வாழ்க்கையை சிதைத்த அரசியல் புள்ளி: அதுமட்டுமில்லாமல் அரசியல் பிரமுகர் ஒருவருடன் சுகன்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டதால், பட தயாரிப்பாளர்கள் அவரை அணுகுவது சிக்கலாக இருந்தது. சுகன்யாவுக்கு கதை சொல்ல போக வேண்டும் என்றாலும், ஈசிஆரில் உள்ள பெரிய பண்ணை வீட்டிற்கு தான் செல்ல வேண்டும். அதேபோல, அந்த அரசியல் பிரமுகரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது. அதே நேரத்தில், நடிகை சுகன்யா வீட்டிலும் சோதனை நடந்தது. அந்த அளவுக்கு சுகன்யாவிற்கு அரசியல் செல்வாக்கு இருந்தது. இதனால், தயாரிப்பாளர்கள் அவரிடம் கதை சொல்வதற்கே பயந்து ஒதுங்கினார்கள். இதுவே நடிகை சுகன்யாவின் மார்க்கெட் சரிய ஒரு காரணமாக அமைந்துவிட்டது. அதன் பிறகு தான் பொறியாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானார். ஆனால், அந்த வாழ்க்கையும் சரியாக அமையவில்லை என்று தமிழா தமிழா பாண்டியன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X