twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டேம் 999 படத்தில் பென்னிகுயிக்கை ஊழல்வாதியாக சித்தரித்தது நன்றி கெட்ட செயல்- தங்கர்பச்சான்

    By Sudha
    |

    Thangar Bachan
    சென்னை: சமீபத்தில் டேம் 999' என்ற படத்திற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. இருந்தாலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் அந்த படம் திரைக்கு வந்தது. அந்தப்படத்தில், தமிழர்களை விரோதிபோல சித்தரித்தும், அணையை கட்டியவரை ஊழல்வாதி என்றும் காட்டியுள்ளனர். இது நன்றி கெட்ட செயல்.

    முல்லைப்பெரியாறு அணையை, தனது சொத்துக்களை விற்று கட்டிய ஆங்கிலேய பொறியாளர் பொன்னி குயிக்கை நினைவு கூர்ந்து நன்றி செலுத்தும் வகையில், அவரது உருவப்படம் சென்னை வண்ணார்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவில் உள்ள காமராஜ் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் கே.ராஜன் தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தங்கர்பச்சான் கலந்து கொண்டார். கூட்டத்திற்குப் பின்னர் தங்கர்பச்சான் பேசுகையில்,

    முல்லைப்பெரியாறு அணையின் மூலம் தமிழகத்தில் உள்ள 6 மாவட்ட விவசாய நிலம் பயன்பெற்று வருகிறது. இந்த அணையை பென்னி குயிக் என்ற ஆங்கிலேய பொறியாளர், தனது சொத்தை விற்று கட்டினார் என்ற வரலாற்றை கேட்கும்போது நமக்கு பெருமையாக இருக்கிறது.

    எனவே, பென்னி குயிக்கின் வரவாற்றை மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில், பாடத்திட்டத்தில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முல்லைப்பெரியாறு அணையின் பெயரை பென்னி குயிக் என்று மாற்றி வைத்து, அந்த வரலாற்று சின்னத்தை எக்காலமும் பாதுகாக்க வேண்டும்.

    சமீபத்தில் டேம் 999' என்ற படத்திற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. இருந்தாலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் அந்த படம் திரைக்கு வந்தது. அந்தப்படத்தில், தமிழர்களை விரோதிபோல சித்தரித்தும், அணையை கட்டியவரை ஊழல்வாதி என்றும் காட்டியுள்ளனர். இது நன்றி கெட்ட செயல்.

    எனக்கு யாராவது நிதியுதவி அளிக்க முன்வந்தால், இருமாநில மக்களுக்கும் ஏற்றுக்கொள்ளும் வகையில் முல்லைப்பெரியாறு அணை பற்றிய கதையை படமாக எடுக்க தயாராக உள்ளேன்.

    முல்லைப்பெரியாறு பிரச்சினையில் தமிழக அரசியல் தலைவர்களின் குரல் மட்டும் ஒன்றாக உள்ளது. ஆனால், செயல் வடிவில் ஒன்று சேர வேண்டும். அவர்கள் சேர்ந்து குரல் கொடுப்பது மகிழ்ச்சி தருகிறது. ஆனால் இதற்கு முன்பு அவர்கள் தங்களது சுய நலத்தைக் கருதியே செயல்பட்டனர். இப்போதும் அப்படித்தான் செயல்படுகின்றனர். அதை விட்டு விட்டு மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். அனைத்து தலைவர்களும் ஒரே மேடையில் நின்று என்றைக்கு குரல் கொடுக்கிறார்களோ, அப்போதுதான் தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்கும். மத்திய அரசும் தனது கவனத்தை திருப்பும்.

    தற்போது, நடந்து வரும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய அரசு கேரள அரவை கண்டித்து, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரும் வரை அமைதிகாக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழக அய்யப்ப பக்தர்களும் கேரள எல்லையில் அடிவாங்க மாட்டார்கள் என்றார் அவர்.

    English summary
    Director Thangar Bachchan has slammed the director of DAM 999 for portraying Engineer Penny quick as corrupt in his movie. He called the TN politicians to unite for the cause of state people.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X