For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தர்ஷா.. பேரின்ப தரிசனம்!

  By Staff
  |

  திரிஷா, தனிஷா என ஷா வரிசை நாயகிகள் அணிவகுத்துக் கொண்டிருக்கும் கோலிவுட் களேபரத்தில் புதிதாகவந்துள்ள ஷாதான் தர்ஷா.

  தர்ஷா ரொம்ப க்யூட். படு அழகாக இருக்கிறார். மும்பைக்காரம்மா. அங்கே மாடலிங்கில் அல்லாடிக்கொண்டிருந்தார். இப்போது கோலிவுட்டில் மல்லுக்கட்ட வந்திருக்கிறார்.

  தர்ஷாவின் முழுப் பெயர் திவ்யதர்ஷினியாம். ஆனால் இம்புட்டு நீளமாக இருந்தால் வாயில் நுழையாதேம்மாஎன்று சொல்லப் போக அப்படியா என்று தர்ஷா என்று சுருக்கி விட்டார்.

  அம்மணி நடிக்கும் முதல் படம்தான் பேரின்பம். படத்தின் பெயரிலேயே பேரின்பத்தை வைத்து விட்டதால்,தர்ஷாவின் தரிசனமும் திவ்யமாக இருக்கும் என நம்பலாம்.

  எப்படி இங்கே வந்தீர்கள் என்று (வழக்கம் போல) கேட்டோம். வழக்கம் போல மீடியேட்டர் மூலமாகத்தான்நானும் தமிழ் சினிமாவுக்கு வந்தேன். இங்கே மும்பை அழகிகளுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருக்காமே? எனவேஎனக்கும் நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்ற தெம்பில்தான் வந்துள்ளேன் என்று ஆரம்பித்தார்.

  எனது புகைப்பட ஆல்பத்தைப் பார்த்த இயக்குநர் கே.ஜே. எனது அடுத்த நாயகி (அதாவது படத்துக்கு) என்றுகூறி என்னைப் புக் செய்தார். இதில் நான் ஜாலியான, மாடர்ன் பொண்ணாக நடிக்கிறேன். அசத்தலான ரோல்.

  படு கேஷுவலான பொண்ணாக வருகிறேன். கிளாமர் கண்டிப்பாக உண்டு. அத்தோடு நடிக்கவும் நல்ல வாய்ப்புஇருக்கிறது. பின்னிண்டிருக்கேன் என்று உற்சாகமாக பேசுகிறார் தர்ஷா.

  பார்ட்டிக்கு பரதநாட்டியம் கூடத் தெரியுமாம். 3 வருஷமாக கத்துண்டிருக்காராம். அத்தோடு வெஸ்டர்ன்,ஈஸ்டர்ன், சதர்ன் என அத்தனை வகை டான்ஸ் ஐட்டங்களும் அத்துப்படியாம்.

  தமிழ் சினிமாவில் தர்ஷாவுக்கு ரொம்பப் பிடித்த நடிகை நம்ம ஜோதானாம். ஜோதிகாவைப் போலகுறும்புத்தனமான கேரக்டர்தான் நானும். அதேபோன்ற ரோலில் பின்னிப் பெடலெடுக்க ஆசையாக உள்ளேன்என்கிறார் கன்னம் சிவக்க சிரித்தபடி.

  பேரின்பம் படத்தில் தர்ஷா மட்டும் ஹீரோயின் கிடையாதாம். இன்னொரு குட்டியும் இருக்கிறாராம். இருந்தாலும்தர்ஷா கவலைப்படவில்லையாம். எத்தனை பேர் இருந்தால் என்ன, நம்ம ரோலை சிறப்பாக செய்து பெயரைத்தட்டிப்புட மாட்டோம் என்று படு தைரியமாக போட்டுத் தாக்குகிறார்.

  சரி கிளாமர் சைடை எடுத்து விடுங்க என்று ஏரியா வுக்குத் தாவினோம். இப்படத்தில் கிளாமராகத்தான்நடிக்கிறேன். அதேசமயம் கிளாமராக மட்டும் நடிக்கவில்லை. ஸ்டில்களைப் பார்த்து விட்டு எதையும் எடைபோடக் கூடாது. அது படத்தைப் பற்றிய பரபரப்புக்காக எடுக்கப்பட்ட போஸ்கள்தான். மற்றபடி கதைக்குத்தேவையில்லாத கிளாமர் கண்டிப்பாக படத்தில் இருக்காது (புகைப்படத்தில் மட்டும்தான் இருக்குமோ?)என்கிறார்.

  தர்ஷா இப்படிக் கூறினாலும் அவரை படத்தில் திணித்ததன் முக்கிய நோக்கமே வேறு என்பது போல அவர்கொடுத்துள்ள போஸ்களின் அப்பட்டம் அப்படியே முகத்தில் அறைகிறது.

  திரிஷாவை பீட் பண்ண ஆசையோ என்று கேட்டால், அப்படியெல்லாம் கிடையாது. எனது பெயரை சுருக்கித்தான்தர்ஷா என வைத்தேன். மற்றபடி யாரையும் நான் போட்டியாகவே நினைக்கவில்லை என்கிறார்.

  தருசா போகாம இருந்த சரித்தான்!

  Read more about: tharsha in perinbam
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X