ஒரே டேக்கில் முத்தக்காட்சி.. அசத்திய அஞ்சலி நாயர்.. பாராட்டி தள்ளிய படக்குழுவினர்!

சென்னை: அறம் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரிப்பில் ராகவ் மிர்தத் இயக்கத்தில் நடிகை அஞ்சலி நாயர், அறிமுக நடிகர் கௌசிக் ராம் நடிப்பில் உருவாகியுள்ள படம் காலங்களில் அவள் வசந்தம்.

நடிகை அஞ்சலி நாயர் நடித்த டாணாக்காரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வருமான ரீதியாகவும் நல்ல வசூலையும் பெற்று தந்தது. பல விருதுகளையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை அஞ்சலி நாயர் மற்றம் கௌசிக் ஆகியோர் நமது ஃபிலிம் பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

நல்ல விஷயத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்

நல்ல விஷயத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்

கேள்வி: கௌசிக், நீங்கள் நடித்துள்ள காலங்களில் அவள் வசந்தம் படத்தின் மையக்கருத்து என்ன?

பதில்: திருமணத்திற்கு பிறகு வரும் ரொமான்ஸ் குறித்த படம் தான் இது. சினிமாத்தனமாக வாழ்கின்ற ஒரு இளைஞன், ஒரு கட்டத்தில் அந்த வாழ்க்கையிலிருந்து விலகி நிஜ வாழ்க்கைக்கு வருகிறான். ஒவ்வொருவரும் சினிமா பார்க்கும்போது, படத்தில் வருகின்ற கதாபாத்திரங்களாக தன்னை கற்பனை செய்து கொள்வார்கள். நிஜ வாழ்க்கையில் நடக்கின்ற சம்பவங்கள், சில சமயம் சினிமாவில் வருவது போல், சினிமாவில் வருகின்ற சில சம்பவங்களை நிஜ வாழ்க்கையில் வருவதற்கு முயற்சி செய்வார்கள். அது நல்ல விஷயமாக இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். தவறாக இருந்தால் அதிலிருந்து விலகி விட வேண்டும் என்பது தான் படத்தின் மையக்கரு என்றார்.

நிஜவாழ்க்கை பிரதிபலிப்பு

நிஜவாழ்க்கை பிரதிபலிப்பு

கேள்வி: அஞ்சலி, நீங்கள் ஏற்று நடித்த கதாபாத்திரம் குறித்து...

பதில்: நான் நெடுநல்வாடை, டாணாக்காரன் போன்ற நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்துள்ளேன். இந்த படத்தில் வருகின்ற ராதை கதாபாத்திரம், என்னுடைய நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கிற கதாபாத்திரம். அதனால் இந்த படத்தில் நடித்தது எனக்கு சிரமமாக தெரியவில்லை. நான் முன்பு நடித்த படங்களில் காஸ்ட்யூமுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. ஏனெனில் அந்த படங்களின் கதாபாத்திரங்கள் கிராமத்து பெண், பெண் போலீஸ். ஆனால் இப்படத்தில் மாடர்ன் பெண்ணாக நடித்துள்ளேன். படத்தில் என்னுடைய காஸ்ட்யூம் ரொம்ப அருமையாக இருக்கும். இந்த ராதை கதாபாத்திரத்தை இயக்குநர் ரொம்ப ரசித்து உருவாகியுள்ளார் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ரொமான்ஸ் மற்றும் முத்தக்காட்சிகளில் நடிக்கும் பொழுது எந்தவித ஃபீலும் தோன்றவில்லை. ஏனென்றால் படப்பிடிப்பு தளத்தில் அனைவரின் முன்னிலையில் நடிப்பது மட்டுமின்றி, டயலாக்கும் பேச வேண்டும். என்னை பொறுத்தவரை காட்சிகள் நன்றாக வரவேண்டும் என்று மட்டுமே விரும்பினேன். ஆனால் தியேட்டரில் பார்க்கும்பொழுது கண்டிப்பாக எல்லோருக்கும் அவரவர்களுடைய காதல் அனுபவம் நினைவுக்கு வரும் என்றார்.

நேரம் வீணாகக்கூடாது

நேரம் வீணாகக்கூடாது

கேள்வி: கௌசிக், நடிகை அஞ்சலி நாயருடன் நடித்த அனுபவம் எப்படியிருந்தது?

பதில்: இது எனக்கு முதல் படம். ஆரம்பத்தில் கொஞ்சம் பயமாக இருந்தது. நடிகை அஞ்சலி நாயர் எனக்கு சீனியர். யாரோட நேரத்தையும் வீணாக்க கூடாது என்பதற்காக நிறைய பயிற்சி எடுத்துக் கொண்டு தான் படப்பிடிப்பு தளத்திற்கு வருவேன். முதலில் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் போது, கொஞ்சம் தயக்கமாக இருந்தது. ஆனால், கதைக்குத் அவசியமான முத்தக்காட்சிகளில் நடிக்கும் போது, என்னை நான் திருமணமான ஒரு ஆணாக கற்பனை செய்து கொள்வேன். இந்த முத்தக்காட்சிகளை கூட, இயக்குநர் அழகாக படமாக்கி உள்ளார். நடிகை அஞ்சலி நாயர் எதார்த்தமாக இருந்ததால், என்னால் ஈஸியாகவும், முத்தக்காட்சிகளில் நடிக்கும்போது ஒரே ஷாட்டில் நடிக்கவும் முடிந்தது என்றார்.

பிடித்த டயலாக்

கேள்வி: கௌசிக், இப்படத்தில் வருகின்ற கதாபாத்திரங்களில் உங்களுக்கு பிடித்தது காதலியா? மனைவியா?

பதில்: இந்தப் படத்தில வருகின்ற காதலி, மனைவி இரண்டு பேருமே எனக்கு ரொம்ப பிடிக்கும். அதிலும் ராதை கதாபாத்திரம் ரொம்பவும் பிடிக்கும். ‘நீ நீயா இரு' என்று ராதை என்கிட்ட சொல்வார்கள். அது தான் இந்தப் படத்தில் எனக்கு பிடிச்ச டயலாக். நிஜவாழ்க்கையிலும் நாம் அப்படி இருந்தால், வாழ்க்கை நன்றாக இருக்கும். சினிமாத்தனமாக வாழுகின்ற கணவனை, நிஜ வாழ்க்கைக்கு கொண்டு வருகின்ற கதாபாத்திரம் தான் ராதையின் கதாபாத்திரம் என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/hRBd0lBaBi0 இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X