எங்களுக்கு கிடைத்த முதல் விருது டம்ளர்.. அருண் அரவிந்த் பெருமிதம் !
சென்னை : மேடை நகைச்சுவை கலைஞர்களான அருண் மற்றும் அரவிந்துடன் ஒரு சந்திப்பு.
அருண் மற்றும் அரவிந்தை நாம் விஜய் தொலைக்காட்சி முதல் பல மேடை நிகழ்ச்சிகளிலும் பல கல்லூரி விழாக்களிலும் பார்த்திருப்போம். இவர்கள் இரட்டையர்கள் என்பதாலே பலரும் இவர்கள் செய்யும் நகைச்சுவை சாகசங்களை விரும்பி பார்பார்கள். தற்போது கேஸ்டிங் இயக்குனர்களாக இவ்விரண்டு இரட்டையர்களும் செயல்பட்டு வருகின்றனர் .

மக்கள் பலருக்கு அறிமுகமில்லாத வார்த்தை இந்த கேஸ்டிங் இயக்குனர் பதவி, இந்த கதைக்கு இந்தந்த நடிகர் நடிகையர்கள் சரியாக இருப்பார்கள் என்று தீர்மானிப்பதே இந்த கேஸ்டிங் இயக்குனர்களின் வேலை. வெளிநாட்டு சினிமாக்களில் இது சாதராண ஒரு விஷயம் என்றாலுமே. தமிழ் சினிமாக்கு இப்போது தான் அதிகரித்து வரும் பணி இதுவாகும் .
இவர்கள் பெரும்பாலுமான மேடைகளில் ஒற்றுமையாக செயல்பட்டு அனைவரையும் சிரிக்க வைப்பார்கள். மேலும் பலரும் இவர்கள் சண்டை போட்டுகொள்ளவே மாட்டார்கள் என்று சொல்வார்கள். இதற்கு சமீபத்தில் ஒரு பேட்டியில் பதில் கூறியுள்ள அருண், அரவிந்த் நாங்கள் அதிகமாக சண்டை போடுவோம் அந்த சண்டையின் இறுதியில் எங்களுக்கான சரியான பதில் கிடைத்து விடும். எங்கள் சண்டை தான் எங்களுக்கான பலம் என்று தெரிவித்துள்ளனர்.

எங்களுக்கு தற்போது பல விருதுகள் கிடைத்துள்ளன. ஆனால் எங்களுக்கு கிடைத்த முதல் அங்கீகாரம் நான்காவது படிக்கும் போது ஆறுதல் பரிசாக கிடைத்த டம்ளர் என்றனர். அந்த டம்ளர் தான் எங்களின் முதல் விருது என்று கூறியுள்ளனர்.

மேடைகள் மற்றும் கல்லூரி விழாக்கள் என்று எதை எடுத்து கொண்டாலும் அரவிந்த் மட்டும் தான் அதிகமாக பேசுவார் விஷயங்களை அதிகமாக பகிர்வார் அருண் மிகவும் குறைவாக பேசுவார் அல்லது பேசவே மாட்டார். ஒருத்தர் மேடைக்கு பின் உழைப்பதாகவும் மற்றொருவர் மேடை மேல் உழைப்பதாகவும் குறிப்பிட்டு கூறியுள்ளனர் .

இறுதியாக எங்களின் அம்மா தான் எங்களுக்கு எல்லாம் நாங்கள் நாளை எந்த தவறு செய்தாலும், அது எங்கள் அம்மாவை பாதிக்கும் பெரிய வெற்றியை பெற்றாலும் அது அம்மாவை சேரும் என்று கூறியுள்ளனர். இதனால் சமீபத்தில் சிறந்த பெற்றோர் என்று ஒரு விருது எங்கள் அம்மாவுக்கு எங்களால் கிடைத்திருக்கிறது அது எங்களுக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம் என்று மகிழ்ச்சி நிரம்ப கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











