twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நானும் நிறைய தப்பு பண்ணி இருக்கேன் இப்போ திருத்திகிட்டேன் - சப்டைட்டில் பிரதீப்

    |

    Recommended Video

    Pradeep Exclusive Interview

    சென்னை: வசனம்கிறது உணர்ச்சிகளை வெளிக்கொண்டு வர்றது. நாம ஏன் இதை எடுத்து செய்யக்கூடாதுன்னு தோணிச்சி. அதனால் இதுல இறங்கிட்டேன். இதையே இப்போ ரொம்ப ஜாலியா என்ஜாய் பண்ணி பண்றேன். இதுவே இப்போ முக்கியமான புரொஃபஸனா மாறிடிச்சி என்கிறார் பிரதீப்.

    இந்தியாவில் தொலைக் காட்சி சாதனம் நுழைந்த 1980களில் மத்திய அரசின் வசம் இருந்த தூர்தர்ஷன் மட்டுமே நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்தது. அவை பெரும்பாலும் இந்தி நிகழ்ச்சிகளாகவே இருந்ததால் மக்கள் யாருமே அதை கண்டுகொண்டதாக தெரியவில்லை.

    The verse is the expression of emotions-Subtitle Pradeep

    மக்களை கவரவேண்டுமென்றால், ஜனரஞ்சகமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டும் என்பதற்காக, வாரந்தோறும் தேசிய விருது பெற்ற மாநில மொழி திரைப்படங்களை ஒளிபரப்பத் தொடங்கினர். அந்த திரைப்படங்களையும் சம்பந்தப்பட்ட மொழி பேசும் மாநில மக்கள் மட்டுமே பார்த்து வந்தனர். மற்ற மாநில மக்கள் இந்த திரைப்படங்களை பார்ப்பதை தவிர்த்தனர்.

    தேசிய விருது பெற்ற படங்களை இந்தியாவிலுள்ள அனைத்து மொழி பேசும் மக்களும் பார்த்தால் தான் அந்த படங்களுக்கு உண்மையான அங்கீகாரம் கிடைக்கும் என்ற நோக்கில், மத்திய அரசு ஒரு புது முயற்சி எடுத்தது. அதன்படி மாநில மொழி படங்கள் ஒளிபரப்பாகும்போது, கூடவே படங்களில் பேசும் வசனங்களை அப்படியே மொழி பெயர்த்து, ஆங்கிலத்தில் சப்டைட்டிலாக காண்பித்தார்கள். இந்த புது முயற்சியால் படம் பார்க்கும் பெரும்பாலானவர்களுக்கு எளிதில் வசனங்களை புரிந்துகொள்ள முடிந்தது. இதனால், நாளடைவில் அதிக அளவிலான மக்கள் தேசிய விருது பெற்ற படங்களை பார்க்க தொடங்கினர்.

    தற்போது எடுக்கப்பட்டு வரும் பெரும்பாலான திரைப்படங்கள் வெளிநாடுகளிலும் திரையிடப்படுவதால், அங்குள்ள மக்கள் படங்களை பார்த்து புரிந்துகொள்ள ஏதுவாக, சப்டைட்டிலோடு தான் படத்தையே தயாரிக்கிறார்கள். இதனால் படத்தின் வசூலும் அதிகரிக்கும். சப்டைட்டில் இல்லாமல் படம் பார்த்தோமானால், கிராமத்தான் சைனிஷ் படம் பார்த்த மாதிரி தான் இருக்கும்.

    சப்டைட்டில் உருவாக்குவதே ஒரு கைதேர்ந்த தொழிலாக மாறிவருகிறது. சப்டைட்டில் உருவாக்குவதில் கை தேர்ந்த நடிகர் பிரதீப் நமது ஃபிலிமி பீட்டுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.

    The verse is the expression of emotions-Subtitle Pradeep

    சப்டைட்டில் வேலையை நான் இரண்டாம் பட்சமாகத் தான் எடுத்து செய்கிறேன். என்னுடைய முதல் வேலை நடிப்பு தான். அதில் தான் நான் முழு கவனமும் செலுத்த வேண்டியுள்ளது. சப்டைட்டில் மார்கெட்டில் தேவை இருந்தது. அதனால் நான் அதையும் செய்து பார்க்கலாமே என்று நினைத்து தான் அந்த துறையை தேர்ந்தெடுத்தேன்.

    நான் முதன் முதலில் சப்டைட்டில் பண்ண ஆரம்பிச்சது, கார்த்திக் சுப்புராஜ் படத்தில் தான். அவர் தான் அனைத்து உதவிகளையும் செய்தார்.
    நான் தெகிடி படம் முடித்துவிட்டு, சில நாட்கள் பட வாய்ப்பு இல்லாமல் கால் சென்டர் வேலையில் இருந்த போது அப்போது எனக்கு நிறைய ஃப்ரீ டைம் கிடைச்சது. அப்போ நிறைய இங்கிலீஷ் படங்கள், கார்டூன்கள் பார்ப்பதுண்டு. அதே மாதிரி தமிழ் படங்களும் பார்ப்பதுண்டு.

    அப்பொழுது தான் எனக்கு தோன்றியது. இந்தப் படங்களுக்கு இப்படி ஏன் சப்டைட்டில் போட்டிருக்கு கூடாது, அப்படி போட்டிருக்கலாமே. இந்த வசனங்களுக்கு இந்த சப்டைட்டில் சூட் ஆகாது. வேற சப்டைட்டில் போட்டிருந்தா இன்னும் கொஞ்சம் நல்லா வந்திருக்கும் என்று.

    ஏன்னா வசனம்கிறது உணர்ச்சிகளை வெளிக்கொண்டு வர்றது. அதனால நாம ஏன் இதை எடுத்து செய்யக்கூடாதுன்னு தோணிச்சி. அதனால் இதுல இறங்கிட்டேன். இதையே இப்போ ரொம்ப ஜாலியா என்ஜாய் பண்ணி பண்றேன். இதுவே இப்போ முக்கியமான புரொஃபஸனா மாறிடிச்சி.

    நான் சப்டைட்டில் செய்த முதல் படம் ஜி.வி.பிரகாஷ் நடித்த டார்லிங் தான். இந்த படத்தில ரெண்டு ரீல் தான் பண்னியிருந்தேன். நான் முழுசா சப்டைட்டில் பண்ணின படம் கொம்பன் தான். இது வரைக்கும் சுமார் 150 படம் பண்ணியிருக்கேன்.

    என்னைப் பொருத்த வரைக்கும் சப்டைட்டில்ங்கிறது, அந்த படத்தையோ, விளம்பரத்தையோ, அல்லது வெப் சீரீஸையோ தாண்டி நான் நல்லா பண்ணியிருக்கேன்னு சொல்லக்கூடாது. அப்படி இருந்ததுன்னா படத்துல கவனம் இல்லாம போயிடும். எல்லோருமே படத்தை தான் விரும்பி பார்க்கணும்.

    அதே மாதிரி, மொழி தெரியாம ஒரு படத்தை நல்லா கவனிச்சி பாத்தாலே, 70 சதவிகிதம் புரிஞ்சிடும். மீதி இருக்குற 30 சதவிகிதம் புரியாம போயிடக்கூடாதே, அப்படிங்குறதுனால தான் சப்டைட்டில் பண்றது.

    சப்டைட்டில் பண்றதுக்குன்னு தனியா கோர்ஸ் எதுவும் கிடையாது. ஆனா நிறைய சாஃப்ட்வேர்ஸ் கிடைக்குது. அதை வச்சி நம்ம டெவலப் பண்ணிக்கிடலாம். இதுல சப்டைட்டில் எடிட் அப்பிடின்னு ஒரு சாஃப்ட்வேர் இருக்கு, அதுல தான் நான் டெவலப் பண்ணிக்கிட்டு இருக்கேன். ஆனா அது கொஞ்சம் காம்ப்ளிகேட்டட் சாஃப்ட்வேர். ஆனாலும் பழகப் பழக சரியாகிடும். கஷ்டம்னு நெனச்சா கஷ்டமாதான் இருக்கும்.

    சப்டைட்டில் பண்ணும்போது ஆரம்பத்துல தப்பு பண்ணுவோம். தப்பு பண்ண பண்ணதான் சரியாகும். நானும் நிறைய தப்பு பண்ணியிருக்கேன். பின்னடி பழக பழக தப்பு சரியாகிடிச்சி. நான் இப்ப பண்றது தமிழ்ல இருந்து இங்கிலீஷ்ல தான் சப்டைட்டில் பண்ணிட்டு இருக்கேன்.

    ஆனால், இங்கிலீஷ் படத்துல தமிழ் சப்டைட்டில் ரெடி பண்ணி போடுறதுங்கிறது நிறைய வேலைகள் பண்ணனும். ஏன்னா அதுக்குண்டான தமிழ் ஃபாண்ட் (Font) அவெய்லபிலிட்டி கிடையாது. அதனாலதான் நேரடிய சப்டைட்டில் போட முடியாது. சுருக்கமா சொல்லணும்னா தலைய சுத்தி மூக்க தொடுறது மாதிரி என்றார் பிரதீப்.

    English summary
    The dialogs are getting reveal emotions. Why shouldn't we take this? So I got down. This is what I am doing now and with enjoying.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X