twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘தி வாரியர்‘உண்மை கதை.. இயக்குநர் எனன சொல்லிருக்காருனு பாருங்க!

    |

    சென்னை : 'தி வாரியர்' திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை என இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

    தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் தி வாரியர் என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார். ராம் பொத்தினேனி ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் ஆதி வில்லனாக நடித்துள்ளார்.

    மேலும் இந்த திரைப்படத்தில் அக்ஷரா கவுடா, நதியா, பாரதிராஜா, ரெடின் கிங்ஸ்லி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீபிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இனி யாருமே தடுக்க முடியாது.. உலகம் முழுவதும் தட்டி தூக்கப்போகுது 'தி லெஜண்ட்’இனி யாருமே தடுக்க முடியாது.. உலகம் முழுவதும் தட்டி தூக்கப்போகுது 'தி லெஜண்ட்’

    உண்மை சம்பவம்

    உண்மை சம்பவம்

    இன்று வெளியாகி உள்ள தி வாரியர் திரைப்படம் குறித்து இயக்குநர் பல சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில், ராம் பொதினேனி முக்கிய வேடத்தில் நடித்துள்ள தி வாரியர் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் இதுவரை வெளிவராத ஒரு வித்தியாசமான போலீஸ் படமாக இருக்கும். "இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். ஆனால் நான் அதை வணிக சினிமா வடிவத்தில் மாற்றி இருக்கிறேன்.

    சினிமாவுக்கு மொழியில்லை

    சினிமாவுக்கு மொழியில்லை

    இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு என இருமொழியாக எடுக்க ஆரம்பம் முதலே திட்டமிடப்பட்டது. நடிகர் ராமும் தமிழில் அறிமுகமாக வேண்டும் என்று விரும்பியதால் அதை நான் நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டேன். வேறு மொழியில் படத்தை எடுப்பதால் வித்தியாசமாக உணரவில்லை. சினிமா மொழி உலகளாவிய மொழி என்பதால், நேரடி தெலுங்குப் படத்தை இயக்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    செம சின்சியாரிட்டி

    செம சின்சியாரிட்டி

    மேலும், இந்த படத்தில் வரும் ஹீரோ இந்த கதைக்கு கச்சிதமாக பொருந்தி இருந்தார். கதாபாத்திரத்திற்காக தன்னை 100 சதவீதம் மாற்றிக்கொண்டார். போலீஸ் லுக்கில் செட்டுக்கு வரும் போது அவரது உடல் மொழி கூட மாறிவிடும். இந்த கதாபாத்திரத்திற்காக அவர் காட்டிய அர்ப்பணிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. அவரின் அபார ஆற்றல், அவரின் சின்சியாரிட்டி, எனக்கு தமிழை சொல்லி கொடுக்கும் அளவுக்கு சரளமாள தமிழ் என்னை கவர்ந்து விட்டது என்றார்.

    ஆர்வமாக இருக்கிறேன்

    ஆர்வமாக இருக்கிறேன்

    ரன், சண்டகோழி ஆகிய படங்களில் எப்படி பணிபுரிந்தேனோ அதேபோன்று முழு மனதுடன் இந்தப் படத்திலும் பணியாற்றியிருக்கிறேன். இந்த படம் திரையங்கில் இன்று வெளியாகிறது. படத்தை மக்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை பார்க்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்.

    English summary
    Director Lingusamy says that, The Warrior is based on a real life incident
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X