ஜனநாயகன் சென்சார் பிரச்சனை.. ரெட் ஜெயண்ட் அரசியல் செய்கிறதா? திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி!
சென்னை: விஜயின் ஜனநாயகன், சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் பொங்கலுக்கு ஒன்றாக வெளியாக இருக்கும் நிலையில் இது மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து தியேட்டர் உரிமையாளரான திருப்பூர் சுப்பிரமணியம் சினி உலகம் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், கடந்த பத்து பதினைந்து நாட்களாக அனைவரும் இதே கேள்வியை தான் அனைவரும் கேட்டு வருகிறார்கள். இதற்கு முன் துணிவு, வாரிசு திரைப்படங்கள் ஒன்றாக வெளியாகவில்லையா? பேட்டை, விஸ்வாசம் ஒன்றாக வெளியாகவில்லையா? இதே போல பல திரைப்படங்கள் ஒன்றாக வெளியாகி இருக்கின்றன. இந்த சின்ன விஷயத்தை இணையத்தில் மிகப்பெரிய அளவில் பேசுவதை நினைக்கும் போது எனக்கு விசித்திரமாக இருக்கிறது.

திருப்பூர் சுப்பிரமணியம்: சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதி தான் வெளியாக இருந்தது. ஆனால் 9 ந் தேதியில் இருந்து விடுமுறை வருவதால், பராசக்தி படத்தை போடும் திரையரங்குகளில் வேறு படத்தை போட முடியாது என்பதால், அந்த திரைப்படத்தை ஜனவரி 10ஆம் தேதிக்கு மாற்றினார்கள். இதில், வேறு எந்த உள்நோக்கமும் இல்லை காரணமும் இல்லை.
ஜனநாயகன் பிரச்சனை: ஜனநாயகம் படத்தின் சென்சார் பிரச்சனை குறித்து பேசிய அவர், ஜனநாயகன் படத்திற்கு பல கட்டுகள் கொடுத்திருக்கிறார்கள். அதை சரி செய்து மீண்டும் படத்தை பார்த்தார்கள் அதற்குள் சனி, ஞாயிறுக்கிழமை வந்து விட்டதால், இதுவரைக்கும் சென்சார் சான்றிதழ் கொடுக்கவில்லை. ஆனால், இன்று இரவு அல்லது நாளையோ கட்டாயமாக படத்திற்கு சென்சார் கொடுத்து விடுவார்கள். அதில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. அதேபோல, ரெட் ஜெயண்ட் உள்ளே புகுந்து ஜனநாயகம் படத்திற்கு குறைவான திரையரங்குகளையும் பராசக்தி திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகளையும் கொடுத்து இருப்பதாக பல செய்திகள் வருகிறது. ஆனால், உண்மை அது இல்லை ஜனநாயகன் திரைப்படத்திற்கு தான் அதிக திரையரங்குகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஜனநாயகன் திரைப்படம் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது. அந்த படம் தான் அதிக வசூலை அள்ளும் என்று தியேட்டர் உரிமையாளரான திருப்பூர் சுப்பிரமணியம் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











