சூரரை போற்று பாத்துட்டு விஷ் பண்ணினேன்..தீதும் நன்றும் இயக்குனர் ராசு பேட்டி!
சென்னை: ராசு ரஞ்சித், ஈசன், அபர்ணா பாலமுரளி, நடிப்பில் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான படம் தீதும் நன்றும்.
அறிமுக இயக்குனர் ராசு ரஞ்சித் படத்தை இயக்கியுள்ளார், அவரே நாயகர்களில் ஒருவராகவும் நடித்துள்ளார்.
படத்தை இயக்கியது குறித்தும், படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் க்ளோஸ் கால் நிகழ்ச்சியில் பேட்டியளித்துள்ளார்.

க்லாசான எடிட்டிங்
படத்தை க்லாசாக எடிட் செய்தது யாரென்ற கேள்விக்கு, குறும்படம் இயக்கும் போதிலிருந்து எடிட்டிங் செய்து வருகிறேன். அதனால் எடிட்டிங்கை விட்டு கொடுக்க முடியாமல் தானே படத்தை இயக்கி எடிட் செய்ததாக கூறியுள்ளார் ராசு ரஞ்சித்.

முதலாவது படம்
இந்த படம் அபர்னா பாலமுரளி-க்கு முதலாவது படமாகும். சூரரை போற்று அபர்னா-க்கும், இந்த படத்தில் நடித்துள்ள அபர்னா-க்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்விக்கு, வித்யாசம் என்று சொல்ல முடியாது, அபர்ணா முகத்தில் ஒரு எதார்த்தம் உள்ளது, அவர் திறமையான நடிகை என பாராட்டி பேசியுள்ளார் ராசு ரஞ்சித்.

சபோர்டிங் ரோல்
பின்னர் சூரரை போற்று படத்தை குறித்து பேசிய ராசு ரஞ்சித், படத்தை பாராட்டியும் சூர்யாவிற்கு அடுத்து முக்கியமாக அபர்ணாவின் கதாபாத்திரம் சபோர்டிங்காக இருந்ததாகவும் கூறினார். படத்தை பார்த்த பின் அபர்னாவிற்கு விஷ் பண்ணதையும் குறிப்பிட்டுள்ளார்.

பெரிய நன்றி
நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் இருந்து வந்தவர் ராசு ரஞ்சித். அதில் குறும்படங்கள் இயக்க தொடங்கியதிலிருந்து இதுவரை ஆதரித்து, கைத்தட்டி ஊக்குவிக்கும் ரசிகர்களுக்கு பெரிய நன்றியை இந்த பேட்டியில் பதிவு செய்துள்ளார் ராசு ரஞ்சித்.


Click it and Unblock the Notifications











