For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஃபேமிலி மேன்3 வர அதிக வாய்ப்புகள் இருக்கு.. 2023ல நான் ரொம்ப பிஸி- ப்ரியாமணி ஓபன் டாக்!

  |

  சென்னை: ஹரி ஹரா பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் ராஜேஷ் ஆனந்த் லீலா இயக்கத்தில் நடிகை ப்ரியாமணி நடித்துள்ள படம் Dr. 56 வரும் டிசம்பர் 9ம் தேதி திரைக்கு வருகிறது.

  இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி தயாரித்தது மட்டுமின்றி நாயகனாக நடித்திருக்கிறார் ப்ரவின் ரெட்டி.

  இந்நிலையில் நடிகை ப்ரியாமணி, நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்து சிறப்பு பேட்டியை காணலாம்.

  கொஞ்சம் குறும்பு.. அதிகமான காதல்.. திருமணமாகி ஒரு மாதத்தை கடந்த ஹரீஷ் கல்யாண்! கொஞ்சம் குறும்பு.. அதிகமான காதல்.. திருமணமாகி ஒரு மாதத்தை கடந்த ஹரீஷ் கல்யாண்!

  யாரையும் நம்பக்கூடாது

  யாரையும் நம்பக்கூடாது

  கேள்வி: Dr. 56 படத்தில் நடித்தது குறித்து?

  பதில்: Dr. 56 படமானது வரும் 9ம் தேதி வெளியாகிறது. ரொம்ப சந்தோஷமாகவும், பயமாகவும் இருக்கிறது. மேலும் இந்த படத்தில் நான் சிபிஐ ஆபீசராக நடித்துள்ளேன். பொதுவாக எனக்கு ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பது ரொம்ப பிடிக்கும். தெலுங்குப்படங்களில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளேன். தெலுங்கு படங்களில் வரும் ஆக்ஷன் காட்சிகள் போல் இந்த படத்தில் காணப்படாது. ஹீரோ பில்டப் இல்லாமல் எதார்த்தமான சண்டைக்காட்சிகள் இருக்கிறது. மெடிக்கல் துறை குறித்து நிறைய படங்கள் வந்திருக்கிறது. ஆனால் Dr. 56ல் நாங்கள் தொட்டு இருக்கும் பகுதியை இதுவரை யாரும் படம் எடுக்கவில்லை. படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் சமுதாயத்தில் நடைபெற்று வருகிறது. கண்ணை மூடிக்கொண்டு யாரையும் நம்பக்கூடாது. விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார்.

  அழுகையே வந்து விட்டது

  அழுகையே வந்து விட்டது

  கேள்வி: பருத்தி வீரன் - 2 படம் வெளியாகுமா?

  பதில்: பருத்தி வீரன் கதாநாயகி முத்தழகு இறந்து விட்டாள். என்னை பொறுத்தவரை பருத்திவீரன் - 2 வருவதற்கு சாத்தியமில்லை. பருத்திவீரன் படத்தில் டப்பிங்கிற்கு மட்டும் 13 நாட்கள் எடுத்துக் கொண்டேன். கிளைமாக்ஸ் காட்சிகள் 4 முதல் 5 நாட்கள் எடுத்து கொண்டேன். இயக்குநர் அமீர் Pre-Climax காட்சியை காட்டும்பொழுது எனக்கு அழுகையே வந்து விட்டது. என்னால் முடியவே முடியாது என்று கூறினேன். பிறகு எனது அம்மாவின் அறிவுரையின்படி, அந்த வேலையை முடித்தேன். இயக்குநர் அமீர் கொடுத்த தைரியத்தால் மட்டுமே என்னால் கடைசி கிளைமாக்ஸ் காட்சியில் நடிக்க முடிந்தது என்றார்.

  Pan India Film

  Pan India Film

  கேள்வி: உங்களுடன் கையில் எத்தனை படங்கள் உள்ளன?

  பதில்: 2023ம் ஆண்டிற்கு நிறைய படங்கள் எனது கையில் உள்ளன. தமிழில் உருவாகி 9ம் தேதி வெளியாகவுள்ள Quotation Gang படம் கண்டிப்பாக Pan India படமாக வரும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் ஜாக்கி ஷெரவ், சன்னி லியோன் போன்றோர் நடித்துள்ளனர். வித்தியாசமான கதாபாத்திரத்தில் சன்னி லியோன் நடித்துள்ளார். மேலும் வெங்கட்பிரபு இயக்கத்தில் நாகசைத்யன்யாவுடன் ஒரு படத்திலும், அஜய்தேவனுடன் ஒரு படத்தில் நடித்து வருகின்றேன். மேலும் 2023ம் ஆண்டு ஃபேமிலிமேன் 3 வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது என்றார்.

  இயக்குநர்களின் பார்வையில்

  இயக்குநர்களின் பார்வையில்

  கேள்வி: யாருடைய Biography படங்களில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்?

  பதில்: அந்த மாதிரியான எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் Heavy Weight Lifter கர்ணம் மல்லேஸ்வரி Biography படங்களில் நடிப்பதற்கு என்னை அணுகினார்கள். கொஞ்சம் உடம்பு போட வேண்டும் என்றார்கள். நல்ல கதை அமைந்தால், எதையும் செய்ய தயாராக இருக்கிறேன். இயக்குநர்களின் பார்வையில் நான் இவருடைய கதாபாத்திரத்தை ஏற்று நடித்தால் நன்றாக இருக்கும் என்று கருதி என்னிடம் வரும்பட்சத்தில் கண்டிப்பாக நடிப்பேன் என்றார்.

  ஹெல்த்தி பிரியாணி

  கேள்வி: நீங்கள் வெட்கப்படுவது உண்டா?எது ரொம்ப பிடிக்கும்?

  பதில்: எனக்கு வெட்கப்பட தெரியாது. வெட்கப்படுவது என்பது எனக்கு கூச்சமாக இருக்கும். ஆனால் கதாபாத்திரம் என்று வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். பொதுவாழ்க்கையில் அது சாத்தியமில்லை என்றும், ஹெல்த்தி பிரியாணி என்றால் நன்றாக சாப்பிடுவதாகவும், சென்னைக்கு வந்தால் தோசை, சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவையும் பிடிக்கும் என்றும் தெரிவித்தார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/rq5eL492Sgw இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.

  English summary
  Priyamani Exclusive Interview: Priyamani Said that she have many films in hand for 2023. She think the Quotation Gang movie which is made in Tamil and released on 9th will definitely be a Pan India movie. Because Jackie Sherao and Sunny Leone have acted. Sunny Leone plays a different role. She added, I am acting in a film with Nagasaithanya and a film with Ajaydevan directed by Venkat Prabhu. He also said that there are chances of Familyman 3 coming in 2023
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X