Don't Miss!
- News
கைக்குழந்தைக்கு "தனி டிக்கெட்" கேட்ட விமான நிறுவனம்! பெற்றோர் எடுத்த விபரீத முடிவு! அலறிய ஏர்போர்ட்
- Finance
பட்ஜெட்டில் வெளியான 5 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. சம்பளதாரர்களுக்கு பயனளிக்குமா?
- Automobiles
எல்லாரும் வாங்க கூடிய விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! வர்ற 9ம் தேதி பெட்ரோல் வண்டிகளுக்கு எல்லாம் ஆப்பு!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
விஜய்யின் வாரிசு படம் தெலுங்கிலும் ரிலீஸ் செய்வதில் பிளஸ் பாயிண்ட் இருக்கு.. ப்ரியாமணி சுவாரஸ்யம்!
சென்னை: ஹரி ஹரா பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் ராஜேஷ் ஆனந்த் லீலா இயக்கத்தில் நடிகை ப்ரியாமணி நடித்துள்ள படம் Dr. 56 வரும் டிசம்பர் 9ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
பருத்திவீரன் படம் மூலம் தேசிய விருது பெற்ற நடிகை ப்ரியாமணி,சில வருடங்களுக்கு பிறகு ஃபேமிலி மேன் வெப் தொடர் மூலம் கம் பேக் கொடுத்தார். Dr. 56 படத்தின் கதை, திரைக்கதை எழுதி தயாரித்தது மட்டுமின்றி நாயகனாக நடித்திருக்கிறார் ப்ரவின் ரெட்டி.
இந்நிலையில் நடிகை ப்ரியாமணி, நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்து சிறப்பு பேட்டியை காணலாம்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அக்கவுண்ட் துவங்கிய ஷாலினி.. ஒரே நாளில் இத்தனை பாலோயர்களா?

கொஞ்சம் மாறியிருக்கிறார்
கேள்வி: நடிகர் தனுஷ் குறித்து நீங்கள் கூற விரும்புவது?
பதில்: என்னுடைய இரண்டாவது படம், இயக்குநர் பாலுமகேந்திராவின் அது ஒரு கனாக்காலம். இயக்குநர் சொன்னதை அப்படியே செய்தேன். அவருடைய எல்லா முயற்சிகளும் வித்தியாசமானவை. இது தான் சீன், இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று முதலில் கூறி விடுவார். அந்த படத்தில் நான் நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக நடித்தேன். தற்பொழுது நான் நடிகர் தனுஷை ஏர்போர்ட்டில் சந்தித்து பேசினேன். அசுரன் படத்தில் திறமையாக நடித்ததை நான் பாராட்டினேன். மேலும் தெலுங்கில் அசுரன் படத்தில் நான் நடித்தேன். நடிகர் தனுஷ் Physically கொஞ்சம் மாறியிருக்கிறார். ஆனால் Professional ரொம்ப அருமையாக நடித்து வருகிறார். வித்தியாசமான கதைகளத்தை கையில் எடுத்து திறம்பட நடித்து வருகிறார். அவர் ஹிந்தியில் நடித்துள்ள அனைத்து படங்களும் அருமையாக இருந்தது என்றார்.

திறமை, நடிப்பு முக்கியம்
கேள்வி: நீங்கள் எந்த மாதிரியான படங்களில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்?
பதில்: விருதை தாண்டி தான் நடிகைகளை பார்க்கவேண்டும். விருது கிடைக்கிறது என்பது இறைவன் கொடுத்தது. நம் தலையில் இறைவன் என்ன எழுதி இருக்கிறோனா அது நடைபெறும். படத்திற்கு விருது கிடைக்க வேண்டும் என்பதற்காக விருது பெற்ற என்னை படத்தில் நடிக்க வைக்கக்கூடாது. என்னுடைய திறமை, நடிப்பு போன்றவற்றை பார்த்து எனக்கு வாய்ப்பளிக்கவேண்டும் என்பது தான் எனது கருத்து.

வெற்றி, தோல்வி நம் கையில் இல்லை
கேள்வி: உங்களுடைய சினிமாப்பயணம் குறித்து..
பதில்: எனது முதல்படம் பாரதிராஜா இயக்கத்தில் உருவான கண்களால் கைது செய். பிறகு மாபெரும் இயக்குநர்களான பாலுமகேந்திரா, மணிரத்னம், அமீர் மற்றும் தெலுங்கில் ராஜமவுலி, ராம் கோபால் வர்மா, பூரி ஜெகநாத், மலையாளத்தில் மிகப்பெரிய இயக்குநர் வினயன் ஆகியோர் படங்களில் பணிபுரிந்தது என்பது என்னால் மறக்க முடியாது. என்னுடைய சினிமா பயணத்தில் தலைசிறந்த இயக்குநர்களுடன், நல்ல படங்களில் நடித்துள்ளேன் என்பது என்னால் மறக்க முடியாது. படத்தின் வெற்றி, தோல்வி என்பது நமது கையில் இல்லை. மேற்கண்ட இயக்குநர்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றார்.

இவர்கள் தான் காரணம்
கேள்வி: உங்கள் குடும்பம் குறித்து..
பதில்: சினிமாத்துறையில் இன்று நான் இந்த வளர்ச்சியை அடைந்ததற்கு காரணம் எனது அம்மா, அப்பா மற்றும் எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தான். இனி நான் சினிமாத்துறையில் பயணிப்பதற்கும் இவர்கள் தான் காரணமாக இருப்பார்கள் என்றார்.
தவறு கிடையாது
கேள்வி: விஜய்யின் வாரிசு படம் தெலுங்கில் வெளியாவது குறித்து...
பதில்: நடிகர் விஜய் தமிழ் சினிமாத்துறையில் ஓர் அடையாளமாக திகழ்கிறார். பொதுவாக தெலுங்கு சினிமாத்துறையில் தமிழ் படங்கள் பெரும்பாலும் வெளியாவதில்லை. ஒரு காட்சிகள் மட்டும் வெளியாகின்றன. நடிகர் விஜய்க்கு தெலுங்கிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். எனவே விஜய்யின் வாரிசு படத்தை தெலுங்கில் வெளியிடுவதில் தவறு ஒன்றும் இல்லை என்று தான் கருதுவதாக தெரிவித்தார். மேலும் நடிகைகள் எல்லா மொழிகளில் நடிப்பதுபோல், நடிகர்களும் அனைத்து மொழிகளிலும் நடிப்பது என்பது தவறு கிடையாது என்றும் தெரிவித்தார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/rq5eL492Sgw இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.