twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இதில் அரசியல் இல்லை.. அந்த பழக்கம் எனக்கு கிடையாது.. சூப்பர் பதில் சொன்ன அருள்நிதி!

    |

    சென்னை: பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் டைரி. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.

    எனது அண்ணன் உதயநிதி ஸ்டாலின் கம்பெனி மூலம் எனது படம் வெளியாவதில் சந்தோஷம் என்று நடிகர் அருள்நிதி கூறியுள்ளார்.

    நடிகர் அருள்நிதி, இயக்குநர் இன்னாசி பாண்டியன், இசையமைப்பாளர் ஆகியோர் நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

    ஷங்கர் மகளை தொடர்ந்து ஹீரோயினாக மாறிய மூன்றாவது டாக்டர்... அருள்நிதியின் டைரி அப்டேட்ஸ்ஷங்கர் மகளை தொடர்ந்து ஹீரோயினாக மாறிய மூன்றாவது டாக்டர்... அருள்நிதியின் டைரி அப்டேட்ஸ்

    அரசியல் இல்லை

    அரசியல் இல்லை

    கேள்வி: அருள்நிதி, இப்படத்தில் உங்கள் கதாபாத்திரத்தின் பெயரை அரசியலாக பார்க்கிறீர்களா?

    பதில்: படத்தில் எனது கதாபாத்திரத்தின் பெயர் வரதா அண்ணாத்துரை. அண்ணாதுரை என்ற பெயர் எனது கதாபாத்திரத்திற்கு அமைந்தது ரொம்ப சந்தோஷம். இதை நான் அரசியலாக பார்க்கவில்லை. பொதுவாக அண்ணா என்றால் அனைவருக்கும் பிடிக்கும். எனது அப்பா, நான் சிறுவயதாக இருக்கும்போதே 'அண்ணா தாத்தா' என்று தான் அழைக்க வேண்டும் என்பார்.

    நான் ஜெயித்தது போல்

    நான் ஜெயித்தது போல்

    கேள்வி: அருள்நிதி, தேஜாவு படம் வெற்றி பெற்றது குறித்து....

    பதில்: தேஜாவு படத்தின் மூலம் இயக்குநர் அரவிந்த் ஜெயித்ததை, என் வெற்றி போல் உணர்கிறேன். அவருக்கு எனது தனிப்பட்ட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். டைரி படமானது, இப்படத்தில் பணிபுரிந்துள்ள கேமராமேன் அரவிந்துக்கு, டிமாண்டி காலனி படத்துக்கு பிறகு அவருக்கு கண்டிப்பாக நல்ல பெயரை பெற்றுத்தரும் என்றார்.

    டைரி எழுத மாட்டேன், படிப்பேன்

    டைரி எழுத மாட்டேன், படிப்பேன்

    கேள்வி: அருள்நிதி, படப்பிடிப்பின் நீங்கள் எப்படி இருப்பீர்கள்?

    பதில்: நான் படப்பிடிப்பின்போது யாருடனும் பேச மாட்டேன். மற்றவர்களின் வேலையை தொந்தரவு செய்ய மாட்டேன். மற்ற சமயங்களில் ஜாலியாக இருப்பேன் என்றார்.

    கேள்வி: அருள்நிதி, உங்களுக்கு டைரி எழுதும் பழக்கம் உண்டா?

    பதில்: எனக்கு டைரி எழுதும் பழக்கம் கிடையாது. ஆனால் எனது மனைவி என்னுடன் கோபித்துக் கொண்டு டைரி எழுதுவார். அதை படிக்கும் பழக்கம் உண்டு என்றார்.

    இரட்டிப்பு சந்தோஷம்

    இரட்டிப்பு சந்தோஷம்

    கேள்வி: அருள்நிதி, ரெட் ஜெயண்ட் மூவீஸ் டைரி படத்தை வெளியிடுவது குறித்து...

    பதில்: கதை சரியாக இருந்தால், சரியான இடத்திற்கு படம் போய் சேரும். அதுபோல தான் இந்த படத்தை பெரிய கம்பெனி பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்தார். படத்தின் வெளியீடு ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்பதில் எனக்கு இரட்டிப்பு சந்தோஷம். எனது அண்ணன் உதயநிதி ஸ்டாலின் கம்பெனி மூலம் எனது படம் வெளியாவதில் சந்தோஷம் என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/pK-RfiLmomU இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். நடிகர் அருள்நிதி, இயக்குநர் இன்னாசி பாண்டியன், இசையமைப்பாளர் பல விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.

    English summary
    There is no politics in this and I don't have that habit, Arulnidhi gave a great answer
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X