என்னை அழிக்க திட்டம் போடுகிறார்கள்..பிரச்சனைகளை அடுக்கும் திவ்யா மீது அர்னவ் குற்றச்சாட்டு!

சென்னை: செல்லம்மா தொடரில் நடித்து வரும் நடிகர் அர்னவ்வுக்கும், செவ்வந்தி தொடரில் நடித்து வரும் நடிகை திவ்யாவும் காதலர்களாக இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். கடந்த ஜூன் மாதம் இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

சமீபத்தில் தனது கணவர் அர்னவ், தன்னை அடித்து துன்புறுத்துவதாக நடிகை திவ்யா போலீசில் புகார் செய்தார். மேலும் அவர் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீடியோக்களை இணையதளங்களில் வெளியிட்டார்.

இந்நிலையில் நடிகர் அர்னவ் நமது பிலீம்பீட்சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

அவள் முந்தி விட்டாள்

அவள் முந்தி விட்டாள்

கேள்வி: நடிகை திவ்யாவை நீங்கள் அடித்தீர்களா?

பதில்: என் தொழில் மீது ஆணையாக திவ்யாவை நான் அடிக்கவில்லை. சாதாரணமாக இருக்கும் பெண்ணை அடிப்பது தவறு என்று கருதும் நான், எப்படி கர்ப்பிணியான பெண்ணை அடித்திருப்பேன். மேலும் எங்கள் இருவருக்கும் இடையே வழக்கு உள்ளதாலும், இருதரப்புக்கும் வழக்கறிஞர்கள் உள்ள சூழ்நிலையில் நான் எப்படி அவரை அடித்திருப்பேன். திவ்யா என்னை அடித்ததற்கான ஆதாரத்தை நான் காட்டுவது போல், அவரை காட்டச் சொல்லுங்கள். நான் அடித்ததற்கான காயத்தை காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். சம்பவத்தன்று நான் காலையில் தான் வீட்டுக்கு வந்தேன். எங்கே போனாய் என்று கேட்டார். உன்னிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினேன். அதைத் தொடர்ந்து என்னை அடித்து விட்டார். அப்பொழுது நான் அவரிடம் என்னை அடித்துள்ளாய். நான் போலீஸ் நிலையம் செல்கிறேன் என்று கூறினேன். அவள் முந்திக் கொண்டு சென்று என் மீது புகார் கொடுத்துள்ளார் என்றார்.

நடிப்பு வேறு, நிஜவாழ்க்கை வேறு

நடிப்பு வேறு, நிஜவாழ்க்கை வேறு

கேள்வி: சக்தி சீரியலில் நீங்கள் சக்தியை அடிப்பீர்கள். ஆனால் நிஜவாழ்க்கையில்....

பதில்: நடிப்பு என்பது வேறு, நிஜ வாழ்க்கை என்பது வேறு. நிஜ வாழ்க்கையில் என்னை திவ்யா அடித்துள்ளார். சட்டம் பெண்களுக்கு சாதகமாக தான் உள்ளது. ஆண்கள் பெண்களை அடித்தால் வழக்கு பதிவாகிறது. ஆனால் பெண்கள் ஆண்களை அடித்தால் விடுங்கள் என்று சாதாரணமாக கூறி விடுகிறார்கள். பெண்ணிடம் காட்டுவது வீரம் இல்லை என்றார்.

சட்டம் யாருக்கு?

சட்டம் யாருக்கு?

கேள்வி: சட்டம் ஆண்களுக்கு எதிராக உள்ளது என்று கருதுகிறீர்களா?

பதில்: சட்டம் ஆண்களுக்கு எதிரானது என்று கூறவில்லை. எல்லா விஷயத்திலும் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். மேலும் பெண்கள் என்றால் ஒரு இரக்கக்குணத்துடன் பார்ப்பார்கள். ஆண்கள் என்றால் அவனுக்கு வாழ்வதற்கு வழிகள் நிறைய இருக்கிறது. பெண்களுக்கான பாதுகாப்பும், அவர்கள் வாழ்வதற்கான வழிகளையும் தான் பார்க்கிறார்கள். சட்டங்கள் பெரும்பாலும் பெண்களுக்கு சாதகமாக தான் உள்ளது. .

என்னிடம் ஆதாரம் உள்ளன

என்னிடம் ஆதாரம் உள்ளன

கேள்வி: நடிகை திவ்யா, கே.எம்.சி.மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளது குறித்து...

பதில்: நான் 4ம் தேதி அவரை அடித்ததாக கூறும் அவர், 5ம் தேதி மாலையில் ஏன் போலீசில் புகார் கொடுக்க வேண்டும். ஏன் 4ம் தேதி புகார் கொடுக்கவில்லை. நான் 5ம் தேதி சம்பவ இடத்தில் இல்லை என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. வழக்கறிஞர்கள் மற்றும் சிலரின் தூண்டுதலின்பேரில் 4ம் தேதி நான் அடித்ததாக புகார் அளித்துள்ளார். மேலும் நான் அவரை எங்கும் அழைத்து செல்லவில்லை என்று கூறுவதில் பொய் உள்ளது. ஏனென்றால் அவரை ஓட்டலுக்கு அழைத்து சென்று சாப்பிட்டது முதல் அனைத்தும் தேதியுடன் கூடிய ஆதாரங்கள் என்னிடம் உள்ளன என்றார்.

சகஜமாக பழக முடியாது

சகஜமாக பழக முடியாது

கேள்வி: இந்த பிரச்னைக்கு நடிகை அன்ஷிதா தான் காரணம் என்று கூறுகிறீர்களே? அது உண்மையா?

பதில்: நடிகை அன்ஷிதா எனக்கு நல்ல ப்ரண்ட். அவருக்கு மலையாள இன்டஸ்டரியில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். பொதுவாக நாம் எல்லோரிடமும் சகஜமாக பழக முடியாது. குறிப்பிட்ட சில பேரிடம் மட்டும் தான் பழக முடியும். இந்த பிரச்னைக்கு அன்ஷிதா காரணமில்லை. திவ்யா குடும்பத்தில் உள்ளவர்களும் வேறு சிலரும் தான் இந்த பிரச்னைக்கு காரணமாக உள்ளனர். திவ்யாவை யாராவது மூளைச்சலவை செய்கிறார்களா? காசுக்காக ஏதாவது வேலை செய்கிறார்களா? என்னை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகிறாளா என்று எனக்கு தெரியவில்லை.

என்னை அசிங்கப்படுத்தி விட்டார்

என்னை அசிங்கப்படுத்தி விட்டார்

கேள்வி: உங்கள் திருமணம் எப்பொழுது நடைபெற்றது?

பதில்: எனது திருமணம் ஜூன் 24ம் தேதி நடைபெற்றது. ரிஜிஸ்ட்ர் திருமணம் 27ம் தேதி நடைபெற்றது. எனக்கும், அவருக்கும் நடைபெற்ற திருமண நிகழ்விற்கு எனது அப்பா முதலில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மூன்று மாதங்கள் கழித்து, அதாவது அக்டோபர் மாதத்தில் இரு வீட்டாரும் கலந்து பேசி பின்னர் திருமணம் செய்து வைப்பதாக தெரிவித்தார். ஆனால் திவ்யா தான் கேட்காமல், விரைவாக திருமணம் செய்ய வேண்டும் என்றார். நானும் எனது அப்பாவிடம், அவர்கள் ரிஜிஸ்ட்ர் திருமணத்திற்கு பணம் செலுத்தி விட்டதாகவும் அது வீணாகி விடும் என்று கூறினேன். பணம் போனால் போகட்டும், சம்பாதித்துக் கொள்ளலாம் என்று எனது அப்பா தெரிவித்தார். இருந்தபோதும் திவ்யாவை அவரது விருப்பப்படி, திருமணத்தை இந்து முறைப்படி கோவிலில் வைத்து தாலி கட்டினேன். நான் அவளிடம் கேட்டுகொண்டது ஒன்று தான். இது தொடர்பான போட்டோவை மட்டும் தயவு செய்து சிறிது காலத்திற்கு அப்பாவிற்கு தெரியப்படுத்த வேண்டாம் என்றேன். ஆனால் அவற்றை வெளியிட்டு என்னை அசிங்கப்படுத்தி விட்டார் என்றார்.

இணைந்து வாழ விருப்பம்

கேள்வி: நீங்கள் கருக்கலைப்புக்கு தூண்டியதாக கூறுகிறீர்களே? அது உண்மையா?

பதில்: நானும் அவளும் ஒரே வீட்டில் தான் இருக்கிறோம். மன விருப்பத்துடன் பேசிக் கொள்வதில்லை. ஒரே வீட்டில் வேறு அறையில் தான் வசித்து வருகிறோம். நான் குழந்தை கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால், நான் தானே கே.எம்.சி. அழைத்து சென்றிருக்க வேண்டும். ஆனால் நான் அடித்ததாக கூறி கே.எம்.சி.யில் அவர் சிகிச்சை பெற்றுள்ளார். எனக்கு ஒரு சந்தேகம் என்னவென்றால், திவ்யா கருவை கலைப்பதற்கான செயலில் இறங்கியிருப்பதாக தோன்றுகிறது. இதனடிப்படையில் தான் நான் எனது வழக்கறிஞருடன் ஆலோசித்த, ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் எனது குழந்தையின் பாதுகாப்பு கருதி புகார் கொடுத்தேன் என்றார். மேலும் அவர் கூறுகையில், என்னை பொறுத்தவரை எனது குழந்தைக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படக்கூடாது. அவருடன் இணைந்து வாழவே எனக்கு விருப்பம். காலங்கள் மாறும்போது அவளை சுற்றியுள்ள சிலர் விலகிவிடுவார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது. இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://www.youtube.com/watch?v=py7_s21mXl0 இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X