நான் கர்நாடகாவுல பிறந்தாலும் கேரளா பொண்ணு.. சின்னத்திரை நடிகை கீர்த்தனா பொதுவாலின் ஜாலி பேட்டி!
சென்னை: சின்னத்திரை நடிகை கீர்த்தனா பொதுவாலின் செம க்யூட்டான ஜாலியான பேட்டி வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Recommended Video
நடிகர் அமித் பார்கவ்வின் புதிய சீரியலான திருமதி ஹிட்லர் சீரியலில் ஹாசினி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கீர்த்தனா பொதுவால்.
தனது சொந்த ஊர், கலைத் துறை பயணம் மற்றும் புது சீரியல் அனுபவம் என ஏகப்பட்ட விஷயங்களை நம்முடன் பகிர்ந்துள்ளார்.

கேரளா பொண்ணு
கர்நாடகாவில் பிறந்தாலும், தான் வளர்ந்தது முழுவதும் கேரளா என்றும், தான் ஒரு கேரளத்து பெண்குட்டி என கொஞ்சும் தமிழில் கீர்த்தனா பேசும் ஜாலி பேட்டி நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டில் வெளியாகி உள்ளது. இந்த சீரியலில் சின்ன பெண்ணான இவர், சற்றே வயதான ஹீரோவை திருமணம் செய்து கொள்ளும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அதிக வயது கணவர்
நிஜ வாழ்க்கையில் அப்படி ஒரு வேளை உங்களுக்கு வரன் வந்தா ஓகே சொல்வீங்களா என்ற கேள்விக்கு உடனே மாட்டேன் என பதில் சொன்ன கீர்த்தனா, அடுத்து தனது கதாபாத்திரத்தை மனதில் கொண்டு, வயது ஒரு பெரிய விஷயமே இல்லைங்க, மனசுக்கு புடிச்சிட்டா, எந்த வயசா இருந்தாலும் கல்யாணம் பண்ணிக்கலாம்ங்க என சமாளிஃபிகேஷனாக பேசி உள்ளார்.

மலையாள திரைப்படத்தில்
2014ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான வெள்ளக்குப்பாயம் படத்தில் அறிமுகமானார் கீர்த்தனா. அந்த படத்தை இயக்குநர் ரமீஸ் நந்தி இயக்கி இருந்தார். அதன் பிறகு கன்னட திரையுலகில் அஞ்சு மஞ்சுவின் லவ் ஸ்டோரி படத்திலும் அறிமுகமான இவர், தமிழில் ஏற்கனவே சன் டிவியில் வெளியான கங்கா சீரியலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நோட்டாவுக்கு ஓட்டு
ஆரஞ்சு கலர் நிற உடையணிந்து இருக்கும் நீங்கள் பாஜகவில் சேர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, நான் முதல் தடவை ஓட்டுப் போட்டதே நோட்டாவுக்குத்தான் என்கிற ரகசியத்தையும் சொல்லிவிட்டு, ப்ளீஸ் யார் கிட்டயும் சொல்லிடாதீங்க என கொஞ்சி பேசும் இளைஞர்களின் லேட்டஸ்ட் கனவுக் கன்னி கீர்த்தனா பொதுவாலின் பேட்டியை மிஸ் பண்ணிடாதீங்க!


Click it and Unblock the Notifications











