எந்த ஒரு பிரச்சனையிலும் சிக்காமல் இருக்க இது தான் காரணம்.. நடிகை ஐஸ்வர்யா மேனன் பகிர்ந்த டிப்ஸ்!
சென்னை: எனது உடன் பிறந்த அண்ணனை தவிர, மற்றவர்களை அண்ணன்களாக பார்க்க எனக்கு விருப்பமில்லை என்று நடிகை ஐஸ்வர்யா மேனன் கூறியுள்ளார்.
ஏவிஎம் தயாரிப்பில் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய், நடிகைகள் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள வெப் தொடர் தமிழ் ராக்கர்ஸ். இது சோனி லைவ் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இதில் முக்கிய கதாபாத்திரங்களில் எம்.எஸ்.பாஸ்கர், அழகம்பெருமாள் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த வெப் தொடர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா மேனன் நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

அருமையான லவ் ஸ்டோரி
கேள்வி: நீங்கள் நடித்துள்ள தமிழ் ராக்கர்ஸ் குறித்து நீங்கள் கூற விரும்புவது?
பதில்: தமிழ் ராக்கர்ஸ் வெப் தொடரில் கீர்த்தனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நடிகர் அருண்விஜய்க்கும் எனக்கும் இடையே நடைபெறும் அருமையான லவ் ஸ்டோரி இதில் உள்ளது. குறைந்த நாட்கள் மட்டுமே இப்படத்தில் நடித்துள்ளேன். எனது கதாபாத்திரம் தொடர்பான படப்பிடிப்பு, சென்னையில் மட்டுமே நடந்தது. அவுட்டோர் ஷூட்டிங் எதுவும் கிடையாது. என்னுடைய கதாபாத்திரத்திற்கும், மற்றொரு நடிகையான வாணிபோஜனுக்கும் தொடர்பில்லை. இதுவரை தமிழ் ராக்கர்ஸில் நான் டவுன்லோடு செய்து படம் பார்த்தது கிடையாது. ஆனால் எனது நண்பர்கள் படம் டவுன்லோடு செய்து பார்ப்பார்கள். அவர் கொடுத்த படத்தை நான் பார்த்து இருக்கிறேன் என்றார்.

கிராமத்து பெண்
கேள்வி: தமிழ், தெலுங்கு சினிமா இன்ட்ஸ்ட்ரியலில் உங்களுக்கு பிடித்தது?
பதில்: எனக்கு இரண்டு இன்டஸ்டரியையும் ரொம்ப பிடிக்கும். எல்லோரும் என்னை பாலிவுட் நடிகை அமிஷா பட்டேல் மாதிரி இருக்கிறேன் என்று கூறுகிறார்கள். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் எனக்கு ஹிருத்திக் ரோஷனை ரொம்ப பிடிக்கும். உண்மையாக சொல்லப்போனால் தமிழில் எனக்கு இன்னும் சரியான கதாபாத்திரம் அமையவில்லை. தெலுங்கில் நல்ல கதாபாத்திரங்கள் அமைந்துள்ளது. 2022ம் ஆண்டு எனக்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது. இதுவரை 2 படங்கள் மட்டுமே ரீலிசாகி விட்டது. தற்போது 4 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறேன். நான் நடித்துள்ள ஸ்பை படத்தில் எனது பெயரிலேயே கதாபாத்திரம் அமைந்துள்ளது. மேலும் நான் நடித்துள்ள தெலுங்கு படங்களில் ப்ரோமோஷன் பாடல் குத்து பாடலாக அமைந்துள்ளது. மற்ற பாடல்கள் அனைத்தும் காதல் பாடல்களாகவே அமைந்துள்ளது என்றார். நடிகை ஐஸ்வர்யா மேனன் என்றால் நகரத்து பெண் கதாபாத்திரத்திற்கு மட்டுமே பொருத்தமானவர் என்ற கருத்தை உடைக்கும் விதமாக வலிமை பட வில்லன் நடிகர் கார்த்திகேயா நடிக்கும் படத்தில் கிராமத்து பெண்ணாக வித்தியாசமாக நடித்துள்ளேன் என்றார்.

வெள்ளை நிறம் பிடிக்கும்
கேள்வி: உங்களுக்கு பிடித்த நடிகர், கேமராமேன் யார்?
பதில்: நான் நடிகர்கள் ஹிப்பாப் ஆதி, அசோக் செல்வன், அருண் விஜய் ஆகியோருடன் நடித்துள்ளேன். அனைவரையும் எனக்கு பிடிக்கும். என்னை அழகாக காட்டக்கூடிய எல்லா கேமராமேனையும் பிடிக்கும். எனக்கு வெள்ளை நிறம் பிடிக்கும். ப்ரிதம், இர்ஷத் ஆகிய போட்டோகிராபரை எனக்கு ரொம்ப பிடிக்கும். கேமராமேன் செந்திலையும் பிடிக்கும் என்றார்.

2 மணி நேரம் ஒர்க் அவுட்
கேள்வி: உங்களை பற்றி கிசுகிசுக்கள் வருவதில்லை?
பதில்: எனக்கு சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்க பிடிக்கும். ரீல்ஸ் பார்ப்பதும் ரொம்ப பிடிக்கும். நான் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் வீட்டில் எனது அம்மா, அப்பா மற்றும் நாய்க்குட்டியுடன் இருப்பதால் எந்தவிதமான கிசுகிசுக்களிலும் சிக்குவதில்லை. என்னுடைய நண்பர்கள் கூட வெளியே அழைத்தால் செல்வதில்லை. அவர்கள் தான் என்னை வீட்டில் வந்து பார்ப்பார்கள் என்றார். தொடர்ந்து பட வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. சந்தோஷமாக இருக்கிறேன். தினமும் 2 மணி நேரம் ஒர்க் அவுட் மற்றும் தியானமும் செய்வேன் என்றார்.

அழ வைக்க விரும்பவில்லை
கேள்வி: சமீபத்தில் நீங்கள் யாருக்கு ராக்கி கட்டியுள்ளீர்கள்?
பதில்: சென்னையில் எனக்கென்று எந்தவொரு பேவரைட் இடமும் கிடையாது. நான் யாருக்கும் ராக்கி கட்டுவதும் கிடையாது. ஏன் எல்லோரும் அண்ணனாக தான் இருக்க வேண்டுமா? நண்பராக இருக்கக்கூடாதா? என்னுடைய உடன் பிறந்த அண்ணன் அபிஷேக் ஆஸ்திரேலியாவில் டாக்டராக இருக்கிறார். மற்றவர்களுக்கு ராக்கி கட்டி அவர்களை அழ வைக்க நான் விரும்பவில்லை. எல்லோரும் எனக்கு நண்பராக இருப்பதை விரும்புகிறேன். யாராவது என்னிடம் ராக்கி கட்டிக் கொள்ள விருப்பப்பட்டால் நான் தயாராக இருக்கிறேன் என்றார்.
டைரி எழுதும் பழக்கம்
கேள்வி: உங்களுடைய லட்சியம் என்ன?
பதில்: வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். எனக்கு வருகின்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறேன். தற்போது வரை ஸ்கிரிப்ட் மட்டுமே கேட்டு வருகிறேன்; ஸ்கிரிப்ட்டை படிப்பதில்லை. வரும் காலங்களில் ஸ்கிரிப்ட் படிக்கும் பழக்கத்தை உருவாக்கி கொள்ள விரும்புகிறேன். அதிகமான படங்களில் நடிப்பது முக்கியமில்லை. எனது கதாபாத்திரம் மக்களிடம் பேசும் படமாக அமையவேண்டும் என்பது மட்டும் தான் என் நோக்கம் என்றார். மேலும் அவர் கூறுகையில், எனக்கு டைரி எழுதும் பழக்கம் கிடையாது. என்னை பொறுத்தவரை எல்லோரையும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும். எல்லோரிடமும் அன்பாக பழக வேண்டும். யாருக்காவது என்னை பிடிக்கவில்லை என்றால், அவர்களிடமிருந்து நான் விலகி சென்று விடுவேன் என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலில் https://youtu.be/jSWNN4e0xnw இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா மேனன் மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.


Click it and Unblock the Notifications











