நான் தாடியுடன் இருக்க இது தான் காரணம்.. தாடிக்கு விளக்கம் கொடுக்கும் கிராமத்து நாயகன் சசிகுமார்!
சென்னை: செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடித்துள்ள படம் நான் மிருகமாய் மாற. இந்த படத்தின் பர்ஸ்ட், டீசர் ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
கன்னட திரைப்பட நடிகை ஹரிப்பிரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ரத்தம் உறைய வைக்கும் கொலை குற்றவாளியாகவும், சைக்கோ வில்லனாகவும் நடிகர் விக்ராந்த் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் சசிகுமார் நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

ஆந்திரா படங்களில் சமுத்திரகனி
கேள்வி: தற்போது நீங்கள் உங்கள் செல்போனில் வைத்துள்ள ரிங்டோன் என்ன?
பதில்: 10 வருடங்களுக்கு முன்னால் ரிங்டோன் வைத்திருந்தேன். நானும், சமுத்திரக்கனியும் ஒரே மாதிரியான ரிங்டோன் வைத்திருந்தோம். படப்பிடிப்பின் போது, நாம் அனைவரிடமும் செல்போனை சைலண்ட்டாக வைக்க சொல்லுவோம். அதை நாம் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே நான் தற்போது ரிங்டோன் வைப்பதில்லை என்றார். மேலும் அவர் கூறுகையில், நடிகர் சமுத்திரக்கனி ஆந்திரா படங்களில் அதிகம் நடித்து வருவதால், எனது படத்தில் நடிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றார்.

புதுமாதிரியாக பார்ப்பார்கள்
கேள்வி: பொன்னியின்செல்வன் 2ல் நீங்கள் நடிக்கிறீர்களா?
பதில்: என்னை எல்லோரும் தாடியுடன் பார்த்து பழகிவிட்டனர். தற்போது தாடி எடுத்தால் மட்டும் புதுமாதிரியாக பார்ப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் எனது குழந்தை பிறந்ததிலிருந்து என்னை தாடியோடு தான் பார்த்து வருகிறது. இந்த தாடியானது பொன்னியின் செல்வன் பகுதி 2க்கு அல்ல. வேறொரு படத்துக்காக வைத்துள்ளேன் என்றார்.

மிரட்டல்
கேள்வி: இசையமைப்பாளர் ஜிப்ரான் குறித்து நீங்கள் கூற விரும்புவது?
பதில்: நான் மிருகமாய் மாற படத்தில் பாடல்கள் இல்லாததாலும், ஆக்ஷன் கதை என்பதாலும், ஜிப்ரான் இசையில் மிரட்டியுள்ளார். சவுண்ட் எஃபெக்ட் அருமையாக வந்துள்ளது என்றார். மேலும் தானும், சமுத்திரக்கனி, பாண்டியராஜ் ஆகியோர் வம்சம் படத்தில் சுவடு, சுவடு என்ற பாடலை பாடியுள்ளோம். பாடியுள்ளோம் என்று கூறுவதைவிட கத்தியுள்ளோம் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.

ரொம்ப சந்தோஷம்
கேள்வி: இனிவரும் காலங்களில் ரஜினி, கமலுடன் இணைந்து நடிப்பீர்களா?
பதில்: எனக்கு பேட்ட படத்தில் நடிகர் ரஜினியுடன் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. பேட்ட படத்தில் நடித்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நடிகர் ரஜினி, கமலஹாசன் ஆகியோரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர்கள் படங்களில் சின்ன கதாபாத்திரங்கள் கிடைத்தாலும் சந்தோஷமாக நடிப்பேன் என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://www.youtube.com/watch?v=Hse7AN1IVGw இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.


Click it and Unblock the Notifications