விமர்சனத்துக்கு காசு.. இன்ப்ளூயன்சர்களுக்கு இத்தனை லட்சம் செலவு.. தடுமாறிய தக் லைஃப்.. கோடங்கி பேட்டி!
சென்னை: விமர்சனங்களால் புதிய படங்கள் தோல்வியை தழுவுவதாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை தான் மறுப்பதாக மூத்த பத்திரிகையாளர் கோடங்கி தமிழ் பிலிமிபீஇட்டுக்கு அளித்த பேட்டியில் பளிச்சென கூறியுள்ளார். மேலும், தக் லைஃப் திரைப்படத்துக்காக இன்ஃப்ளூயன்சர்களுக்கு செய்த செலவு மொத்தமும் வேஸ்ட் தான் என்றும் அவர்கள் வாங்கிய பணத்துக்கு தற்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள் எனக் கூறியுள்ளார்.
ராஜ்கமல் சார்பில் ஒரு படம் தயாரிக்கப்படுகிறது என்றாலே ரசிகர்கள் அந்த படத்தை நம்பிப் போய் பார்ப்பது வழக்கமாக உள்ளது. விக்ரம், அமரன் படங்களை தொடர்ந்து கமல்ஹாசனின் தக் லைஃப் படத்துக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், படம் வெளியான பின்னர், பொதுமக்களும், ரசிகர்களுமே படத்தை கழுவி ஊற்ற ஆரம்பித்த நிலையில், பாக்ஸ் ஆபீஸில் பலத்த அடி வாங்கியுள்ளது. ஒரு படத்தின் வெற்றி மற்றும் தோல்வியை விமர்சகர்கள் முடிவு செய்வதில்லை என்றும் நல்ல கதை மற்றும் இயக்கம் தான் முடிவு செய்யும் என்று கோடங்கி தனது கருத்தை முன் வைத்துள்ளார்.
98 லட்சம் செலவு: தக் லைஃப் திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாக இன்ஃப்ளூயன்சர்களை அழைத்துக் கொண்டு போய் மகாபலிபுரத்தில் ஒரு ரெசார்ட்டில் பார்ட்டி வைத்தனர். அதற்கு 98 லட்சம் வரை செலவு செய்யப்பட்டது. ஆனால், அவர்களால் படத்தை ஓட வைக்க முடியவில்லை. தயாரிப்பாளர்கள் தேவையில்லாமல் புரமோஷனுக்கு அதிக பணத்தை செலவு செய்கின்றனர் எனக் கூறியுள்ளார். படம் வெளியாவதற்கு முன்பே இன்ஃப்ளூயன்சர்கள் படத்தை புரமோட் செய்திருந்தால் கூட பரவாயில்லை. படம் வெளியாகி 3 நாட்களாக நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து ஓடாத நிலை உருவான நிலையில், அவர்கள் வீடியோ போட்டு வருவது வேடிக்கை என்றார்.
காசுக்கு விமர்சனம்: கடந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் பெயிட் ரிவ்யூ குறித்த பேச்சுக்கள் அடிபட்டன. பிரசாந்த் ரங்கசாமி உள்ளிட்ட விமர்சகர்கள் விமர்சனத்தால் சினிமா அழியவில்லை என பேசினர். எதிர்தரப்பினர் விமர்சனங்கள் தான் சினிமாவை அழிக்கின்றன என்றனர். அதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்த கோடங்கி, நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு மோசமான விமர்சனங்கள் கொடுத்தாலும், அந்த படங்கள் ஓடும். மோசமான படங்களுக்கு முழுக்க முழுக்க பணம் வாங்கிக் கொண்டு பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்தாலும் அந்த படம் ஓடவே ஒடாது என்றார். மேலும், அந்த விவாதமே அவர்கள் டிஆர்பிக்காகத் தான் என்றும் இன்றைய ஸ்மார்ட்போன் காலக்கட்டத்தில் படம் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே ட்விட்டர் ரிவ்யூ என பொதுமக்களே விமர்சனம் போட்டு படம் நல்லா இருந்தால், வந்து பார்க்க சொல்கின்றனர். இல்லை என்றால், மச்சான் வந்துடாதே, டிக்கெட்டை கேன்சல் பண்ணிடுன்னு சொல்லிடுறாங்க என எதார்த்தத்தை பேசியுள்ளார்.
லெஜண்டுகள் இருந்தும் வீண்: மணிரத்னம் ஒரு லெஜண்ட், கமல்ஹாசன் ஒரு லெஜண்ட், ஏ.ஆர். ரஹ்மான் இசைப்புயல், லிட்டி சூப்பர் ஸ்டார் இப்போ யங் சூப்பர் ஸ்டாராக மாறியுள்ள சிம்பு, கனவுக்கன்னி த்ரிஷா, நடிப்பு அரசர் நாசர் என இத்தனை லெஜண்டுகள் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக ஒரு படத்தில் பணியாற்றியும் கதை என்னவென்றே தெரியாத படத்தில் பயணம் செய்தார்களா எங்கே பிரச்னை நடந்தது என்பது தான் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











