இயக்குநர் அவதாரம் எடுத்த பிரபல நடிகர்.. கொரோனாவால் தள்ளிப் போன ‘டிக்கெட்’ ரிலீஸ்.. ராகவ் பேட்டி!
சென்னை: ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, எந்திரன், நஞ்சுபுரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் ராகவ் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.
நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு இந்த லாக் டவுன் நேரத்தில் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
சின்னத்திரை மற்றும் சினிமாவில் நடிகராக வலம் வந்த ராகவ் கடந்த 2017ம் ஆண்டு டிக்கெட் எனும் படத்தை இயக்கி இயக்குநராகி உள்ளார்.

ஓரினச் சேர்க்கையை மையமாக வைத்து ராகவ் இயக்கிய டிக்கெட் படம் லண்டன் இந்திய பிலிம் ஃபெஸ்டிவலுக்கு தேர்வு செய்யப்பட்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
டிக்கெட் படத்தை நம்ம ஊரில் ரிலீஸ் பண்ணும் முயற்சியில் ஈடுபட்டிருந்த நடிகர் ராகவிற்கு இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு, டிக்கெட் படத்தின் ரிலீஸை இன்னும் கொஞ்சம் காலம் தள்ளிப் போட்டு இருக்கிறது.
இயக்கத்தை தாண்டி இசையிலும் தனக்கு இருக்கும் ஆர்வத்தை ராகவ் வெளிப்படுத்தி உள்ளார். அவரது முழு வீடியோவை கண்டு ரசிக்க லிங்க்கை கிளிக் செய்யுங்க..


Click it and Unblock the Notifications











