என்னத்த பாராட்டினாலும் லால் சலாம் ஓடாது.. எப்படி கழுவி ஊத்தினாலும் கூலி.. திருப்பூர் சுப்ரமணியம்!
சென்னை: விமர்சனத்தால் படங்கள் ஓடவும் செய்யாது, ஃபிளாப்பும் ஆகாது, எல்லாமே மவுத் டாக் மூலமாகத்தான் நடப்பதாக வெளிப்படையாக பேசியுள்ளார் திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம்.
தமிழ் சினிமாவை அழிப்பது ஹீரோக்களா? தயாரிப்பாளர்களா? விமர்சகர்களா? என ஏகப்பட்ட கேள்விகளுடன் டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் நடைபெற்ற கலந்துரையாடலில் இயக்குநர் செல்வமணி, திருப்பூர் சுப்ரமணியம், தனஞ்செயன், சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட பலர் பங்கேற்று பல விஷயங்களை செம ஓபனாக விவாதித்துள்ளனர்.

100 கோடி, 200 கோடி என ஹீரோக்களின் சம்பளம் மூலமாக 70 சதவீதம் தயாரிப்பு செலவு சம்பளத்துக்கே சென்றுவிடுகிறது. மீதமுள்ள 30 சதவீதத்தில் படங்களை எடுத்தால் அதன் தரம் சுமாராகத்தான் இருக்கும் எனக்கூறிய திருப்பூர் சுப்ரமணியம் விமர்சகர்கள் பற்றியும் பேசியுள்ளார்.
விமர்சனம் தேவை: சுரேஷ் காமாட்சி பேசும் போது, ஒட்டுமொத்தமாக விமர்சனத்தையே ஒழித்து விட முடியாது. சில படங்களுக்கு விமர்சனம் சொல்லவில்லை என்றால், அதற்கு கூட அந்த படங்கள் தகுதியானவை கிடையாதா? என்கிற எண்ணம் வரும் என்றார். பெரிய நடிகர்கள் படங்களுக்கு விமர்சனம் செய்தால், விமர்சகர்களுக்கு யூடியூபில் வியூஸ் வரும். அதுவே அவர்கள் சின்ன படங்களை பாராட்டி பேசினாலும் யாரும் கண்டுக்கொள்ள மாட்டார்கள், ரசிகர்களே வன்ம குடோனாகத்தான் இருக்கின்றனர் என கேபிள் சங்கர் பேசியுள்ளார்.

குட் பேட் அக்லி, கூலிக்கும் மோசமான விமர்சனங்கள்: நெகட்டிவ் விமர்சனங்கள் சொன்ன பல படங்கள் நல்லா ஓடிருக்கின்றன. ராட்சசன், ஜெயிலர் படங்களுக்கே நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தன. ஆனால், அந்த படங்கள் நல்லா ஓடின. இந்த ஆண்டு வெளியான விடாமுயற்சி படத்துக்கு என்னதான் பாராட்டி பேசினாலும் படம் ஓடாது. குட் பேட் அக்லி படத்திற்கும் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தன. ஆனால், படம் நல்ல வசூல் தான். கூலி படத்துக்கும் மோசமான விமர்சனங்கள் குவிந்தன. ஆனால், முதல் 4 நாட்கள் வேறலெவல் வசூலை அந்த படம் அள்ளிவிட்டது எனக் கூறிய திருப்பூர் சுப்ரமணியம் கூலியை எப்படி விமர்சித்தாலும் காலி பண்ண முடியாது. இதுவே ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் படத்தை எப்படி பாராட்டி விமர்சனம் சொன்னாலும் அந்த படம் ஓடவே ஓடாது என ஓபனாக போட்டு உடைத்து விட்டார்.
ஒரு சில நடிகர்களுக்கு மட்டுமே ஓபனிங்: தமிழ் சினிமாவில் டயர் 1 நடிகர்கள் ஒரு சிலர் மட்டும் தான். அவர்களின் படங்களுக்கு மட்டும் தான் ஓபனிங் இருக்கு. விஜய் சேதுபதி நடித்த தலைவன் தலைவி படத்துக்கு கூட பெரிதாக ஓபனிங் இல்லை. அதற்கு முன் அவர் நடிப்பில் வெளியான ஏஸ் படம் படுதோல்வியை சந்தித்தது. தலைவன் தலைவி படத்தை பார்த்துவிட்டு, படம் சூப்பராக இருக்கு, குடும்பம் குடும்பமாக பார்க்கலாம்னு போடுறான், நைட் ஷோ எல்லாம் ஹவுஸ்ஃபுல் ஆகிவிட்டது. 3 வாரங்கள் அந்த படம் செம சூப்பராக ஓடி 100 கோடி வசூல் செஞ்சிருக்கு, மவுத் டாக் ரொம்ப முக்கியம் என்றும் சில விமர்சகர்கள் வன்மத்தை விதைத்தாலும், ரசிகர்கள் அதைத்தாண்டி பலதரப்பட்ட மக்கள் ஒரு படத்தை கொண்டாடுகிறார்களா? இல்லையா என்பதை பார்த்து தான் தியேட்டருக்கு வருகின்றனர் என பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











