குட் பேட் அக்லி தயாரிப்பாளருக்கு நஷ்டமா?.. நடிகர்கள் தான் காரணம்.. திருப்பூர் சுப்பிரமணியம் பகீர்!
சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த குட் பேட் அக்லி படம் தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டத்தை கொடுத்ததாக சினிமா வட்டாரத்தில் பேசிக் கொள்கின்றனர் என திருப்பூர் சுப்பிரமணியம் பேசியிருப்பது அஜித் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் அஜித் குமார் நடித்த படங்களிலேயே அதிக வசூலை ஈட்டிய படமாகவே குட் பேட் அக்லி படம் தான் கருதப்படுகிறது.
இந்நிலையில், அந்த படமே தயாரிப்பாளருக்கு லாபத்தைக் கொடுக்கவில்லை என்று கூறுவது பரபரப்பை கிளப்பியுள்ளது. மேலும், சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் முதல் நாளான மே 1ம் தேதி மட்டுமே ஓடியது. அடுத்த நாளில் இருந்து தமிழ்நாட்டில் சசி குமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி படம் தான் பல தியேட்டர்களை ஆக்கிரமித்து இன்னமும் நல்லா ஓடிட்டு இருக்கு என பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவை கெடுத்து வருவதே முன்னணி ஹீரோக்கள் என சொல்லப்படும் அத்தனை நடிகர்களும் தான் என்றும் எல்லாருக்கும் மனசுல எம்ஜிஆர்னு நினைப்பு, அவரை போலவே அனைத்து துறையிலும் ஈடுபட்டு படங்களை ஓடவிடாமல் செய்கின்றனர் என திருப்பூர் சுப்பிரமணியம் காட்டமாக பேசியுள்ளார்.
சிவாஜி எதுவுமே கண்டுக்கமாட்டார்: எம்ஜிஆர் ஹீரோவாக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் அசத்தியுள்ளார். அவர் பல படங்களில் தலையீடு செய்வார் என்றும் அது படத்தை மேம்படுத்த உதவியதாகவும் கேள்விப்பட்டிருக்கேன். ஆனால், சிவாஜி கணேசன் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தாலும், எந்த படத்திலும் இயக்குநர்களை தொல்லை பண்ண மாட்டார் என்றும் முதல் மரியாதை படத்தில் எல்லாம் பாரதிராஜாவிடம் என்னை நடிக்க வைக்காமல் சும்மா இந்த பக்கம் அந்த பக்கம் நடக்க மட்டுமே சொல்றியேப்பா என்று மட்டுமே கேட்டார் என்றும் அந்தளவுக்கு இயக்குநர்களின் நடிகராக அவர் இருந்தார் என திருப்பூர் சுப்பிரமணியம் பேசியுள்ளார்.
ஹீரோக்கள் தான் டைரக்ட் பண்றாங்க: கடந்த சில ஆண்டுகளாக இயக்குநர்களை கமிட் செய்துவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோக்கள் தான் படங்களை இயக்குகின்றனர். அதனால், தான் தரமான படங்கள் வராமல் சொதப்பல் படங்களாக வருகின்றன. குடும்பஸ்தன், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்கள் சின்ன படங்கள் இல்லை, அவையெல்லாம் கன்டென்ட் படங்கள், அதுபோன்ற நல்ல படங்களில் பெரிய ஹீரோக்கள் நடித்தால் தான் மக்களின் ரசனை அதிகரிக்கும் உண்மையான வெற்றிக் கிடைக்கும். இல்லையென்றால் ஒரு நாள் அல்லது முதல் 3 நாள் ஓடினாலே 100 கோடி, 200 கோடி என உருட்ட ஆரம்பித்து விடுகின்றனர் என வெளிப்படையாக பேசியுள்ளார்.

விடாமுயற்சியை தொடர்ந்து குட் பேட் அக்லியும் நஷ்டம்: குட் பேட் அக்லி திரைப்படம் 200 கோடிக்கும் அதிகமான வசூல் ஈட்டியிருப்பதாகவும் அஜித் நத்த படத்திலேயே இந்த படம் தான் அதிக வசூல் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், அந்த படம் தயாரிப்பாளருக்கு நஷ்டம் என சினிமா வட்டாரத்தில் பேசிக் கொள்கின்றனர். குட் பேட் அக்லி நஷ்டமா என்பதை அந்த தயாரிப்பாளர் தான் சொல்ல வேண்டும். விடாமுயற்சி ஏற்கனவே பயங்கர நஷ்டமடைந்து விட்டது. முன்னணி நடிகர்கள் இயக்குநர்களுக்கு ஃப்ரீடம் கொடுக்காமல் தாங்களே ஷூட்டிங் ஸ்பாட்டில் தலையீடு செய்வதால் தான் தரமான படங்கள் வருவது கிடையாது என தனது ஆதங்கத்தை கொட்டியுள்ளார் திருப்பூர் சுப்பிரமணியம்.


Click it and Unblock the Notifications











