ரசிகர்களை ஏமாத்தாதீங்க.. குட் பேட் அக்லியைவிட விஸ்வாசம் நல்ல படம்.. திருப்பூர் சுப்ரமணியம் காட்டம்!
சென்னை: குட் பேட் அக்லி திரைப்படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கொண்டாடி வரும் நிலையில், திருப்பூர் சுப்ரமணியம் ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தமிழ் சினிமாவில் ஏற்கனவே தரமான படங்கள் வருவது குறைந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், ஃபேன் பாய் சம்பவம் என கண்டமேனிக்கு ஆதிக் ரவிச்சந்திரன் படத்தை எடுத்து வைத்துள்ளதாக கடும் விமர்சனங்கள் கிளம்பின.
ஆனால், விமர்சனங்களை கடந்து உலகளவில் இதுவரை 200 கோடி வரை குட் பேட் அக்லி படம் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், ரசிகர்களை ஏமாற்றும் வேலையை குட் பேட் அக்லி படத்தின் மூலம் பார்த்துள்ளனர் என பொங்கியுள்ளார் திருப்பூர் சுப்ரமனியம்.

ஹீரோக்களை மகிழ் விக்க தயாரிப்பாளர்கள் பல மோசடி வேலைகளை செய்து வருகின்றனர் என்றும் ரியாலிட்டி அப்படி இல்லை என்றும் அவர் தனது கருத்துக்களை முன் வைத்துள்ளார்.
உண்மையா? உருட்டா?: தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிடும் பாக்ஸ் ஆபீஸ் போஸ்டர்களில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்கிற கேள்விகளை தொடர்ந்து பலரும் எழுப்பி வருகின்றனர். எச். வினோத் போன்ற இயக்குநர்களே அதன் மீது நம்பிக்கை இல்லை என்றும் அது அழுத்தம் தருவதாகவும் பேசியுள்ளனர். வடை சுடுறாங்க என விஜய் மற்றும் அஜித் படங்களின் போஸ்டர்கள் வரும் போது இரு தரப்பு ரசிகர்களும் மாறி மாறி கலாய்த்துக் கொள்ள எதுதான் பாஸ் உண்மை என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது. பாக்ஸ் ஆபீஸ் டிராக்கர்கள் சொல்லும் வசூல் கணக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் சொல்லும் வசூல் கணக்கும் அதிகளவில் வேறுபடுவதையும் காண முடிகிறது.
ரசிகர்களை ஏமாத்தாதீங்க: குட் பேட் அக்லி திரைப்படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. படத்தை பார்த்த பலரும் கதை மற்றும் திரைக்கதை சுமார் தான் என்றும் அஜித் குமாரின் நடிப்பு மற்றும் அவரது ரெட்ரோ படங்களின் ரெஃபரன்ஸ்கள் தான் கூஸ்பம்ப்ஸ் கொடுத்தது என கூறி வருகின்றனர். ஆதிக் ரவிச்சந்திரன் எதை நினைத்து எடுத்தாரோ அதில் வெற்றிப் பெற்றாலும் தொடர்ந்து அவரது இயக்கத்தின் மீது பலரும் குற்றச்சாட்டுகளை வைத்து வருவதை காண முடிகிறது. இந்நிலையில், திருப்பூர் சுப்ரமணியம் நல்ல படத்தை எடுக்காமல் எதையோ கிண்டி வைத்து ரசிகர்களை ஏமாத்தாதீங்க என கடுமையாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
விஸ்வாசம் நல்ல வசூல்: அஜித் குமார் நடித்த படங்களிலேயே குட் பேட் அக்லி படம் தான் அதிக வசூல் எனக் கூறப்படும் நிலையில், அப்படியெல்லாம் சொல்லாதீங்க. அஜித் குமாரின் விஸ்வாசம் படமெல்லாம் நல்ல வசூல் பண்ண நல்ல படம் என்றும் திருப்பூர் சுப்ரமணியம் பேசியுள்ளார். பூமர்களுக்குத்தான் இந்த படம் பிடிக்காது என்றும் குட் பேட் அக்லி நல்ல படம் தான் என அஜித் ரசிகர்கள் அவரை பதிலுக்கு ட்ரோல் செய்து வருகின்றனர். ஆதிக் ரவிச்சந்திரனுக்கு ஆதரவு கொடுத்தால் எதிர்காலத்தில் ஒவ்வொரு இயக்குநரும் இதே போலத்தான் படங்களை எடுத்து தமிழ் சினிமாவை காலி செய்துவிடுவார்கள் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











