ஜேசன் சஞ்சய் அண்ணாவை கேள்வி கேட்டே தொல்லை பண்ணிட்டேன்.. காஞ்சனா 4.. சசிகுமார் ரீல் மகன் பேட்டி!

சென்னை: டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் ஒட்டுமொத்த திரையரங்கையும் சிரிக்க வைத்து வருவதே குழந்தை நட்சத்திரம் கமலேஷ் தான். சசிகுமார் மற்றும் சிம்ரனுக்கு டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் இளைய மகனாக நடித்து அனைவரது பாராட்டுக்களையும் அள்ளி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அடுத்தடுத்து தான் நடிக்கப் போகும் படங்கள் குறித்து பேசியுள்ளார் கமலேஷ்.

இந்த வாரம் மே 1ம் தேதி உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு சூர்யாவின் ரெட்ரோ மற்றும் சசிகுமார் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகின. மேலும், தெலுங்கில் நானி நடித்த ஹிட் 3 படமும் தமிழில் டப் செய்து வெளியானது.

Tourist Family child actor Kamalesh Jagan now acted in Jason Sanjay debut movie and Kanchana 4

சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் மற்ற படங்களை விட வசூலில் அதிகமாக கலெக்ச்ட் செய்து வெற்றிவாகை சூடி வருகிறது. ஆனால், அதே சமயம் ரசிகர்கள் மற்றும் பிரபலங்களால் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்று இந்த ஆண்டின் சிறந்த படம் என்கிற அங்கீகாரத்தையே டூரிஸ்ட் ஃபேமிலி பெற்றுள்ளது.

சசிகுமாரின் ரீல் மகன்: டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் சிம்ரன் ஒரு பக்கம் ஆல் தோட்ட பூபதி பாடலுக்கு நடனமாடி தியேட்டரில் ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் சசிகுமாருக்கு ரீல் மகனாக முள்ளி கதாபாத்திரத்தில் நடித்துள்ள கமலேஷ் ஜகன் ஒட்டுமொத்த அரங்கையும் சிரிப்பலையில் ஆழ்த்தி வருகிறார். சீரியஸான காட்சிகளை அந்த சிறுவனை வைத்து இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கிய விதம் தான் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த குழந்தை நட்சத்திரமும் கொடுத்த வேலையை நச்சென செய்து முடித்து பாராட்டுக்களை அள்ளி வருகிறார்.

யார் இந்த கமலேஷ்?: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகமப லிட்டில் சாம்ப் இசை நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டு தனது தனித்துவமான பாடும் திறமையால் பலரையும் கவர்ந்தவர் தான் கமலேஷ் ஜெகன். 2019ம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசி படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான இவர், சந்தானத்தின் பிஸ்கோத் மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

ஜேசன் சஞ்சய் படத்தில் நடிக்கிறேன்: டூரிஸ்ட் ஃபேமிலி படத்துக்கு பிறகு கமலேஷுக்கு பட வாய்ப்புகள் குவியும் என பலர் கூறினாலும், அதற்கு முன்பாகவே அவர் பிசியாகத்தான் உள்ளார் என அவரே கூறியுள்ளார். தளபதி விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகி படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த படத்தில் தானும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கமலேஷ் கூறியுள்ளார்.

Tourist Family child actor Kamalesh Jagan now acted in Jason Sanjay debut movie and Kanchana 4

ரொம்பவே பொறுமையான நபர்: ஷூட்டிங் ஸ்பாட்டில் தினமும் ஏகப்பட்ட கேள்விகளை கேட்டு ஜேசன் சஞ்சய் அண்ணாவை டார்ச்சர் பண்ணிடுவேன். ஆனால், அவர் எல்லா கேள்விக்கும் அழகாக பொறுமையாக கோபமே படாமல் சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்து வருகிறார் என கமலேஷ் கூறினார்.

காஞ்சனா 4 படத்திலும்: ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் காஞ்சனா 4 படத்திலும் கமலேஷ் ஜெகன் நடித்து வருவதாகவும் கூறியுள்ளார். டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்த்துவிட்டு மேலும், பல இயக்குநர்களும் கமலேஷை அணுகுவார்கள் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X