2025இல் அஜித் தான் டாப்.. அதுக்கு அடுத்துதான் ரஜினியே.. என்னங்க பிரபலம் இப்படி சொல்லுறாரு?
சென்னை: ஒவ்வொரு ஆண்டும் இறுதியில், இந்த ஆண்டில் அதிகம் வசூலித்த படம் எது என்ற கேள்வி திரையுலகில் இயல்பாகவே கேள்விகள் தொற்றிக் கொள்கிறது. அதில் எந்த நடிகரின் படம் டாப்பில் உள்ளது என்பது உள்ளிட்டவை என பல கோணங்களில் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டில் வெளியான படங்களில் அதிக வசூலைக் குவித்த படம் என்றால் அது அஜித் படம் தான் என்று, திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகி திருச்சி ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
அவர் அண்மையில் அளித்த பேட்டியில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது அவர் கூறும்போது, இந்த ஆண்டில் வெளியான படங்களில் வசூலில் டாப் 5 படங்கள் எது என்று கூற முடியவில்லை. ஆனால் டாப் இரண்டு படங்கள் எது என்று வேண்டுமானால் கூறுகிறேன். இந்த ஆண்டைப் பொறுத்தவரையில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படம் தான் வசூல் ரீதியாக முதல் இடத்தில் உள்ள படம். அதற்கு அடுத்த இடத்தில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கூலி படமே உள்ளது என்று தெரிவித்தார். அவரது இந்த கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அஜித்தான் டாப்: மேலும் 2025ஆம் ஆண்டின் வசூல் மன்னனாக அஜித் உருவெடுத்துள்ளார் என்றும் பேசி வருகிறார்கள். இந்த ஆண்டின் பிப்ரவரி மாதம் அஜித்தின் விடாமுயற்சி படம் வெளியானது. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதேபோல் ஏப்ரல் மாதத்தில் வெளியான குட் பேட் அக்லி படம் ரசிகர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த பக்கா கமர்ஷியல் மெட்டீரியலாக இருந்தது. இதனால் அஜித் ரசிகர்கள் பலருமே படத்தை ரிப்பீட் மோடில் தியேட்டரில் ரீ விசிட் செய்து கொண்டு இருந்தார்கள்.
கூலி: அதேபோல் இந்த ஆண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் கூலி படம் வெளியாகி மிகப்பெரிய தோல்வி படமாக மாறியது. படம் விமர்சன ரீதியாக தோல்விப் படமாக மாறியது. வசூல் ரீதியாக எப்படியான நிலையை எட்டியது என்பது குறித்து படக்குழு எதுவும் தெரிவிக்கவில்லை. அதேபோல், கமல்ஹாசனின் தக் லைஃப் படம் வெளியாகி மிகப்பெரிய டிசாஸ்டர் படமாக மாறியது. சூர்யாவின் ரெட்ரோ படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றது. வசூல் ரீதியாக ரூபாய் 100 கோடிகளைக் கடந்ததாக கூறப்படுகிறது. அதேப்போல் தனுஷ் இயக்கி நடித்திருந்த இட்லி கடை படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படமும் ரூபாய் 100 கோடிகளை வசூலித்ததாக கூறப்படுகிறது.

திருச்சி ஸ்ரீதரின் கருத்துப்படி நடிகர் அஜித் தான் 2025ஆம் ஆண்டில் கோலிவுட்டின் வசூல் மன்னன் என்ற கீரிடத்திற்கு சொந்தக்காரராக மாறியுள்ள தகவலை அஜித் ரசிகர்கள் வேகமாக பகிர்ந்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











